உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ம.தி.மு.க., திருச்சியை குறிவைப்பது ஏன்?

ம.தி.மு.க., திருச்சியை குறிவைப்பது ஏன்?

சென்னை : தி.மு.க., கூட்டணியில், காங்கிரசை தொடர்ந்து, ம.தி.மு.க.,வுக்கான தொகுதிகள் குறித்த முதல்கட்ட பேச்சு, பிப்., 4ல் நடத்தப்படவுள்ளது.

இது குறித்து, ம.தி.மு.க.,வினர் கூறியதாவது:

தி.மு.க., கூட்டணியில், கடந்த 2019 லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு, கட்சி சார்பில் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.ஆனால், இம்முறை திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம். முதன்மை செயலர் துரை வைகோ, அங்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார். திருச்சியை பொறுத்தவரை, எந்த மதம், எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வெற்றி பெறலாம். ரங்கராஜன் குமாரமங்கலம், தலித் எழில்மலை, எல்.கணேசன், காதர் மொகிதீன், திருநாவுக்கரசர் என, அந்த தொகுதியை சாராத பலர் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, பொதுத் தொகுதியான திருச்சியில், தலித் இனத்தைச் சேர்ந்த எழில்மலை, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்றார். அதனால், திருச்சி லோக்சபா தொகுதி மக்கள், ஜாதி அடிப்படையில் ஓட்டளிப்பதில்லை என்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது. அதனால், மற்ற தொகுதிகளைக் காட்டிலும், ம.தி.மு.க., சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் துரை வைகோ, தனக்கு அந்த தொகுதி மிகவும் சாதகமாக இருக்கும் என நம்புகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Duruvesan
ஜன 30, 2024 20:34

ஆக முதல் சீட் admk வெற்றி


Libra
ஜன 30, 2024 20:14

கருணாவின் தந்திரம் : தன் தவபுதல்வன் பட்டமளிப்புக்கு குறுக்கே நின்ற டம்மி பீஸுகள் எல்லாரையும் ஒரு அணியில் திரள வைத்து அவர்கள் கையாலே அவர்கள் கண்ணை குத்தவைத்து பாகுபலி கதைபோல் பங்காளி சண்டை காண்பிக்காமல் ஒரு ஆக சிறந்த அறிவாளியாக மிசா மற்றும் பல உருட்டல்கள் காண்பித்தார்கள். பாவம் மதிமுக உண்மை தொண்டர்கள் தம் சக நண்பர்களை இழந்தார்கள் (வியாபார முதலீடுகளை வையாபுரி விரிவாக்கம் செய்தார்கள்) இலங்கை துரோகம் திரு.வைகோ அவர்களின் வாழ்நாள் சாதனை. கருணாவின் கேவலமான துரோக வரலாற்று அரசியலின் நிதர்சனமான சாட்சி இவர். திராவிடம் என்ற மாயையை நீர்த்து போக இவர்களும் நமக்கு உதவிய வரலாற்றின் பிழைகள்


Rajarajan
ஜன 30, 2024 16:59

அப்போ உங்கள் தந்தை தனிக்கட்சி ஆரம்பித்தது ஏன்னு உங்களுக்கு தெரியாதா மிஸ்டர் ?? இந்த பிழைப்புக்கு பெயர் தன்மானம், சுயமரியாதை.


நரேந்திர பாரதி
ஜன 30, 2024 16:27

வேறென்ன?? திருச்சியில் பாவ மன்னிப்பு கூட்டம் அதிகம்..அதனால் எளிதாய் வெற்றிபெறலாம்னு நினைக்கிறார்


M Ramachandran
ஜன 30, 2024 15:48

யேமந்தவர்கள நிறைய இருப்பார்கள் என்ற நப்பாசை தான் காரணம்


Bala
ஜன 30, 2024 15:09

வாய்ப்பில்லை திருச்சி . திருச்சி சிவாவிற்கு அந்த தொகுதி தான் மறுபடியும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 30, 2024 17:03

என்னாது, திருச்சி சிவாவுக்கா? அவரு தேர்தல்ல நிக்க மாட்டாரே, எப்பவும் ராஜ்ய சபா நாமினேஷன்தான்.


Nagarajan D
ஜன 30, 2024 15:06

எப்படியாவது மகனை MP ஆக்கிட வேண்டியதென்று கலிங்கப்பட்டி கருங்காலி முடிவு செய்துவிட்டான்


vadivelu
ஜன 30, 2024 14:45

திருச்சியில் அதிகம் தமிழை தாய் மொழியாக கொள்ளாத வந்தேறிகள் இருக்கிறார்கள், அதை அறுவடை செய்ய துடிக்கிறார்.


Duruvesan
ஜன 30, 2024 14:20

ஆக கோயபல்ஸ் சம்மி ஹாப்பி


Bhaskar Srinivasan
ஜன 30, 2024 13:41

அது அப்போ இப்போ அப்படி இல்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை