உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி!: அண்ணாமலை

ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி!: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, இன்னும் வளர்ச்சிக்கான சுவாசம் கிடைக்காமல் வாடிக் கொண்டிருக்கும் தர்மபுரி மாவட்டத்தில் பாதயாத்திரை பயணித்தபோது, உழைக்க காத்திருக்கும் இந்த மக்களின் உண்மையான வளர்ச்சிக்காக, ஆட்சியில் இருந்த எந்தக் கட்சியும் முன்வரவில்லை என் ற கசப்பான உண்மை கண்முன் தெரிந்தது.

பாலக்கோடு

கரும்பு, தக்காளிக்கு என பாலக்கோடு புகழ்பெற்ற விவசாய பூமி. மொத்த உள்மாநில உற்பத்தியில் தர்மபுரி மாவட்டத்தின் பங்கு வெறும் 1.7 சதவீதம் மட்டுமே. ஆனால், மொத்த மாநிலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களின் பங்கு மட்டுமே, 34 சதவீதம்.இத்தனை ஆண்டுகளாக தர்மபுரி தொழில் வளர்ச்சி இல்லாமல் பின்தங்கி இருக்கிறது. தொழிற்சாலைகள் இல்லை; வேலைவாய்ப்பு இல்லை. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் ஜாதி அரசியல் செய்து, மாவட்டத்தையே கடைசியாக வைத்திருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாத தர்மபுரி மக்கள், ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

தருமபுரி

எல்லா மாவட்டங்களையும் போல, பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக, நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய், தர்மபுரிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பலன் அடைந்துள்ளனர்.தர்மபுரி -- மொரப்பூர் ரயில் பாதை, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 1941-ல் மூடப்பட்டது. 80 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தர்மபுரி - மொரப்பூர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் போராடியும், எந்த அரசும் செவி சாய்க்கவில்லை.ஆனால், பிரதமர் மோடி, தர்மபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு, 358.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடக்கின்றன. விரைவில் இந்த ரயில்வே பாதை பயன்பாட்டுக்கு வரும்.பாலக்கோடு தொகுதிக்கு தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளான, மகளிர் அரசு கலை அறிவியல் கல்லுாரி, பாதாள சாக்கடை திட்டம், பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம், தக்காளிக்கூழ் மற்றும் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை என எதும் நிறைவேற்றப்படவில்லை.

பென்னாகரம்

விவசாயத்துக்குப் பெயர்போன பென்னாகரம் பகுதியில், 4,000 ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. பல நுாற்றாண்டுகளாக சிறப்பாக விவசாயம் நடைபெற்றதற்கான சான்றாக, ஏர்கலப்பை பொறிக்கப்பட்ட நடுகல் கிடைத்தது பென்னாகரத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுகிறது.பிரதமர் மோடி, ஐ.நா., சபை வாயிலாக, 2023ல், உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்து, உலக அளவில் சிறுதானியங்களின் பெருமையை எடுத்துச் சென்றுள்ளார். இதனால், சிறு தானியங்களின் விற்பனை, 30 சதவீதம் அதிகரித்துள்ளது.வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்ததும், நாடு முழுதும் நதி நீர் இணைப்பு செயல்படுத்தப்படும். அதனால், பென்னாகரம், தர்மபுரி பகுதியில், 40,000 ஏக்கர் பரப்பளவில், சிறுதானிய விவசாயம் நடைபெறும்.

என்ன சொல்வது?

அரசியலையும் ஆன்மிகத்தையும் இணைத்து, தேச விடுதலைக்காகப் போராடிய தியாகி சுப்பிரமணிய சிவா, தன் இறுதி நாட்களை இந்த பகுதியில் தான் செலவிட்டார். பென்னாகரகம் பாப்பாரபட்டியில், பாரதமாதா கோவில் அமைக்க வேண்டும் என்பது, அவரின் லட்சியம்.பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவாவின் நினைவு மண்டபமும், பாரத மாதா கோவிலும், 2022 சுதந்திர தின அமுத பெருவிழாவின்போது பூட்டி வைக்கப்பட்டன. அந்த காரியத்தை செய்தது, தி.மு.க., அரசுதான்.தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி இருக்கிறது என்று, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது. பென்னாகரம் அருகே உள்ள அலக்கட்டுமலை, கோட்டூர்மலை, ஏரிமலை போன்ற கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. கழுதைகளைக் கொண்டுதான் அத்தியாவசிய பொருட்கள் மலை ஏற்றப்படுகின்றன.பிரதமர், கிராம சாலை திட்டத்திற்கு கொடுத்த நிதி வாயிலாக, இந்தப் பகுதி மக்கள் வசதிக்கு சாலை அமைத்திருக்கலாம். ஆனால், அதைகூட செய்யாத தி.மு.க., - எம்.பி.,யை என்னவென்று சொல்வது?இத்தனை ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாத தர்மபுரி மக்கள், ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.பயணம் தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

முருகன்
ஜன 09, 2024 22:23

மத்தியில் மட்டும் ஆட்சி மாறவே கூடாது அப்படி தானே


R.Balasubramanian
ஜன 09, 2024 17:45

லஞ்சம் வாங்கி ஒட்டு போடும் மக்களை தவிர மற்றவர்கள் திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போட மாட்டார்கள்.


Pikali
ஜன 09, 2024 15:12

No more blabbering 200 RS FELLOWS


Renukadevi,Srirangam
ஜன 09, 2024 14:09

Annamalai the Rising son of India. PM.Modi should groom such leaders.Annamalai along with Yogi and Hemanta Biswasarma are gen next for BJP.


கனோஜ் ஆங்ரே
ஜன 09, 2024 12:26

-///ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி...//// ஆமாம்... சார். ஆட்சி மாற்றம் வேண்டும் மத்தியில். கரெக்டா....? “நுணலும் தன்வாயால் கெடும்”...னு அய்யன் திருவள்ளுவர் சொன்னது உங்க செயல் நிரூபித்திருக்கிறது... வாழ்த்துக்கள் அண்ணாமலை... பாஜக ஆட்சி மாறி வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வரணும்... மத்தியில்.


Senthoora
ஜன 09, 2024 20:27

முதலில் பில்கெஹ் வழக்கின் தீர்ப்புக்கு, மோடியின் ஆட்சி ராஜினாமா செய்யவேண்டும் செய்வார்களா?


Arjun
ஜன 09, 2024 12:07

கண்டிப்பாக...மத்தியில் மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்


Godyes
ஜன 09, 2024 11:43

சுதந்திரம் கிடைத்த கால முதல் எந்த எம்எல்ஏ எம்பிக்களும் தொகுதிகளை சுற்றி பார்ப்பதிலும் ஒதுக்கப்படும் நிதி ஒழுங்காக மக்கள் முனை வரை சென்றடைகிறதா என்பதற்கான கால முறைகளில் கள ஆய்வும் செய்வதில்லை.


Godyes
ஜன 09, 2024 11:36

அந்தந்த தொகுதிகளின் மத்திய எம்பிக்களும் மாநில எம்எல்ஏக்களும் தொகுதி நலத்திட்டங்கள் ஒதுக்கிய நல நிதிகளுக்கேற்ப ஒழுங்காக முழுமையாக செலவிடப்படும் கால முறை அறிக்கைகளை மைய அரசிடம் தரும் திட்டம் செயல்படுத்தினால் ஊழல் செய்ய இடமில்லை.


spr
ஜன 09, 2024 08:07

தமிழக பாஜகவின் தலைவராக இருக்கும் இவர் கூட நிர்மலா சீதாராமனைப் போல மத்திய அரசின் திட்டங்களை புள்ளி விவரங்களுடன் சொல்ல முடியவில்லை மக்களுக்கு (குறிப்பாகத் தமிழக மக்களுக்கு) இதுவரை மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? அதன் பலன் என்ன? இனி என்ன செய்யப்போகிறது? என்றெல்லாம் சொல்ல விரும்பாமல் எத்தனை நாட்கள் இப்படி வாய்ப்பந்தல் போடுவார்?


அப்துல்வஹாப்,துவரங்குறிச்சி 621314
ஜன 09, 2024 13:59

இலை எடுப்பவன் தலையை எண்ணிய கதையாக அறிவாலயத்தில் அடைப்பு எடுக்கிற உனக்கு அண்ணாமலையை பற்றி பேச அருகதை இருக்கா?


பேசும் தமிழன்
ஜன 09, 2024 08:06

விடியல் வரும் என்று அவர்கள் சொன்ன பொய்யை நம்பி ஓட்டு போட்ட தமிழக மக்கள்... தலையில் அடித்து கொண்டு புலம்பி வருகிறார்கள்.... ஹிந்து மதத்தை அழிக்கும் வேலையை இந்த அரசு செய்து வருகிறது... திருந்த வேண்டியது அவர்கள் இல்லை... மக்களாகிய நாம் தான் !!!


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை