உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ம.க.,வை ஓரங்கட்டிய அமைச்சர்கள் வேலு, நேரு?

பா.ம.க.,வை ஓரங்கட்டிய அமைச்சர்கள் வேலு, நேரு?

சென்னை : லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க., விரும்பியது. வன்னியர் இட ஒதுக்கீட்டை, அரசு நடைமுறைப்படுத்தக்கோரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்டோர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, கூட்டணி தொடர்பாகவும் பேசப்பட்டதாக தகவல்.தற்போது, கூட்டணியில் பா.ம.க.,வுக்கு இடமில்லை என்பது தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு துவக்கியதன் வாயிலாக உறுதியாகி உள்ளது.துரைமுருகன் வாயிலாக, பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடந்தன. ஆனால், அமைச்சர்கள் வேலு, நேரு ஆகியோர், பா.ம.க.,வை சேர்க்க வேண்டாம் என பரிந்துரை செய்துள்ளனர். இத்தகவல், துரைமுருகன் வாயிலாக, பா.ம.க., நிர்வாகிகளின் காதுகளை எட்டியுள்ளது. இதனால் கடுப்பான அன்புமணி, 'திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அமைச்சர் வேலு நடவடிக்கை எடுக்கவில்லை' எனக்கூறி, தன் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரின் இந்தக் கோபத்துக்கு காரணம், தி.மு.க.,வுடனான கூட்டணியை கைகூட விடாமல் செய்ததே என பா.ம.க., வட்டாரங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2024 19:37

பிஜேபியும் பாமகவுக்கு இதைத்தான் செய்யவேண்டும் ........ அனாதைகளை எடுத்து வளர்க்கும் வேலையை பாஜக செய்யக்கூடாது .....


Easwar Kamal
ஜன 29, 2024 18:34

stalin parthu irukanum. indha rendu theluganunga dmk thookitu poaira poranunga.


K.Ramakrishnan
ஜன 29, 2024 18:29

நல்ல வேளை செஞ்சீங்க... இல்லைன்னா.. உங்களை சனி பிடிச்சிருக்கும்...


raja
ஜன 29, 2024 18:17

கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு அவுங்க பேசுனது வன்னியர்களுக்கு தனி ஐடா ஒதுக்கீடு பற்றித்தான் என்று அவர்களே தெளிவுபடுத்திய பின்பும் இல்லை இல்லை கூட்டணி பற்றித்தான் பேசினார்கள் என்பது உங்களுடைய மனநோயை வெளிக்கொண்டுவந்துள்ளது.. ஏன் இந்த வன்மம் உங்களுக்கு?


திகழ்ஓவியன்
ஜன 29, 2024 19:35

ஆமம்ம் MANGO MAN உத்தமன் , DMK 50 கோடி கொடுத்த , ADMK 50 கோடி க்கு மேல் ஒரு ரூபாய் கொடுத்தாலும் ஓடும் குணம் உள்ளவன் , NOT TRUSTED கூட்டம்


அசோகன்
ஜன 29, 2024 16:46

அப்போ சீட் கொடுத்தா என்ன தப்பு செய்தாலும் கண்டுக்கமாடீங்களா .................


Narayanan
ஜன 29, 2024 13:59

ஐ என் டி யா கூட்டணி சிதறிய மாதிரி திமுக கூட்டணியும் சிதறுமா ? அல்லது திமுக சொல்வதை கேட்டு நடக்குமா ?


mindum vasantham
ஜன 29, 2024 10:26

Ivarkal iruvarum Telugu kudiyai sernthavarkal telungarna ellarukkum pothu edappadinnu puthusaa vanthaa sariyaa varaathaa


mindum vasantham
ஜன 29, 2024 10:24

Kn nehru endra vantherithan payyanukku seat ketturukkar,avar arasiyal vaippu marukkapatta Muthuraiyar inathai thaka seikiraar ,muthurayarkal poorva kudi edappadiyai nambalaam


duruvasar
ஜன 29, 2024 10:18

கூட்டணி உறுதியாயிருந்தால் ஸ்டாலின் ஆட்சியில் திருவண்ணாமலை எப்போதும் திருவிழா கோலம் பூண்டிருக்கிறது என கூறி இருப்பாரோ என்னவோ. இவனெல்லாம் மக்கள் தலைவர். கொடுமை


Raj
ஜன 29, 2024 06:48

இவர்களை ஓரம் கட்டவேண்டிய காலம் வந்துவிட்டது..... மக்களின் தீர்ப்பில் தான் உள்ளது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ