உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தேர்தல் கமிஷன் மீதான மரியாதையே போச்சு: முதல்வர் ஸ்டாலின் எரிச்சல்

 தேர்தல் கமிஷன் மீதான மரியாதையே போச்சு: முதல்வர் ஸ்டாலின் எரிச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தேர்தலில் வெற்றி பெறாதோரின் நம்பிக்கையையும் பெறும் அளவுக்கு, தேர்தல் கமிஷன் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்த முன்வர வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: பீஹார் சட்டசபை தேர்தல், அனைவருக்கும் பாடங்களை வழங்கி உள்ளது. பெரும் வெற்றிகளை பெற்றுள்ள மூத்த தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமாருக்கு பாராட்டுகள். பீஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அவருக்கு வாழ்த்துகள். ஓயாமல் பரப்புரை மேற்கொண்ட இளந்தலைவர் தேஜஸ்விக்கும் பாராட்டுகள். நலத்திட்ட வினியோகம், சமூக மற்றும் கொள்கை கூட்டணிகள், நாம் சொல்ல வேண்டிய அரசியல் ரீதியான செய்தியை, தெளிவாக மக்களிடம் சொல்வது, இறுதி ஓட்டுகள் பதிவாகும் வரை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றுவது என பலவற்றையும், ஒரு தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. 'இண்டி' கூட்டணியில் உள்ள அனுபவமிக்க தலைவர்கள், இத்தகைய செய்தியை உணரவும், இனி எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவும் ஆற்றல் பெற்றவர்கள். அதே வேளையில், இத்தேர்தல் முடிவுகள், தேர்தல் கமிஷன் குளறுபடிகளையும், பொறுப்பற்ற செயல்களையும் இல்லாமல் ஆக்கி விடாது. தேர்தல் கமிஷன் மீதான மரியாதை, இதுவரை இல்லாத அளவுக்கு கீழிறங்கி உள்ளது. வலுவான, நடுநிலையான தேர்தல் கமிஷனை கோருவது, நம் நாட்டு மக்களின் உரிமை. தேர்தலில் வெற்றி பெறாதோரின் நம்பிக்கையையும் பெறும் அளவுக்கு, தேர்தல் கமிஷன் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்திட முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Balasubramanian
நவ 16, 2025 15:09

மக்களுக்கு உங்கள் கட்சி மீது உள்ள நம்பிக்கை மரியாதை போயே போச்சு - அதைப் பற்றி கவலைப் படுகிங்கள் பாஸ்


கரீம் பாய் ஆம்பூர்
நவ 16, 2025 14:26

ஒன்றாக வாழும் மக்களிடையே பிரிவினையை தூண்டும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் பிளாஸ்டிக் சேர்...ஹும் கேவலம். கொஞ்சம் கூட மரியாதை இல்லை. தமிழன் என்று சொல்ல வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது


Sun
நவ 16, 2025 10:41

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்கு தாங்கள் , தங்கள் தங்கை கனிமொழி இருவரது உழைப்பும் ஒரு முக்கிய காரணம் என பீகார் மக்கள் பேசிக் கொள்கிறார்களே?


Thiagaraja boopathi.s
நவ 16, 2025 09:03

வரப்போகும் தோல்விக்கு காரணம் கிடைத்தது


தனவேல்
நவ 16, 2025 08:53

திமுக விழிப்புடன் இருக்க வேண்டும்.... இல்லை என்றால் தேர்தல் ஆணையம் மூலம் பிஜேபி தில்லு முள்ளு வேலை செய்யும்


vivek
நவ 16, 2025 12:49

போய் கேசு போடு


krishna
நவ 16, 2025 12:55

WELCOME TO 200 ROOVAA OOPIS CLUB.


Ranganathan
நவ 16, 2025 08:43

ஈவேரா வழியில் தேர்தலை புறக்கணிக்கலாமே....


Anantharaman
நவ 16, 2025 08:34

உங்கள் கட்சியின் ஆட்சி மீதும் நம்பிக்கை போய் வருஷக் கணக்காகிறதே. தெரியவில்லையா??


ManiK
நவ 16, 2025 08:17

ரொம்ப பொங்காதீங்க சி.எம். ஐயா. உங்க குடும்பம் கிட்ட அனுமதி வாங்கித்தான் தேர்தல் கமிஷன் வேலை செய்யவேண்டுமா?


Ramesh Sargam
நவ 16, 2025 07:12

திமுக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்றால் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சிறந்தவர்கள். அவர்கள் மீது மரியாதை இருக்கும். பீகார் போன்று படு தோல்வி அடைந்தால், அவர்கள் மீதான மரியாதை போய்விடும். நேற்று தலை சுற்றுகிறது என்றார். இன்று எரிச்சல். நாளை வேறு ஏதாவது பிரச்சினை.


Alagiri
நவ 16, 2025 06:31

Is he aware of Thirumangalam formula and the role of election commission?


மேலும் செய்திகள்