உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மழை ஆய்வு பணியில் உதயநிதி தனி ரூட்; ஆளும் கட்சி நிர்வாகிகள் அப்செட்

மழை ஆய்வு பணியில் உதயநிதி தனி ரூட்; ஆளும் கட்சி நிர்வாகிகள் அப்செட்

பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், துணை முதல்வர் உதயநிதி தலைமையில், சமீபத்தில் சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்தது.

அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், உதயநிதி பேசியுள்ளதாவது:

நாம் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும். மழை பெய்த பல இடங்களுக்கு சென்றேன். தொடர் மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கொஞ்ச நேரம் வெயில் அடித்தால், அந்த நீர் வடிந்து விடும். மழைநீர் தேங்கும்போது, மக்கள் உங்களை அழைத்தால், உடனே அங்கு சென்று மக்களுக்கு உதவுங்கள். அப்படி அழைத்தால், மக்களுக்கு உதவி தேவை என்று அர்த்தம். யாரும் கோபத்தை காட்ட, உங்களை கூப்பிட மாட்டார்கள். முதல்வர், அமைச்சர்களின் கவனத்துக்கு சென்றால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று, மக்கள் நம்புகின்றனர். அந்த வகையில், இந்த மழையில் மக்களோடு மக்களாக நாம் நின்றோம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இதில், 'நாம் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும்' என, உதயநிதி பேசியுள்ளார். ஆனால், அவரே முன்மாதிரியாக செயல்படாமல், தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில், தனியாக சென்று, மழை, வெள்ளம் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்கிறார். கட்சி நிர்வாகிகள் யாரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை என, அவரது கட்சியினர் புகார் வாசிக்கின்றனர்.

இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

தென்சென்னை பகுதியில், நீர்வழிப் பாதைகளில் நடக்கும் சீரமைப்பு பணிகளை, உதயநிதி பார்வையிட்டார். பழைய மகாபலிபுரம் சாலை, பள்ளிக்கரணை பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அதிகாரிகளை மட்டுமே அழைத்து சென்றார். மாவட்ட அமைச்சர் சுப்பிரமணியன், மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள், பகுதி, வட்ட செயலர்கள் என, எந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு இல்லை. தனி நபராக உதயநிதி சென்று வந்ததை, கட்சி நிர்வாகிகள் ரசிக்கவில்லை. உதயநிதியுடன் நாங்களும் பணியில் இருந்தால் தானே, எங்களை அதிகாரிகளும், மக்களும் மதிப்பர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதெல்லாம் முக்கியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.ஏ.எஸ்.,கள் அலைக்கழிப்பு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து, கடந்த 21ம் தேதி தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், தலைமை செயலர், நிதித் துறை செயலர் உள்ளிட்ட, துறை செயலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உதயநிதி முகாம் அலுவலகத்தில், அவரது தலைமையில், மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமை செயலகம் கூட்டத்தில் பங்கேற்ற, அதே ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், துறை செயலர்களும், இதிலும் பங்கேற்றனர். முதல்வர் நடத்திய கூட்டத்தில் உதயநிதியும் பங்கேற்ற நிலையில், அவரது தலைமையில் தனிக் கூட்டம் நடத்தியது, தங்களை அலைக்கழிக்கும் செயல் என, ஐ.ஏ.எஸ்., வட்டாரத்தில் பேசப்படுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

spr
அக் 25, 2025 18:12

"உதயநிதியுடன் நாங்களும் பணியில் இருந்தால் தானே, எங்களை அதிகாரிகளும், மக்களும் மதிப்பர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதெல்லாம் முக்கியம்." உண்மையில் மக்களுக்கு சேவை செய்ய அதிகாரிகளும் ஊழியர்களும் முக்கியம் அரசியல்வியாதிகளும் தலைவர்களும் அதனை நடைபெற விடாமல் செய்து தங்களுக்கு விளம்பரம், ஆதாயம் தேடுவதிலேயே குறியாக இருப்பார்கள் அவர்களே சொல்லிவிட்டார்கள். இன்றைய அரசு நிர்வாகம் முறையாக இயங்காத காரணத்தால் தொகுதி சட்டமன்ற வார்டு உறுப்பினர் போனால் பிரச்சினைதான் விளையும் துணை முதல்வர் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் பணிகளை வார்டு உறுப்பினர் கெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


MP.K
அக் 25, 2025 15:43

எதையாவது குறை கூறிக்கொண்டே இருக்க வேண்டும்


Balasubramanian
அக் 25, 2025 14:56

சற்று வெயில் அடித்தால் மழை நீர் காய்ந்து விடும் போன்ற இடங்களுக்கு விசிட் அடித்து உள்ளார் துணை முதல்வர்! அடுத்த வெயில் காலம் வரை மழை நீர் வடியாத இடங்களுக்கு மற்ற கட்சி செயலாளர்கள் செல்லட்டும்! ஓட்டு போடும் மக்களைச் சந்தித்து வாக்கு பெற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு தானே!


N S
அக் 25, 2025 12:13

முதல்வர் அடையார் முகத்துவாரம் சென்றார் என்றால், உதயநிதி சென்னையில் மழை பெய்த பல இடங்களுக்கு செல்வார். சென்ற இடங்களில், தொடர் மழையால் சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. சேதம் இல்லை. அவர் ஒரு ரூட், இவர் ஒரு ரூட். இதனிடையில் ஐ எ எஸ் அதிகாரிகள் அலைக்கழிப்பு. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.


பாரத புதல்வன்
அக் 25, 2025 12:08

நெருப்பின் சூடு பட்டால் தான் புரியும்.... அது போல மக்கள் இப்போ சூடு பட்டு ரணமாகி வேதனையை அனுபவித்து வருகிறார்கள்... அதிகாரிகளுக்கும் அதே நிலை தான்..... விரைவில் குடியல் மாடல் ஒழிந்து, புதிய கலாச்சார பாரத பண்பாட்டு வளர்ச்சி ஆட்சி மலரும்.


Mr Krish Tamilnadu
அக் 25, 2025 11:21

புரியவில்லை. மக்கள் பணியை விட, கழகத்தையும் அழைத்து செல்லும் பணி தான் காலத்திற்கு கட்சியையும், கட்சியில் நம்மையும் வாழ வைக்கும் என்று. சரி உதாரணங்கள் கூறுவோம். அம்மாவின் முதலமைச்சர் நிழல், பன்னீர் செல்வம் அவர்கள் தானே ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தனியே சென்றது. கட்சியிடம் அதிருப்தி தந்தது. அடுத்து, தவெக தலைவர். கரூருக்கு பிறகு முடங்கி போனார் ஏன்?. தான் சொல்வதை சரியாக மற்றவர்கள் செய்ய, செய்ய தான் முன்னேறி போகலாம். என்பது அவர் கணக்கு. இப்போது அனைத்தையும் அவர் மட்டுமே சிந்திக்க வேண்டும், மற்றவர்கள் தலையாட்டிகள் என தெரிய வரும் போது மொத்தத்தில் வெறுப்பு தான் வரும். அடுத்து, சாதாரண பைப் வேலையில் கூட, வீட்டு உரிமையாளரை இன்று திருப்தி படுத்த முடியவில்லை. ஆகவே மக்கள் பணி, தேவை என்ன?. செய்த கணக்கும் மற்றும் நாம் சகாக்களுடன் குழு போட்டோ. இனி, துணை சம்பந்தம் உள்ளவர்களை ஸ்பாட்டுக்கு வர சொல்லுவார். ஓ.கே.


Modisha
அக் 25, 2025 08:37

Photo shoot க்காக விரலை அப்படி இப்படி காண்பித்து ஏதோ விஷயம் தெரிந்தவர் போல் நாடகம் ஆடுகிறார் .


suresh Sridharan
அக் 25, 2025 08:01

என்ன எழுதி இருக்கு???


குடிகாரன்
அக் 25, 2025 07:02

மாண்புமிகு மாரி செல்வராஜ் அவர்கள் கூட வரவில்லையா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை