மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு துரோகம் செய்வது யார்?
15 minutes ago
முரண்டு பிடிக்கும் பா.ம.க., முட்டி மோதும் தே.ஜ., கூட்டணி
24-Nov-2025 | 4
காங்., மாவட்ட தலைவர்கள் டிச., 9ல் மாற்றம் உறுதி
24-Nov-2025 | 2
மதுரை: 'சென்னை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை' என காங்., - எம்.பி., கார்த்தி கூறிய கருத்தால், தி.மு.க., மற்றும் காங்., தரப்பு எரிச்சல் அடைந்துள்ளன. சென்னையை அடுத்து மதுரை, கோவையில், மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான, விரிவான திட்ட அறிக்கையை, தமிழக அரசு அளித்த நிலையில், அதை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதையடுத்து, மக்கள் தொகையை காரணம் காட்டி, மெட்ரோ திட்டத்தை முடக்கி விட்டதாக பா.ஜ., மீது தி.மு.க., குற்றஞ்சாட்டி வருகிறது. இதை அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ள தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக இரு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்.,கை சேர்ந்த எம்.பி., கார்த்தி, 'சென்னையை தவிர பிற நகர்களில் மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை' என கூறியுள்ளார். இந்த கருத்து, தி.மு.க.,வை எரிச்சலடைய வைத்துள்ளது. இது குறித்து தி.மு.க.,வினர் கூறுகையில், 'தமிழகத்தை பழி வாங்கும் வகையில், மெட்ரோ திட்டங்களை மத்திய பா.ஜ., அரசு முடக்கி வைத்துள்ள நிலையில், இதை கண்டிக்க வேண்டிய முக்கிய பங்கு, தேசிய கட்சியான காங்கிரசுக்கு உள்ளது. 'பா.ஜ., எதிர்ப்பு அரசியலை, தி.மு.க., வலுவாக கையில் எடுத்துள்ள நிலையில், மெட்ரோ தேவையில்லை என கார்த்தி கூறிய கருத்து, தேவை யற்றது' என்றனர். இதுபோல, காங்., நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழக காங்., தலைவர் பதவிக்கு முயற்சி செய்து ஏமாற்றமடைந்த விரக்தியால், அவ்வப்போது இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை கார்த்தி தெரிவித்து, கட்சி மற்றும் கூட்டணிக்குள் நெருக்கடி கொடுக்கிறார். ஏற்கனவே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது காங்., சார்பில் சந்தேகம் எழுப்பும் நிலையில், 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை சொல்லக்கூடாது' என தெரிவித்தார். இது போன்று, பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்கும் வகையில், பல சமயங்களில் கருத்து கூறி வருகிறார். காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தருர் எம்.பி.,யும் இதுபோன்று கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பதோடு, பிரதமர் மோடியையும் வெளிப்படையாக பாராட்டி வருகிறார். அவரை போலவே, 'தமிழக சசி தரூராக' கார்த்தி எம்.பி., மாறி வருகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒரே வித்தியாசம், மோடியை வெளிப்படையாக கார்த்தி இன்னும் பாராட்டவில்லை; அவ்வளவுதான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
15 minutes ago
24-Nov-2025 | 4
24-Nov-2025 | 2