உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வீடு விற்பனை ஒப்பந்த பதிவு: அமலாகிறது புதிய மாற்றம்

வீடு விற்பனை ஒப்பந்த பதிவு: அமலாகிறது புதிய மாற்றம்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனையின் போது, நிலத்தின் பங்கு மற்றும் கட்டடத்துக்கு என, தனித்தனி பத்திரங்கள் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.நிலம் மற்றும் கட்டட மதிப்பை, ஒரே பத்திரத்தில் குறிப்பிட்டு, பதிவு செய்வது கட்டாயமாகி உள்ளது. இதற்காக, தெரு வாரியாக கட்டடங்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கட்டுமான திட்டம் துவங்கும் நிலையில், வீடு விற்பனை செய்யும் போது, நிலம் மட்டுமே தயாராக இருக்கும். கட்டப்படாத நிலையில், கட்டடத்தின் மதிப்பை பத்திரத்தில் எப்படி குறிப்பிடுவது என்ற குழப்பம் எழுகிறது.இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கர்நாடகா மாநிலத்தில் உள்ள நடைமுறையை பின்பற்றியே, ஒரே பத்திரத்துக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அங்கு கடைப்பிடிக்கப்படும் பிற வழிமுறைகளையும் அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவோர், ஆரம்ப நிலையில் விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்கின்றனர். இதற்கு, 20,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கட்டுமான பணிகள் முடியும் நிலையில், நிலம், கட்டட மதிப்புகள் குறிப்பிடப்பட்டு, கிரைய பத்திரம் பதிவு செய்யப்படும். அப்போது, விற்பனை ஒப்பந்த பதிவுக்கு செலுத்திய கட்டணம் கழிக்கப்படும்.இதுபோன்ற நடைமுறையை, தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Vel vel
ஜன 14, 2024 11:14

பதிவுத்துறை அமைச்சரை மாற்றவும் அப்படி இல்லை எனில் ஆட்சியை மாறும்.


Vel vel
ஜன 14, 2024 11:12

தமிழக முதல்வரே நினைச்சாலும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தியை மாற்ற முடியாது. அதான் இப்போது விதி.....


V GOPALAN
ஜன 13, 2024 22:21

Why you should copy other state procedure. They are tematised. Here TN Govt itself will act as a broker for everything


rama adhavan
ஜன 13, 2024 19:12

இன்றைய அறிவிப்பு நாளைய வாபஸ்.


Varadarajan Nagarajan
ஜன 13, 2024 11:35

பத்திர பதிவிற்கு செலுத்தும் கட்டணத்தைவிட பலமடங்கு லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது. முதலில் இதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். லஞ்சம் பெற்றவர்களை இடமாறுதல் செய்யாமல் தனியார் நிறுவனர்களில் இருப்பதுபோல் வேலையே விட்டு தூக்கவேண்டும்.


Suppan
ஜன 13, 2024 16:43

அய்யா மேலிடம் வரை அது பாயும்பொழுது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறீர்களா? அவ்வளவு அப்பாவியா நீங்கள்? பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சர் பல கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது சாத்தியமில்லையே .


Raghavan
ஜன 13, 2024 18:53

ஒரு கோடி இரண்டு கோடி அல்ல நாற்பது கோடி செலவு. அதைத்தவிர பிரமாண்டமான ஒரு கல்யாணமண்டபம் கட்டி முடித்து திறப்பு விழாவுக்கு காத்துக்கொண்டு இருக்கிறது.


சூரியா
ஜன 13, 2024 06:12

முழுமையாகச் சிந்தித்தபிறகு வழிமுறைகளை உருவாக்காமல், இப்படி, துண்டு துண்டாக மாற்றங்களை அறிவித்து எல்லோரையும் குழப்புகிறது இந்த அரசு. ஒரு Transaction ற்கு எத்தகைய ஆவணம் சரியாக இருக்கும் என்பதை அரசு தீர்மானிக்கக் கூடாது. அந்த Transaction களைச் செய்பவர்கள் தீர்மானிக்க வேண்டும். அவ்வாவணங்களைப் பதிவு செய்யக் கட்டணத்தை நிர்ணயம் செய்வது அரசின் வேலையாக இருக்க வேண்டும்.


sridhar
ஜன 13, 2024 10:21

கிளம்பாக்கம் பஸ் நிலையம் போல.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை