உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  4 வாரத்துக்கு முன் அனுமதி கேட்கணும்: விஜய்க்கு போலீசார் கண்டிஷன்

 4 வாரத்துக்கு முன் அனுமதி கேட்கணும்: விஜய்க்கு போலீசார் கண்டிஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: 'மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால், நான்கு வாரங்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்' என, த.வெ.க., தலைவர் விஜய்க்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, 'மக்கள் சந்திப்பு' என்ற பெயரில் நடத்திய பிரசார பயணத்தை, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நிறுத்தி வைத்துள்ளார். தற்போது அந்த பயணத்தை, வரும் டிச., 4 முதல் சேலத்தில் இருந்து துவங்க முடிவு செய்து, போலீஸ் அனுமதி கேட்கப்பட்டது. த.வெ.க., நிர்வாகிகள் அளித்த மனுவை பரிசீலித்த சேலம் டவுன் உதவி கமிஷனர் சரவணன், பதிலளித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதை, சேலம் மாவட்ட த.வெ.க., செயலர் பார்த்தீபன் பெற்றுக் கொண்டார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: த.வெ.க., அனுமதி கேட்ட டிச., 4ல் கார்த்திகை தீப திருவிழாவுக்காக, வெளி மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு செல்வதால், போதுமான போலீசாரை நியமிக்க முடியாது. விஜயின், 'மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி'யில் எத்தனை பேர் பங்கேற்பர் என குறிப்பிடவில்லை. சேலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து எத்தனை தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் பங்கேற்பர் என்ற விபரமும் இல்லை. வரும் காலங்களில், த.வெ.க., தலைவர் விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற நினைத்தால், நிகழ்ச்சி தேதியில் இருந்து, நான்கு வாரங்களுக்கு முன்பே மனு அளிக்க வேண்டும். குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனு அளித்தால், அதன் மீது நடவடிக்கை எடுத்து தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை