உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வட மாநிலத்தவர் ஓட்டு: தி.மு.க., அச்சம்

வட மாநிலத்தவர் ஓட்டு: தி.மு.க., அச்சம்

வட மாநிலத்தவர் ஓட்டு, பா.ஜ.,வுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், தமிழகத்தில், வடமாநிலத்தவர் வாக்காளர்களாக சேர்வதால், தி.மு.க., தலைமை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.அதற்காக, வட மாநிலத்தவர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து பேச, அமைச்சர்கள் பணிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i88kz3a0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹார் மாநிலத்தில் நடந்து வந்த, 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி' நிறைவு பெற்ற நிலையில், அம்மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள, 36 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ள தேர்தல் ஆணையம், அவர்கள் வேலைக்காகக் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது புலம் பெயர்ந்த, 36 லட்சம் பேரில், 7 லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறியுள்ள நிலையில், விரைவில் அவர்கள், தமிழக வாக்காளர்களாக ஓட்டுரிமை பெறவுள்ளனர். வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், சமீப காலமாக பணி நிமித்தமாக தமிழகம் வந்து, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், வேலுார், ராணிப்பேட்டை உட்பட பல தொழில் துறை நிறைந்த மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், வாக்காளர் அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், 'பீஹார் மாநிலத்தில் இருந்து, தமிழகம் வந்த, 7 லட்சம் பேருக்கு மேல் வாக்காளர்களாக மாற உள்ளனர்.அதுபோல பல மாவட்டங்களில், வட மாநிலத்தவர்கள் வாக்காளர்களாக மாறும் நிலையில், அது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்' என கூறப்படுகிறது. தமிழகத்தில் புதிய வாக்காளர்களாகும் வட மாநிலத்தவர், வரும் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளிக்கக்கூடும் என, உளவுத்துறை வாயிலாக ஆட்சி மேலிடத்தில் இருப்போருக்கு தெரிய வந்திருக்கிறது. இதையடுத்தே, அவர்களால் தங்களுக்கு பாதிப்பில்லை என்பது போன்ற தகவலை, அமைச்சர்கள் வாயிலாக பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியை ஆட்சி தலைமையில் இருப்போர் முடுக்கி விட்டுள்ளனர். நேற்று ஈரோட்டில், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், முத்துசாமி ஆகியோர் அளித்த பேட்டியில், ''தமிழகத்தில் தி.மு.க., மற்றும் தோழமை கட்சிகள் வலுவாக உள்ளன. தமிழக திட்டங்களால் வட மாநிலத்தவரும் பயன்பெற்று இருப்பதால், அவர்கள் தி.மு.க., கூட்டணிக்குத்தான் ஓட்டளிப்பர்,'' என கூறினர். அதேபோல, வேலுார் மாவட்டம், காட்பாடியில் பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: பீஹாரை சேர்ந்தோருக்கு அங்கேயே வேலை கிடைத்திருந்தால், அவர்கள் யாரும் இங்கு வந்திருக்க மாட்டார்கள். அங்கு, வாக்காளர் பட்டியலில் உயிருடன் இருப்பவர்களை இல்லை என போட்டு விட்டனர். அப்படியெல்லாம் இங்கு செய்ய முடியாது. அதனால், அவர்களை முறையாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்போம். அதனால், தி.மு.க.,வுக்கு பாதிப்பில்லை என்றாலும், அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். இதே போல, வேறு சில மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பலரும், இதே கருத்தை வலியுறுத்தி பேசியுள்ளனர். -நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Rajan A
ஆக 03, 2025 21:09

ஹிந்தியில் போஸ்டர் அடிக்க தெரியாதா என்ன? பாய் ஆவுர் பெஹனோ அப்படியே சவுக்கார்பெட் ஸ்டைலில் போட வேண்டியது தான். ஹம் 2000 தேங்கேனு சேர்த்து போட்டால் போகிறது. குடுக்கவா போறோம்


ஆரூர் ரங்
ஆக 03, 2025 20:27

மும்பை கர்நாடகா டெல்லியில் லட்சக்கணக்கான தமிழர்கள் குடிசைகள் நடைபாதைகளில் வாழ்ந்து கொண்டு ஓட்டுப் போட்டு வருகிறார்கள். இங்கு வெளிமாநில மக்கள் இருக்கக் கூடாதா?. அது பிடிக்கவில்லை என்றால் ஓங்கோல்கார முதல்வரும் போகலாம் .


xyzabc
ஆக 03, 2025 19:54

தி மு க விற்கு எதிராக வோட்டு போடுபவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். அச்சமே இருக்காது. அச்சம் ஓடி போயிடும்


Padmasridharan
ஆக 03, 2025 14:58

வட மாநிலத்தில் குற்றங்கள் போல் இங்கும் அதிகரித்துள்ளது அவர்களின் வருகையால். இப்பொழுது ஓட்டுச்சாவடியிலும் பத்திரமா இருக்கணுமா. பாஜ க்கு ஜே


எஸ் எஸ்
ஆக 03, 2025 14:26

இந்த அறிவுஜீவிகள் ஒன்றை மறந்து விட்டனர். காசி, மும்பை, டெல்லி பெங்களூரு, ஹைதெராபாத், பாலக்காடு, திருவனந்தபுரம் இன்னும் தேசம் முழுவதும் தமிழர்கள் வசிக்கின்றனர். அங்கேயே ஓட்டுரிமை பெற்று ஓட்டளிக்கின்றனர். மகாராஷ்டிராவில் 1980 லேயே சுப்பிரமணியம் என்ற தமிழர் நிதி மந்திரி ஆக இருந்தார். இவர்கள் போல் அவர்களும் ஆரம்பித்தால்...?


A.Gomathinayagam
ஆக 03, 2025 14:05

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிலையில் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் ஒட்டு போடுவார்கள்


venugopal s
ஆக 03, 2025 13:01

புலம் பெயர்ந்த வட இந்திய தொழிலாளர்களுக்கு வட இந்தியாவில் பாஜக காங்கிரஸ் கட்சிகளின் அவலமான ஆட்சியால் தான் அங்கு வேலை வாய்ப்பின்றி தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு வர வேண்டியுள்ளது என்பதும் இங்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தான் நமது மாநிலம் முன்னேறியுள்ளது என்பதும் அவர்களுக்கு தெரியும். அதனால் இங்கு பாஜகவுக்கு நிச்சயமாக ஓட்டுப் போட மாட்டார்கள். தமிழகத்தையும் பீகார் போல் பாஜக ஆக்கிவிட்டால் அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை என்பதையும் நன்கறிவார்கள்.


vivek
ஆக 03, 2025 15:41

அட வீணா போனவன்...அவுங்க ஓட்டு பிஜேபி மட்டுமே


ஆரூர் ரங்
ஆக 03, 2025 20:29

பெங்களூரு மும்பையில் தமிழர்கள் கையேந்தி நிற்பதைப் பார்த்துள்ளேன். டெல்லி, அகமதாபாத்தில் தெருத்தெருவாக இட்லி விற்கிறார்கள். திராவிட ஆட்சி உண்டாக்கிய அவலம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2025 20:44

பிதற்றல் கருத்து ...... பானிபூரி, சாட் மசாலா விக்கிறவன் எம் பி ஏ படித்து விட்டா தமிழகம் வருகிறான் ? தமிழர்கள் இவற்றை விரும்பி உண்பதால் வருகிறான் .... தமிழகத்தில் இருந்து வடமாநிலம் செல்பவர்கள் படித்தவர்கள் .... அவர்கள் இங்கே வேலைவாய்ப்பின்மையால் அங்கே செல்கிறார்கள் .... உண்மையில் இந்நிலைமையை அவமானமாகக் கருதவேண்டியது திராவிடியா கட்சிகளின் அடிமைகளே ....


ஆரூர் ரங்
ஆக 03, 2025 11:52

இங்கு பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களில் 80 சதவீதம் ஜார்க்கண்ட், மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தார். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது தெரிந்ததே.


திகழும் ஓவியம்
ஆக 03, 2025 10:57

ஓங்கோல் இங்கே முதல்வர் ஆகலாம், கள்ள குடியேறியவர் இங்கே அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கலாம், ஆனால் வடக்கன் கூடாது...


beindian
ஆக 03, 2025 09:52

வானதி சீனிவாசன் ஜெயிப்பதற்கே காரணம் இந்த வடக்கன்ஸ்கள் ஓட்டுதானே


Raman
ஆக 03, 2025 11:37

OPs are always OPs


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை