உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.167 கோடி தங்கம் கடத்தல் விவகாரம்: சிக்குகின்றனர் சுங்கத்துறை அதிகாரிகள்

ரூ.167 கோடி தங்கம் கடத்தல் விவகாரம்: சிக்குகின்றனர் சுங்கத்துறை அதிகாரிகள்

சென்னை: தங்கம் கடத்தல் விவகாரத்தில், பா.ஜ., பிரமுகர் பிரித்வி மற்றும், 'யு டியூபர்' சபீர் அலியுடன் தொடர்பில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.வெளிநாடுகளில் இருந்து விமானம் வாயிலாக சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவது புதிதல்ல. ஆனால், கடந்த, 60 நாட்களில் சென்னை விமான நிலையத்தில், 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட பின்னணி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில், கடைகளை நடத்துவதற்கு உரிமம் பெற்ற வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனத்தில், பா.ஜ., நிர்வாகி பிரித்வி இயக்குனர் பொறுப்பில் இருந்தார். அவரிடம், 'யு டியூப்' சேனல் நடத்தி வரும் முகமது சபீர் அலி பேசி வந்துள்ளார். இதன்பின், விமான நிலையத்தில் கடை நடத்துவதற்கு, பிரித்வி உதவி செய்துள்ளார்.இதை மறுக்கும் பிரித்வி, 'கடை நடத்துவது தொடர்பாக, சபீர் அலி என்னை தொடர்பு கொண்டது உண்மை. ஆனால், அவரிடம் எங்கள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாகிகளை பாருங்கள் என்று தான் சொன்னேன்' என்கிறார்.'ஒரு முறை கூட சபீர் அலியை நேரில் பார்த்தது இல்லை' என்றும் கூறுகிறார். தற்போது, பிரித்வி வெளிநாட்டில் இருப்பதால், நாடு திரும்பியதும் நேரில் ஆஜராகும்படி கூறியுள்ளோம். சபீர் அலி, விமான நிலையத்தில் கடை நடத்த, வித்வேதா நிறுவனத்துக்கு 77 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இது ஹவாலா பணம் என, தெரியவந்துள்ளது. இந்தக் கடையே, பிரித்விக்கு சொந்தமானது என்ற தகவலும் உள்ளது. சபீர் அலி உள்பட எட்டு பேருக்கு, விமான நிலைய அடையாள அட்டை பெற்றுக் கொடுத்ததில் பிரித்வியின் பங்கு உள்ளது.இந்த அடையாள அட்டையை அவ்வளவு எளிதில் பெற முடியாது. நன்னடத்தை, குடும்ப பின்னணி, குற்ற வழக்கில் சிக்கிய நபரா என, தீவிர விசாரணைக்கு பின்னரே வழங்கப்படுவது வழக்கம். இதற்கு போலீசின் தடையில்லா சான்றும் அவசியம். அடையாள அட்டை இருந்தால், விமான நிலையத்தில் எந்த பகுதிக்கும் சென்று வரலாம்; கெடுபிடி இருக்காது.இதைப் பயன்படுத்தி, தங்கத்தை கடத்தியுள்ளனர். விசாரணையில், சென்னை பல்லாவரத்தில், சபீர் அலி உள்ளிட்ட எட்டு பேர், மலக்குடலில் தங்கம் கடத்துவது தொடர்பாக பயிற்சி பெற்றுள்ளனர்.சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணியர் மலக்குடலில் தங்கம் கடத்தி வந்து, கழிப்பறையில் வைத்துள்ளனர். அதை சபீர் அலியின் கடை ஊழியர்கள் மறைத்து, வெளியே கொண்டு சென்றுள்ளனர்.சுங்கத்துறை மற்றும் விமான நிலைய வர்த்தக பிரிவை சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் பணியில் இருந்த போது தான், தங்கக் கடத்தல் நடந்துள்ளது. விமான நிலையத்தில், பகல், இரவு நேரங்களில் துல்லியமாக படம் பிடிக்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன; உளவு அமைப்புகளின் கண்காணிப்பும் உள்ளது.இதனால், அதிகாரிகள் துணையின்றி தங்கக் கடத்தல் சாத்தியம் இல்லை. கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகளிடம், விசாரணை நடந்து வருகிறது. கடத்தல் தங்கத்தை பெற்றுக் கொண்ட நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அறிக்கை கேட்கும் மத்திய அமைச்சர்

'கடத்தல் சம்பவத்தில், வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனம், அதில் பணியாற்றிய பா.ஜ., பிரமுகர் பிரித்வியின் பங்கு, பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து ஒளிவுமறைவின்றி அறிக்கையாக தர வேண்டும்' என, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, மத்திய பெண் அமைச்சர் ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 05, 2024 11:53

பிஜேபியின் நேர்மை இங்கே தெரிந்துவிடும். இதுவரையில் பல்லாயிரம் கோடிகள் மதிப்புள்ள தங்கம் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது. இது அதிகாரிகளின் உடந்தையில்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். என்ன தைரியத்தில் அவர்கள் இதுபோன்ற தேச விரோத செயலில் ஈடுபடுகிறார்கள்? சட்டத்தை வளைக்க முடியும் என்ற நம்பிக்கைதான். பிஜேபி இதில் எடுக்கும் கடும் நடவடிக்கைதான் அவர்கள் நேர்மையானவர்களா இல்லையா என்பதை காட்டும். இதில் எடுக்கப்படும் நடவடிக்கையை பார்த்து இனி அரசாங்கத்தில் யாருக்கும் தப்பு செய்யும் எண்ணமே வரக்கூடாது. அதை செய்வார்களா என்று பார்ப்போம்.


mei
ஜூலை 05, 2024 11:43

கடத்தல் மன்னர்கள்


Rajkumar
ஜூலை 05, 2024 11:42

அனைவரும் பிற மாநிலத்தை சார்ந்தவர்கள் ..மத்திய அரசாங்கம் வேண்டும் என்றே நியமித்தார்கள்..அதிகாரிகள் தான் முக்கிய காரணம் ..அரசாங்க அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தால் அனைத்து குற்றங்களும் ஓரளவு தடுக்கப் பட்டு விடும்..


ஆரூர் ரங்
ஜூலை 05, 2024 12:06

தமிழக அரசின் உயரதிகாரிகள் பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள். என்ன செய்யலாம்?


ayen
ஜூலை 05, 2024 10:16

சுங்க துரை அதிகாரிகளுக்கு எனது பாராட்டு. கட்சி, மதம் என்று பாறாமல் எல்லார் மீதும் விசாரனை நடத்தியிருக்கிறார்கள்


ராம்ஜி
ஜூலை 05, 2024 06:30

சுங்கத்துறை அதிகாரிகள் பெரும்பாலோர் வடக்சாக , மத்திய அரசால் நியமிக்கப் பட்டவர்களாச்சே கோவாலு. சௌக்கிதார் எங்கே போனாரு?


தங்கபிரபு
ஜூலை 05, 2024 06:28

விஞ்ஞான முறையில் கட்சி பேதமில்லாமல் மத ஒற்றுமையுடன் தங்கம் கடத்தல். குடலில் தங்கம் கடத்த தனிப்பயிற்சி வேற.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை