உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.1,009 கோடி விடுவித்து அரசாணை

ரூ.1,009 கோடி விடுவித்து அரசாணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: லோக்சபா தேர்தலில் செய்யப்பட்ட பணிகளுக்கான தொகை எவ்வளவு என, மாவட்டம் வாரியாக முன்மொழிவு பெறப்பட்டு, ரூ.1,009 கோடி ரூபாயை தமிழக அரசு விடுவித்து, அரசாணை பிறப்பித்திருக்கிறது. அதில், மதிப்பூதியம் குறிப்பிடாததால், தேர்தல் ஊழியர்கள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.லோக்சபா தேர்தல், ஏப்.,19ல் நடந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், அலுவலர்களுக்கு வழக்கமாக மதிப்பூதியம் வழங்கப்படும். தேர்தல் முடிந்து நான்கரை மாதத்துக்கு மேலாகியும், இன்னும் வழங்கவில்லை.இதுதொடர்பாக, 19ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்டம் வாரியாக கேட்பு பட்டியல் சரிபார்க்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.அதில், லோக்சபா தேர்தலில் செய்யப்பட்ட அனைத்து விதமான பணிகளுக்கும் சேர்த்து, மாவட்டம் வாரியாக பெறப்பட்ட முன்மொழிவுகள் அடிப்படையில், ரூ.1,009 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க, நிதி ஒதுக்கவில்லை.இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது: இப்போது பிறப்பித்துள்ள அரசாணையில், தேர்தலுக்கு செய்த பணிகளுக்குரிய பில் தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பணிபுரிந்த அலுவலர்களுக்கான மதிப்பூதியம் விடுவிக்கவில்லை. அதற்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். பண்டிகைக்கு முன் வழங்கினால், செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, கூறினர்.

யாருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும்?

மாவட்ட தேர்தல் அதிகாரி, டி.ஆர்.ஓ., உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), சிறப்பு தாசில்தார்கள், மாநகராட்சி கமிஷனர்கள், துணை கலெக்டர்கள், மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தலா, 33 ஆயிரம் ரூபாய், பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழுவினர், உதவி மண்டல அலுவலர்களுக்கு ரூ.24 ஆயிரத்து, 500, மண்டல உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.17 ஆயிரம், டேட்டா ஆபரேட்டர்களுக்கு ரூ.7,000, செக்சன் எழுத்தர்களுக்கு ரூ.5,000 வீதம் மதிப்பூதியம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை