உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எம்.எல்.ஏ.,க்களுக்கு பழனிசாமி விருந்து

எம்.எல்.ஏ.,க்களுக்கு பழனிசாமி விருந்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 29ம் தேதி முடியவுள்ள நிலையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி விருந்தளித்தார்.சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் நடந்த விருந்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், ஒரு சிலர் தவிர மற்றவர்கள் பங்கேற்றனர். விருந்தில் சைவ, அசவை வகைகள் பரிமாறப்பட்டன. அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவருடனும், பழனிசாமி உரையாடியுள்ளார். பா.ஜ.,வுடனான கூட்டணியை சில எம்.எல்.ஏ.,க்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அவர்களிடம் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் ஏன் உருவானது; அதனால் கிடைக்கப் போகும் சாதகமான அம்சங்கள் என்னன்ன என்பது குறித்து எடுத்துக் கூறியதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

selva sekar
ஏப் 24, 2025 07:24

தீவிரவாதிகளால் சுற்றுலா பயணிகள் ஒட்டுக்கொள்ளப்பட்ட ஆண்டு நாடே சோகத்தில் இருக்கும் பொழுது இந்த எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தன்னுடைய கட்சியினர் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து வைத்து கொண்டாடப்பட்டது எவ்வளவு பெரிய தேசத்துரோகம் இவனுக்கெல்லாம் ஒரு கட்சி இதன் எல்லாம் ஒரு பொதுச் செயலாளர் இவனுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து மக்களுக்கு இவன் நன்மை செய்ய போகிறாராம் மக்களை இவனை விரட்டி விடுங்கள் இவனுக்கு ஓட்டு போடாதீர்கள்


பிரேம்ஜி
ஏப் 24, 2025 07:18

மக்களுக்கு ஒன்றும் இல்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை