உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., கூட்டணிக்குள் கடமுடா : வைகோவும் கேட்கிறார் நான்கு

தி.மு.க., கூட்டணிக்குள் கடமுடா : வைகோவும் கேட்கிறார் நான்கு

தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்க, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு ஈரோடு லோக்சபா தொகுதியும், ராஜ்யசபா பதவியும் தரப்பட்டது. ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில், ம.தி.மு.க., கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். ராஜ்யசபா எம்.பி.,யாக வைகோ தேர்வு செய்யப்பட்டார்.இம்முறை, தி.மு.க.,விடம் பேச்சு நடத்த, ம.தி.மு.க., சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ம.தி.மு.க., விரும்பும் ஆறு தொகுதிகள் பட்டியலை, இந்தக் குழு தி.மு.க., தலைமையிடம் தந்துள்ளது.இதுகுறித்து, ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் டாக்டர் ரொக்கையா அறிக்கை:கடந்த 30 ஆண்டுகளாக, ம.தி.மு.க., நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நடைபயணங்களை, தமிழகத்தில் இருக்கும் பெரிய கட்சிகள் கூட இதுவரை செய்தது இல்லை. ஆனால், திட்டமிட்டு அச்சு ஊடகங்கள், 'டிவி' ஊடகங்கள் பெரிதாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.ம.தி.மு.க.,விற்கு ஒரு தொகுதி தான் என, தொடர்ந்து ஊடகங்கள் சொல்வது திட்டமிட்ட செயல். 2004 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,விற்கு நான்கு தொகுதிகள் தரப்பட்டது என்பது நினைவில் இருக்கட்டும். முதன்மை செயலர் துரையின் நேரடி அரசியலுக்கு பின், கட்சி சந்தித்த தேர்தல்களில் பெரும்பாலும் வெற்றி தான். நம்பிக்கையுடன் செயல்படுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கடந்த லோக்சபா தேர்தலில் நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.அவற்றுடன் சேர்த்து, கூடுதலாக ஒரு தொகுதி கேட்டு, அக்கட்சி பட்டியல் அளித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலர் முத்தரசன் அளித்த பேட்டி:தி.மு.க.,விடம் கடந்த முறையை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை கேட்போம். அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என, தொண்டர்கள் விரும்புகின்றனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட, 40 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

samvijayv
பிப் 02, 2024 12:48

திட்டமிட்டு அச்சு ஊடகங்கள், 'டிவி' ஊடகங்கள் பெரிதாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை., என்றால் நீங்கள் எங்கு நடைபயணம் எங்கு போராட்டம் மேற்கொண்டீர்கள்?. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என, தொண்டர்கள் விரும்புகின்றனர்., என்றால் இருப்பது தமிழகம் மற்றும் புதுச்சேரி 39+1=40 சீட்டு அது எப்படி சாத்தியமாகும்.


Mohan das GANDHI
பிப் 01, 2024 23:14

வைகோ, திரு மாவு, கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் இந்த குட்டிசுவரு காட்சிகள் தமிழ்நாட்டில் செல்லாக்காசுகளே NO GOOD OPINION PUBLIC REFUSE THESE STUPIDS PEOPLE WHO TALK ONLY BUT NO USEFUL AND NEVER MEET PEOPLE OR HELP DURING THE RAINY SESON NO ONE CAME OUT OF THEIR HOUSES THESE OR LEADERS ? ? ? NEVER CONSIDERED AS LEADERS STUPID GAYS AND USELESS FELLOW. NOBODY TAMILAN WILL NEVER VOTE THESE UNFIT POLITICIANS INCLUDING DMK AND ADMK. ALL ARE HIGHLY CORRUPTED. ONLY TAMILNADU HERO BJP MR.ANNAMALAI IPS A SINCERE PERSON AND GREAT LEADER HIGHLY EDUCATED TAMILAN, FARMER MR.ANNAMALAI IPS AND HIS ALLIANCES WILL WIN ALL OVER TAMILNADU MORE THAN 35 MP'S THIS 2024 ELECTION.


K.Ramakrishnan
பிப் 01, 2024 18:42

நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி... சரி நாலு தொகுதிக்கு ஆளை காட்டுங்க...சார்.. அப்ப நாலு பேருல 2 பேரு தி.மு.க.வுக்கு வந்துட்டாங்களே... பிறகு எதுக்கு நாலு சீட்?


HoneyBee
பிப் 01, 2024 17:01

அப்போ பொட்டி பொட்டி பொட்டி வாணாமா


Duruvesan
பிப் 01, 2024 16:01

தனியா நின்னா நோட்டவை தாண்ட மாட்டார் ,2ஜி கேஸ் திரும்பி தொடங்க ஆதாரம் அண்ணாமலைக்கு கொடுத்தது


வால்பாறை வாசு வால்பாறை
பிப் 01, 2024 14:42

பெட்டி கோவாலு


Muralidharan raghavan
பிப் 01, 2024 14:34

அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் திமுக சார்புடையவை. அதனால் அவர்கள் வெளியிடமாட்டார்கள்,. ஏன் அண்ணாமலையின் செய்திகளை சமூக ஊடங்ககளித்தான் வெளியிடுகின்றனவே தவிர மற்றவர்கள் வெளியிடுவதில்லை. மேலும் மதிமுக எதற்காக துவங்கப்பட்டது அதன் இலக்கை அது அடையவில்லை. இந்நிலையில் ஒரு சீட் பெற்றுக்கொண்டு இருப்பதுதான் நல்லது.


Barakat Ali
பிப் 01, 2024 14:33

நல்லா கேட்டுப் பாருங்க .... நாலு கருப்பு பலூன் மட்டும் கேட்டிருக்கப் போறாரு ....


K.Ramachandran
பிப் 01, 2024 14:12

as long as MDMK contests on DMK symbol of rising sun, it is the same as DMK contesting. MDMK should be dissolved and merged with DMK, if it does not have the strength to contest on its own symbol.


ராஜவேல்,வத்தலக்குண்டு
பிப் 01, 2024 13:35

எடப்பாடி, திருமா மாதிரி வைகோவும் ஒரு மாநாட்டை மதுரையில நடத்த வேண்டியதுதானே அப்பத்தான திமுகவிடம் ஒரு நான்கு தொகுதியாவது அடித்து கேட்கலாம் ஆனா வைகோவுக்கு அதுல ஒரு ஆபத்தும் இருக்கு ஒருவேளை மாநாட்டுக்கு கூட்டம் சரியா வரலைன்னா அப்பறம் திமுக இவருக்கு ஏற்கனவே கொடுத்த அந்த ஒரு சீட்டையும் கொடுக்காது கடைசியில் கருணாநிதி சொன்ன மாதிரி ஸ்டாலின் இதயத்தில்தான் இடம் கிடைக்கும் அதனால் வைகோ மாநாடு என்ற ரிஸ்க்கான ஆட்டத்தில் ஈடுபட மாட்டார் கடைசியில் ஸ்டாலினோட கையில கால்ல விழுந்து பழைய மாதிரியே அவரோட மகனுக்கு ஒரு MP சீட்டும் தனக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் வாங்கிக் கொண்டு சைலண்ட் ஆகி விடுவார்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி