உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கன்னடம் வாழ்க என சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா: பா.ஜ.,

கன்னடம் வாழ்க என சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா: பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: பா.ம.க., உட்கட்சி பிரச்சனைக்கும் பா.ஜ.,விற்கும் தொடர்பில்லை என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் அவர் கூறியதாவது:

பா.ஜ.,விற்கும் பா.ம.க., உட்கட்சி பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகம் முழுதும் கோவிட் தொற்று மீண்டும் பரவி வருகிறது. அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுள்ளது.தாய் மீதும் தாய்மொழி மீதும் பற்று இருக்க வேண்டும். அதே நேரம், நடிகர் கமல், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தவிர்க்கலாம். மொழி குறித்த ஆய்வோ, தமிழ் மொழி மீதான புகழுரையோ அவரிடம் இருந்து தேவையில்லை. தமிழ் மொழி, அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழி என்பது, உலகில் அனைவருக்கும் தெரியும். அதை கமல் சொல்லித்தான், ஊருக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட முதல்வரால், தமக்கு பிரச்னை என கூறி இருக்கிறார் அவர். அது சரியான அணுகுமுறை அல்ல. ஒவ்வொரு தலைவரின் பூர்வீகத்தையும் பார்க்க நேரிட்டால் பிரச்னைகள் தான் வரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகாவில் படப்பிடிப்பில் இருந்தபோது, அவரை சந்தித்தவர்கள், 'கன்னடம் வாழ்க; தமிழ் ஒழிக' எனக் கூறும்படி சொன்னார்கள். ஆனால் ஜெயலலிதா, தன் உயிரே போனாலும் அப்படி சொல்ல மாட்டேன் என கூறினார். அப்படிப்பட்ட உறுதி மிக்கப் பெண்மணி தான் ஜெயலலிதா. அ.தி.மு.க.,வின் புதிய ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர் பட்டியலில் யார் இடம் பெறுவர் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பழனிசாமி தான் சொல்ல வேண்டும். இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஜான் குணசேகரன்
மே 31, 2025 11:23

தமிழ் வியாபாரம் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலம், உருது பற்றி பேசாமல் இருக்க வேண்டும். செய்தி வராமல் தடுக்க வேண்டும். இதுவே 200₹ உபிகளுக்கும் RSB ஊடகங்களூக்கும் இடப்பட்ட கட்டளை.


அப்பாவி
மே 31, 2025 09:54

மூணு பேர் பஞ்சம் பொழைக்க வந்தாங்க. கூட்டு சேர்ந்து பொழைச்சாங்க. கல்லா கட்டுனாங்க. முதல்வரானாங்க. மூவரும் தமிழரில்லை.


nisar ahmad
மே 31, 2025 09:41

மிஸ்டர் நாகேந்திரன் நீங்கதான் தமிழுக்கு எதிரானவர்களே நீங்க தமிழை ற்றியோ தமிழை உயர்த்தி பேசுபவர்கள் பற்றியோ பேச என்ன தகுதியிருக்கிறது நீங்க போய் உங்க ஹிந்தியை வளர்பதை பாருங்கள். தகுதியில்லாத இடத்தில் மூக்கை நுழைக்காதிர்கள்.


ஆரூர் ரங்
மே 31, 2025 11:55

அரபியில் பெயர் வைத்துக் கொண்டு ஓங்கோல் வந்தேறி அடிமைகளாக இருப்பவர்கள் தமிழரைப் பற்றி கருத்துச் சொல்லலாமா?


Haja Kuthubdeen
மே 31, 2025 14:24

தமிழை எவனும் வளர்கவோ எங்களால்தான் தமிழ் பிழைக்குதுன்னு சொல்லவோ எவனுக்குமே யோக்கியதை இல்லை..இதை சொல்லி சொல்லி அவனுங்களும் சில குடும்பமும் வளர்ந்ததுதான் மிச்சம்.தமிழ் முன்னோடி மூத்த மொழி..அது தானாகவே வளறும்.நயினார் என்றில்லை எவனுமே உரிமை கொண்டாட வேணாம்.


புரொடஸ்டர்
மே 31, 2025 08:07

தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தி வாழ்ந்த கன்னட ஜெயலலிதா மட்டும் கன்னடம் வாழ்க என சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தும் கன்னடர்கள் ரஜினிகாந்த், அர்ஜுன், மற்றும் பலர் சொல்லமாட்டார்கள்.


Haja Kuthubdeen
மே 31, 2025 14:28

பேசுறது திராவிட மாடல்...அவன் கன்னடன் இவன் மலையாளி அவன் தெலுங்கள்...இது என்ன டிசைன் உபின்னு தெரியல...


ஆரூர் ரங்
மே 31, 2025 07:43

நடந்தது? தான் ஒரு தமிழ்க் குடும்பப் பெண் என ஒரு வார இதழுக்கு பேட்டியளித்திருந்தார். கர்நாடகாவில் நடந்த படப்பிடிப்பில் கன்னட இயக்கத்தினர் உங்களது முந்தைய பேட்டியை மறுத்து நீங்கள் ஒரு கன்னடர் எனக் கூறுங்கள் என்று கட்டாயப் படுத்தினர். நான் தமிழச்சி என்பதில் எவ்வித தவறுமில்லை என உறுதியாக நின்றார்..அங்கிருந்த தமிழ்ப் பத்திரிகை அன்பர்கள் அவரைக் காப்பாற்றினர். உண்மையில் ஜெயாவின் தந்தைவழி முப்பாட்டனார் திருச்சி அருகேயுள்ள நங்கவரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தாயும் தமிழர்தான்.


Seekayyes
மே 31, 2025 05:32

சரி, எல்லோரும் பயந்நது போல மறுபடியும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி லருகிறது. நயினார் தலைமையில் கட்சி முழு மூச்சில் காணாது போய்விடும் என்பதில் சந்தேகமே இல்லை.


Haja Kuthubdeen
மே 31, 2025 16:23

தம்பிகளா வார்ரூமெல்லாம் களைத்து விட்டார்கள்...தனிநபர் புகழ்ச்சியெல்லாம் இனி எடுபடாது..கவனமா இருங்கோ..கட்சிய விட்டு தூக்கிடுவாய்ங்க


SUBBU,MADURAI
மே 31, 2025 04:37

படப்பிடிப்பில் இருந்த ஜெயலலிதாவிடம் கன்னட மொழி வெறியர்கள் கன்னடம் வாழ்க தமிழ் ஒழிக என்று சொல்லும் படி மிரட்டினார்கள். அதற்கு ஜெயலலிதா கன்னடம் வாழ்க எனச் சொல்வேன் ஆனால் தமிழ் ஒழிக என்று நான் சொல்ல மாட்டேன் என கூறினார் அதன் பிறகு படப்பிடிப்பு ரத்து செய்யப் பட்டது.


சமீபத்திய செய்தி