உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசிடம் இருந்து தகவல் கேட்பதே குற்றமா? வேலுார் இப்ராஹிம் கைதுக்கு பா.ஜ., கொதிப்பு

அரசிடம் இருந்து தகவல் கேட்பதே குற்றமா? வேலுார் இப்ராஹிம் கைதுக்கு பா.ஜ., கொதிப்பு

சென்னை: பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கைதுக்கு, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு, வேலுார் இப்ராஹிம் நேற்று முன்தினம் வந்தார். 'தமிழகத்தில் நடக்கும் கிட்னி திருட்டு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு கிட்னி திருட்டு தொடர்பான தகவல்களை, டாக்டர்களிடம் கேட்க வேண்டும்' என கூறியுள்ளார். ஆனால், மருத்துவமனைக்குள் செல்ல, அங்கிருந்த காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. ஆனாலும், டாக்டரை சந்திக்க வேண்டும் என இப்ராஹிம் கூறியதால், அவரை கைது செய்து பூக்கடை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, அவரை கடலுார் சிறையில் அடைத்தனர். வேலுார் இப்ராஹிம் கைதுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதரன் கூறியதாவது: தடை விதிப்பு அரசின் தவறுகளை மக்களிடம் அம்பலப்படுத்துவது, எதிர்க்கட்சிகளின் கடமை. வறுமையை பயன்படுத்தி ஆசை காட்டியும், ஏமாற்றியும் தமிழகத்தின் பல மருத்துவமனைகளில் கிட்னி திருட்டு நடப்பதாக செய்திகள் வருகின்றன. தமிழக அரசே, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதித்துள்ளது. இந்நிலையில், கிட்னி திருட்டு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்களிடம் தகவல்களை கேட்க, பா.ஜ., நிர்வாகி இப்ராஹிம் சென்றார். அவர் கேட்ட தகவல்களை கொடுத்திருக்கலாம். அதில் ஏதும் தயக்கம் இருந்தால், அதைச் சொல்லி தவிர்த்திருக்கலாம். ஆனால், தகவல் கேட்பதே குற்றம் என்பது போல, மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்ததோடு, அவரை கைது செய்து கடலுார் சிறையில் அடைத்துள்ளனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டவர்களை கூட, இவ்வளவு வேகமாக கைது செய்ய மாட்டார்கள். சர்வாதிகார ஆட்சியில் கூட இதுபோல நடக்காது. எனவே, வேலுார் இப்ராஹிமை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

லட்சணம்

வேலுார் இப்ராஹிம், பா.ஜ., தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலராக இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை எங்கேயும் செல்லவிடாமல் தி.மு.க., அரசு போலீஸ் வாயிலாக தொடர்ந்து தடுத்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலின் போது பிரசாரத்துக்கே அவரை செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். 'மீறி பிரசாரத்துக்கு செல்வேன்' என்று சொன்னதும், அவரை கைது செய்தனர். 'சிறுபான்மையினர் நலன் காக்கும் அரசு' என்று, வாய்க்கு வாய் சொல்லும் தி.மு.க., அரசின் சிறுபான்மையின நலன் காக்கும் லட்சணம் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ManiMurugan Murugan
செப் 10, 2025 22:54

மத்தியரசின் செயல்பாட்டை குறை க் கூறுவதாக பல பொய் களை சொல்லும் சுதந்திரம் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி இருக்கிறது என்றால் ஒரு குற்றத்தை விசாரிக்க கருத்து கேட்க மற்றவர்களுக்கு உரிமை இல்லையா இது ஒரு அரைவேக்காடு கூட்டம் அவர்களுக்கென்றால் இரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி சட்னி திருச்சியில் ஒரு அரைவேக்காடு அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை வொளம்பர மோக கட்சி திமுகா கூட்டணி கூட்டம் பொழுதுபோகாமல் ஒப்பாரி வைக்கிறது அந்தக் கூட்டத்திற்கே தெரியவில்லை தவெகா வா அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி யா என்று ஒப் பாரி க்கு பஞ்சமில்லை


lana
செப் 10, 2025 14:11

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நேரிலும் தகவல்கள் கேட்க உரிமை உண்டு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 10, 2025 09:46

சிறுபான்மையினர் நலன் ஆட்சி என்று தான் சொல்லியுள்ளார்கள். ஆனால் எந்த சிறுபான்மையினர் என்று நீங்கள் கேட்டீர்களா. கேட்டிருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். அது திமுக கட்சியின் நெருங்கிய சிறுபான்மையினர். மற்ற கட்சிகளுக்கு நெருங்கிய சிறுபான்மையினர் நலன் அரசு அல்ல.


Arul Narayanan
செப் 10, 2025 08:19

தனி ஆளாக சென்று இருந்தால் யாருக்கும் தெரியாமல் போய் தகவல் கேட்டு வந்திருக்கலாம். தகவல் தெரிந்து கொள்ள உரிமை சட்டத்தை உபயோகிக்க வேண்டியது தானே?


ஆரூர் ரங்
செப் 10, 2025 14:36

அறநிலையத்துறை நிர்வாகத்தில் லட்சம் ஏக்கர் ஆலய நிலங்களை காணவில்லை. ஆவணங்களிலுள்ள பல ஆலயங்கள் இருக்குமிடம் கூட தெரியவில்லையாம்.. RTE போட்டு பாருங்க. ஒண்ணும் கிடைக்காது. அந்த சட்டம் உளுத்துப்போன ஒன்று.


Siva Balan
செப் 10, 2025 07:48

நடப்பது திருடர்களின் ஆட்சி.


Chess Player
செப் 10, 2025 06:14

இது தான் ஜன நாயகமா ? எமெர்ஜென்சி


நிக்கோல்தாம்சன்
செப் 10, 2025 05:34

இதற்கு பெயர் அடக்குமுறை என்று யாரவது சொல்லுங்களேன் ? இதனால்தான் இன்றைய ஆட்சியாளரை சர்வாதிகாரி என்று கூறினேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை