உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரு கோடி ஓட்டு: இ.பி.எஸ்., எண்ணம் பலிக்குமா?

ஒரு கோடி ஓட்டு: இ.பி.எஸ்., எண்ணம் பலிக்குமா?

லோக்சபா தேர்தலில், ஒரு கோடியே, 20 லட்சம் ஓட்டுகள் பெற்றால் தன் கை ஓங்கி விடும் என்றும், கட்சியில் களையெடுப்பு நடவடிக்கைகளை துவங்கி விடலாம் என்றும், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கருதுகிறார்.அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 33 தொகுதிகளில் போட்டியிட்டது. மற்ற தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில், 4.34 கோடி ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அதில், 40 சதவீதத்திற்கு மேல் பெறும் அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.அதற்கு அடுத்த நிலையில் வர வேண்டுமானால், 25 முதல் 30 சதவீத ஓட்டுகள் பெற வேண்டும். ஒட்டுமொத்த அணிக்கான ஓட்டாக இல்லாமல், அ.தி.மு.க.,வின் தனிப்பட்ட ஓட்டுகளாக, 28 சதவீதம் பெற வேண்டும் என, இ.பி.எஸ்., விரும்புகிறார். அந்தளவுக்கு ஓட்டுகள் பெற்று, கட்சி இரண்டாம் இடத்தை பிடித்தால் போதும்; கட்சியில் களையெடுப்பை துவங்கி விடலாம் என, அவர் திட்டமிடுகிறார். அதற்கு காரணம், லோக்சபா தேர்தலில் செயல்படாத மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களும் தான்.தேர்தலுக்காக பணம் கொடுத்தால், அது கடைசி வரை சென்று சேருவதில்லை. கிடைத்த பணத்தை பல நிர்வாகிகள் அமுக்கி விட்டனர். ராமநாதபுரம், தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மத்திய சென்னை, வட சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், நிர்வாகிகளின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. இது தொடர்பாக தலைமைக்கு புகார்கள் வந்துள்ளன.தி.மு.க., வேட்பாளர்களிடம், எங்கள் மாவட்ட செயலர்கள் சிலர் ரகசிய, 'டீலிங்' நடத்திய புகார்களும் வந்துள்ளன. இதுபோன்ற துரோக செயலை கண்டு பழனிசாமி கோபத்தில் உள்ளார். ஒருவேளை அ.தி.மு.க.,வுக்கு ஒரு கோடிக்கு மேலாக ஓட்டுகள் கிடைத்து விட்டால், 12 மாவட்ட செயலர்கள் வரை மாற்றப்படலாம். ஓட்டு வங்கி குறைந்து விட்டால், களையெடுப்பு நடவடிக்கையில் வேகம் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S. Balakrishnan
மே 28, 2024 22:01

இரண்டு கோடிக்கு மேல் உறுப்பினர்களை கொண்ட அதிமுக ஏன் ஒரு கோடி ஓட்டு பற்றி பேச வேண்டும்.


பேசும் தமிழன்
மே 28, 2024 20:01

ஒரு கோடி ஓட்டு கிடைக்குதோ இல்லையோ.... பழனிக்கு ஆப்பு கண்டிப்பாக இருக்கிறது....பங்காளி கட்சி திமுக வெற்றி பெற தீயாக வேலை செய்தவர் அல்லவா ???


sri
மே 28, 2024 20:24

sss


அசோகன்
மே 28, 2024 14:47

ஓட்டு விழவில்லை என்றால் என்ன செய்வது எப்படி கட்சியை கட்டமைப்பது என யோசிக்கவேண்டும்... எனக்கென்னமோ எடப்பாடிதான் அதிமுகவின் கடைசி தலைவரோ என தோன்றுகிறது......


SP
மே 28, 2024 10:09

வாக்கு குறைந்தால் இவர் பதவி விலக வேண்டும்.


மோகனசுந்தரம்
மே 28, 2024 09:30

ஒரு இலவு காத்த கிளி.


சாமிநாதன்,மன்னார்குடி
மே 28, 2024 08:30

தெருவும் திண்ணையுமா தெருக்கோடியில் நிற்பதற்கு வாய்ப்பு அதிகம்.


ஜஜ
மே 28, 2024 06:38

தமாஷு தமாஷு


மேலும் செய்திகள்











புதிய வீடியோ