உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நட்டாவை சந்திக்கும் திட்டம்: பா.ம.க., - தே.மு.தி.க., ஏமாற்றம்

நட்டாவை சந்திக்கும் திட்டம்: பா.ம.க., - தே.மு.தி.க., ஏமாற்றம்

சென்னை: தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை கேட்கலாம் என்று கருதிய தே.மு.தி.க., -பா.ம.க.,வின் திட்டத்தை, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முறியடித்து விட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, பா.ஜ.,வட்டாரங்கள் கூறியதாவது: வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zhhqzxvw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்காக, அக்கட்சிதலைவர்களுடன், பா.ஜ., மேலிட தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர்களிடம்,'தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட, அதிக தொகுதிகளை ஒதுக்கினால், பா.ஜ., அணிக்கு வருகிறோம்' என, சிறிய கட்சிகள்தெரிவிக்கின்றன. அதோடு இல்லாமல் அக்கட்சிகள், பா.ஜ., தலைவர்கள் பேசிய விபரத்தை கசியவிட்டு, 'நாங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காமல், உங்கள் அணிக்கு வர வேண்டுமானால், அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என,தி.மு.க., - அ.தி.மு.க.,விடமும் பேசுகின்றன. இந்த சூழலில், அண்ணாமலையின், 200வது தொகுதி பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, ஞாயிறன்று பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தார். கிண்டி நட்சத்திர ஹோட்டலில், சில கட்சி தலைவர்கள், நட்டாவை சந்திக்கதிட்டமிட்டனர்.பா.ஜ.,வுடன் கூட்டணி பேசும் கட்சிகள், திராவிட கட்சிகளுடனும் பேசி வருவதை, உளவு துறை வாயிலாக கட்சி மேலிடம் அறிந்துள்ளது.விஜயகாந்த் வீட்டிற்கு சென்று, அவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்த நட்டா வருவார் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர்.அதேபோல், மரியாதை நிமித்தமாக நட்டாவை சந்திக்க பா.ம.க., நிர்வாகிகளும் திட்டமிட்டனர். ஆனால், நட்டா மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு காரணம், இரு கட்சி நிர்வாகிகளும் நட்டாவை சந்திப்பதன் வாயிலாக, தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் பேரம் பேச வாய்ப்பு ஏற்படும் என்று பா.ஜ., கருதியது. அதனால் தான், கூட்டணி கட்சி தலைவர்களை, நட்டா சந்திக்கும் திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Bala
பிப் 13, 2024 22:30

அவர்கள் திமுக அதிமுகவிடமே போகட்டும். பாஜகவுடன் இருந்தால் ஊழல் செய்ய முடியாது , பெட்டி வாங்கமுடியாது, திறமையும் நேர்மையும் இருப்பவர்களுக்கு மட்டுமே பாஜக மந்திரிசபையில் மந்திரி பதவி தரப்படும்


Raja Vardhini
பிப் 13, 2024 21:58

ஆஸ்தான நாயகன், கனவு கண்ணன், அண்ணாமலையின் தோழன் பன்னீர், நட்டாவை சந்திக்கவில்லையா?


குமாரவேல் பெருந்துறை
பிப் 13, 2024 19:31

பிரேமா பெட்டிகாக வெயிட்டிங் ~ பிஜேபி ~ பெட்டி கொடுக்க கூடாது ~ வாழ்க அண்ணாமலை ஜி


T முருகன் குகன் பழனி
பிப் 13, 2024 19:15

பிஜேபிடம் பெட்டி வாங்க கூட்டணி கட்சிக்கள் காத்து கிடக்கிறது ~ பெட்டி கொடுக்க கூடாது ~ தேர்தல் வந்தால் ~ கூட்டணி கட்சிகளுக்கு ~ பெட்டி வாங்குறதே பொழைப்பா போச்சி ~ பிஜேபி பெட்டி கொடுக்க கூடாது ~ ஜாக்கிரதை


Jysenn
பிப் 13, 2024 17:40

These two suitcase diravida parties are a disgrace not only to politics but to the entire Madras State.


INDIAN Kumar
பிப் 13, 2024 17:31

மோடிஜி ஆதரவு கட்சி பாஜக எதிர்ப்பு மூன்றாக பிரியப்போகிறது திமுக அதிமுக நாம் தமிழர் , 30% வாங்கினால் மாபெரும் வெற்றி இது நடக்கத்தான் போகிறது


Mahesh
பிப் 14, 2024 01:57

முற்றிலும் உண்மை


சிவ குரு நாதன் தஞ்சாவூர்
பிப் 13, 2024 16:33

பிஜேபி பெட்டி தராத என்று கூட்டணி கட்சிகள் காத்து கிடைக்கிறது ~ சில்லறை கட்சிகளுக்கு ~ பிஜேபி ~ பெட்டி கொடுக்க வேண்டாம் கூட்டணியும் வேண்டாம் ~


S S
பிப் 13, 2024 15:42

சரியான முடிவு. இந்த கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. தேர்தலுக்கு தேர்தல் பேரம் பேசுவதில் மன்னர்கள்


Rengaraj
பிப் 13, 2024 15:30

பா.ஜ.க வுக்கு தற்போது தமிழகத்தில் ஒரு எம்பி. சீட்டும் இல்லை. எனவே இழப்பதற்கு ஒன்றுமில்லை. கூட்டணி தேவையில்லை. சீமான் போன்று தனியாக நின்று தன்னுடைய வாக்குவங்கியை நிரூபிக்கவேண்டும். தற்போது தி.மு.க கூட்டணி 39 எம்பிக்கள் உள்ளனர். ஏதாவது ப்ரொயஜனம் கிட்டியதா தமிழகத்துக்கு. ? இல்லையே ?? தி.மு.க கூட்டணி நாற்பதையும் வென்றாலும் அவர்களால் தமிழகத்துக்கு ஒன்றும் கிடைக்கபோவது கிடையாது. மோடிமீது சேற்றை வாரிவிட்டு வோட்டு கேட்டு ஜெயித்து பிறகு அவர்களுடன் மத்திய மந்திரிசபையில் சேரவும் முடியாது. எம்பி. தொகுதி நிதியை மட்டுமே செலவழிக்க முடியும். தி.மு.க இல்லையென்றால் யார் எம்பி யானாலும் அந்த தொகுதி நிதி கிடைக்கும்.


Oviya Vijay
பிப் 13, 2024 15:20

நட்டாவா??? எனக்கு "நோட்டா" அபப்டின்னே கேக்குது... பிஜேபி அப்படின்னாலே அப்படி தான்பா ஞாபகம் வருது... என்னத்த செய்ய... ????????


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை