உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குவாட்டருக்கு ரூ.10 உடன் குறைந்தபட்ச விலை: ரூ.150 கூடுதல் செலவுகளால் தடம் மாறும் குடிமகன்கள்  

குவாட்டருக்கு ரூ.10 உடன் குறைந்தபட்ச விலை: ரூ.150 கூடுதல் செலவுகளால் தடம் மாறும் குடிமகன்கள்  

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில், 4,830 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றைத் தவிர்த்து, சமீபகாலமாக கிளப் மற்றும் ஹோட்டல்களுக்கான எப்.எல்.,2 மற்றும் எப்.எல்., 3 லைசென்ஸ்களும் வாரி வழங்கப்படுகின்றன. இவற்றால் ஆண்டுக்கு, 45,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடக்கிறது. இவற்றுக்கான மதுபானங்களை தயார் செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவையாக உள்ளன.டாஸ்மாக் மதுவின் தரம் மிகவும் குறைந்து வருவதாகப் புகார்கள் குவிந்து வரும் நிலையில், அவற்றின் விலை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு ஏறிக்கொண்டே இருக்கிறது. குவாட்டரின் குறைந்தபட்ச விலையே, 140 ரூபாயாக உள்ளது. பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வைத்து, 150க்கு விற்கப்படுகிறது.இதை வாங்கி, டாஸ்மாக் பார்களில் டம்ளர், தண்ணீர் பாட்டில், சைடிஷ் என, 200 ரூபாய்க்கு மேல் செலவாகி விடுவதாக, 'குடி'மகன்கள் குமுறுகின்றனர். தினக்கூலி வேலைக்கு செல்வோருக்கு, இவ்வளவு தொகை கொடுத்து தினமும் குடிக்க முடிவதில்லை. அதனால், மாற்று வழிகளில் குறைந்த தொகையில் கிடைக்கும் போதைகளை தேடுகின்றனர்.இதனால், பின்தங்கிய சில மாவட்டங்களில் போலி மது விற்பனை அதிகளவில் நடக்கிறது. ஒரு பாக்கெட் சாராயம் 30 -- 50 ரூபாய்க்கு கிடைப்பதால், குடித்தே தீர வேண்டுமென போதைக்கு அடிமையான பலரும், இவற்றின் தீமை அறியாமல் வாங்கி குடிக்கின்றனர்; பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.கள்ளச்சாராயத்தை தடுப்பதற்கு, அரசு தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எதுவுமே உறுதியானதாக இருப்பதில்லை. மதுபானங்களில் கலப்படத்தையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்கவும், 'டெட்ரா' பாக்கெட்களில் மது விற்பனை செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக, கடந்த ஆண்டில் தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.டெட்ரா பாக்கெட் மது விற்பனைக்கு எதிராக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், அவற்றின் நன்மை, தீமை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை என்னவானது என்றும் தெரியவில்லை. இந்நிலையில் தான், 'குடி'மகன்கள் தவறான போதைகளை தேடிச்சென்று உயிரிழப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் கடுமையாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதை தடுக்க, கம்ப்யூட்டர் பில்லிங் கொண்டு வரப்படும் என்று, இரண்டு ஆண்டுகளாக அமைச்சர் முத்துசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்று வரை வந்தபாடில்லை; இப்போது வரையிலும், டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும், 'பார்'களில் அதிக விலைக்கு விற்கும் முறைகேடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இந்த முறைகேடுகளையும், கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது, எதிர்க்கட்சியினரால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Alagusundram KULASEKARAN
ஜூன் 22, 2024 21:36

சட்டமன்றத்தை முடக்கி உயர் நீதிமன்ற கண்காணிப்பில் கள்ள சாராய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் பின்னர் திமுக ஆட்சியில் தவறுகள் நடைபெறவில்லை என்றால் ஆட்சி தொடரலாம் இதனுடன் நாடளாமன்ற தேர்தலில் பல இடங்களில் ஓட்டுகள் காணாமல் போன விவகாரத்தை அரசுக்கும் தேர்தல் ஆணையர்க்கும் தொடர்பு இருக்கிறதா எந்த தொகுதியில் எவ்வளவு குறைந்து அவர்கள் அங்கே இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐயால் நடந்தி மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்


SRIDHAR
ஜூன் 22, 2024 16:22

நாளை நமதே நாற்பதும் நமதே படுத்தும் பாடு


Vivek
ஜூன் 22, 2024 13:13

அரசு பஸ்களில் கை அடக்க மிஷின் மூலம் பஸ் பயண டிக்கெட் வழங்கபாபடுகிறது.அதனை ஏன் டாஸ்மாக் கடைகளில் தந்து விலை பில் தர அரசு ஏற்பாடு செய்யக்கூடாது. மெத்தனம் ஏன்..காரணம் எஸ்ட்ரா ₹20/- போய்விடும் அதனால் மேல் அதிகாரி வரை செல்லும் வழி இல்லாமல் போய்விடும்


Mani . V
ஜூன் 22, 2024 10:55

அதுக்கு பேசாம கள்ளச் சாராயத்தை குடித்தால், நாலு பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு மொத்தம் முப்பது லட்சமாவது கிடைக்கும்.


karthi pitchaiyan
ஜூன் 22, 2024 10:51

குடிப்பதை விட ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்...சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்...


Sankar ARUMUGAM
ஜூன் 21, 2024 17:38

கேரளாவில் பத்து ரூபாய் அதிகம் வாங்க வேண்டும் என்றால்


தமிழ்வேள்
ஜூன் 21, 2024 15:34

மதுவை விலை குறைத்து கொடுத்தாலும் , ஓசியில் இரண்டு பாட்டில் கேட்பார்கள் நம்ம ஊர் குடிகாரர்கள் ....இவர்களின் குடிவெறிக்கு , விஷத்தை கூட அப்படியே குடிப்பார்கள் .....குடிகாரர்களை பற்றி கவலைப்படத்தேவையில்லை ...


அ.சகாயராசு
ஜூன் 21, 2024 13:33

குடி மகன்கள் ஏன் அதிக விலைக்கு குடிக்கின்றார்கள் பத்து ரூபாய்க்கான புகார் கொடுக்க போக நேரம் இருக்காது அவர்கள் சமூக அக்கரை உள்ள வர்கள் புகார் தெரிவிக்கலாம் ஊடகங்களும் இத்தகவலை பல முறை சொல்லியும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவில்லையா அரசு கண்டு கொள்ளவில்லையா இனியாவது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்


தென்காசி ராஜா ராஜா
ஜூன் 21, 2024 13:05

உண்மை சரியான பதிவு.குவாட்டரை 100 ரூபாய்க்குள் விற்பனை செய்தால் இந்த மாதிரி சம்பவம் நடபெற வாய்ப்பு மிக குறைவு


Palanisamy Narayanasamy
ஜூன் 21, 2024 12:47

அய்யா, யாராவது யோக்கியமான அதிகாரிகள், வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக உழைக்கவேண்டும் என்ற எண்ணமுள்ள அதிகாரிகள் - கோயம்பத்தூர் நகரிலோ / மாவட்டத்திலோ இருந்தால் டாஸ்மாக் கடைகளில் மக்களோடு மக்களாக சென்று சோதித்து பாருங்கள்... குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் தராமல் கேட்டுப்பாருங்கள்... விற்பனையாளர் உங்கள் அம்மா அப்பா, பாட்டி, அக்காள், தங்கை எல்லோரையுமே தன் வாயாலேயே அங்கே கொண்டுவந்து நிறுத்திவிடுவான். எந்த நேரமும் மது தடையின்றி கிடைக்கும்.. மக்கள் மாறவேண்டும், மக்கள் போராடவேண்டும்.... அது ஒன்றே வழி...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ