உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கேப்டன் ரத யாத்திரைக்கு அனுமதி தர போலீஸ் தாமதம்; தே.மு.தி.க., பரிதவிப்பு

கேப்டன் ரத யாத்திரைக்கு அனுமதி தர போலீஸ் தாமதம்; தே.மு.தி.க., பரிதவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கேப்டன் ரத யாத்திரைக்கு போலீஸ் அனுமதிக்காக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை பரிதவிப்புடன் காத்திருக்கிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணியில் இணைய, தே.மு.தி.க., தலைமை முடிவு செய்துள்ளது. இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்து, கூட்டணி பேச்சுக்கு காத்திருக்கின்றனர். இதற்கு இடைப்பட்ட நேரத்தில், கட்சியை பலப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, ஆகஸ்ட் 3 முதல், சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியில் தன் பயணத்தை துவக்க உள்ளார். இதற்கு 'கேப்டன் ரத யாத்திரை' என்றும், 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என, இரண்டு பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், கடலுார் மாவட்டத்தில், தே.மு.தி.க., மாநாடு நடக்க உள்ளது. இதில் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரேமலதாவின் சுற்றுப்பயணத்தின்போது, இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட, சிறிய ரதத்தை பயன் படுத்த உள்ளனர். அதேநேரம், திறந்த வாகனத்தில் நின்றபடி, பிரேமலதா மற்றும் கட்சியினர் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர். இதற்கு அனுமதி கேட்டு, டி.ஜி.பி., அலுவலகத்தில், தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், ஏற்கனவே மனு அளித்துள்ளார். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், தே.மு.தி.க., தலைமை பரிதவித்து வருகிறது.

திட்டமிட்டபடி பிரசாரம் தே.மு.தி.க., வெளியிட்ட அறிக்கை:

சட்டசபை தேர்தலுக்காக, தமிழகம் முழுதும், முதற்கட்ட சுற்றுப்பயணத்தை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா துவங்க உள்ளார். வரும் 3ம் தேதி மதியம் 2:00 மணிக்கு, கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. முதல் பிரசாரத்தை, கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவிலில், மாலை 4:00 மணிக்கு துவக்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
ஜூலை 30, 2025 19:10

ரத யாத்திரைக்கு கூட்டமே இல்லாதுபோகுமாதலால் அரசே அதற்கு அனுமதி மறுத்துள்ளது.போலீசுக்கு எந்த காவல் பந்தோபஸ்து வேலைகள் இல்லாமல் இருக்குமாதலால் இந்த ரத யாத்திரை ரத்து செய்யப்படுமாம் . அனுமதியும் கிடைக்காதாம்.


Chanakyan
ஜூலை 30, 2025 17:06

கட்சி நடத்த பணம் ஏது? ஒரு தேர்தலில் பணம் வாங்க வேண்டியது. அடுத்த தேர்தல் வரை வண்டியை ஓட்ட வேண்டியது. மீண்டும் அடுத்த தேர்தலில் பணம் வாங்க வேண்டியது. நல்ல விளையாட்டு. பத்து சதவீத வாக்கு அரை சதவீதமாக தேய்ந்தது இதனால் தான்.


பிரேம்ஜி
ஜூலை 30, 2025 14:19

ரதயாத்திரையில் ஒரு இருபது பேர் போக அனுமதியா?


Ramesh Sargam
ஜூலை 30, 2025 13:23

கேப்டன்... விமானப்படையில் கேப்டன் ஆ, கிரிக்கெட், ஹாக்கி போன்ற ஏதாவது ஒரு டீமுக்கு கேப்டன் ஆ.. ?


Padmasridharan
ஜூலை 30, 2025 05:00

இரண்டு பக்கமும் கதவை திறந்து வைக்க வேண்டாம் சாமி. யாரும் கண்டுக்க மாட்டாங்க இந்த அம்மாவை. கேப்டன் வீட்டில் விஜயம் செய்யும் கட்சி சேர்ந்தாலே போதும் பெண் ஆதரவு கிடைத்துவிடும்


SUBBU,MADURAI
ஜூலை 30, 2025 07:39

இதற்கு கேப்டன் ரத யாத்திரை என்று பெயர் வைப்பதை விட பேராசை பிடித்த பிரேமலதாவின் குடும்ப ரத யாத்திரை என்ற பெயரை சூட்டலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை