உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  அதிக தொகுதி; அமைச்சரவையில் இடம்: காங்., - எம்.எல்.ஏ., மீண்டும் அடம்

 அதிக தொகுதி; அமைச்சரவையில் இடம்: காங்., - எம்.எல்.ஏ., மீண்டும் அடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கலந்து கொண்ட கூட்டத்தில், 'தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகள், அமைச்சரவையில் இடம் கேட்போம்,' என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., பேசினார். கன்னியாகுமரி மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பட் மற்றும் கட்சியின் மேலிட பார்வையாளர் அனில் போஸ் பங்கேற்றனர். கூட்டத்தில், ராஜேஷ்குமார் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள் தவிர எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது என்பது பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்போம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, அமைச்சரவையிலும் காங்கிரசுக்கு இடம் கேட்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீர்த்திருத்த பணியில், அதிக கவனம் செலுத்தி, ஒரு காங்கிரஸ் தொண்டருடைய ஓட்டு கூட விடுபடாமல் பார்க்க வேண்டும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை