உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருச்சி சிவா பெயர் கசிந்தது எப்படி: சரத் பவார் செய்த குழப்பம்

திருச்சி சிவா பெயர் கசிந்தது எப்படி: சரத் பவார் செய்த குழப்பம்

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ., கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 'இண்டி கூட்டணியின் சார்பாக, திருச்சி சிவா நிறுத்தப்படலாம்' என, மீடியாவில் செய்திகள் வெளியானாலும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.சிவாவின் பெயர் எப்படி முதலில் வெளியானது? 'இதற்கு காரணம் சரத் பவார் தான்' என்கின்றனர். ராதாகிருஷ்ணன் பெயரை பா.ஜ., அறிவித்த உடனேயே, சிவாவின் பெயரை சிபாரிசு செய்துள்ளார் பவார்.'ஒரு தமிழரை எதிர்த்து, இன்னொரு தமிழர் போட்டியிட்டால் தி.மு.க.,விற்கும், இண்டி கூட்டணிக்கும் நல்லது' என, பவார் கூறினாராம். இதையடுத்து, இந்த செய்தி மீடியாவில் கசிந்தது; சிவா உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். டில்லி மீடியா நண்பர்களிடம், 'இந்த செய்தியை பெரிதுபடுத்துங்கள்' என அவர் சொல்ல, டில்லி வட்டாரங்களில் சிவா ஹீரோவாகிவிட்டார்.பவாரின் மகள் சுப்ரியா சுலேவும், கனிமொழியும் நெருங்கிய தோழிகள். சுப்ரியாவிற்கு கனிமொழி போன் செய்து, 'எதற்கு சிவாவின் பெயரை அப்பா சிபாரிசு செய்தார்; எங்களை கேட்டிருக்க வேண்டாமா?' என, கேட்டாராம். இந்த விவகாரம் குறித்து எதுவுமே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாதாம். சிவாவின் பெயர் மீடியாவில் வந்ததும், 'ஷாக்' ஆனாராம் முதல்வர்.'விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தான் எங்கள் வேட்பாளர்' என, தி.மு.க., தரப்பில் சொல்லப்பட, அண்ணாதுரையின் பெயரும் மீடியாவில் இடம் பெற்றது. கடைசியில், ஆந்திராவை சேர்ந்த சுதர்ஷன் ரெட்டி இண்டி கூட்டணியின் வேட்பாளர் ஆனார். 'முதல்வர் ஸ்டாலினின் பிடியில் தி.மு.க., இயங்குகிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறதே' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SP
ஆக 24, 2025 19:07

நல்ல வேலை திருச்சி சிவாவை அறிவிக்கவில்லை, அறிவித்திருந்தால் அதைவிட கேவலம் இந்தியாவுக்கு வேறு இல்லை.


SUBBU,MADURAI
ஆக 24, 2025 16:00

இந்த சரத்பவார் பத்து கருணாநிதிக்கு சமமானவர் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும்


subramanian
ஆக 24, 2025 11:18

சரத்பவார் மன அழுத்தம் காரணமாக குழம்பி விட்டார்


ஆரூர் ரங்
ஆக 24, 2025 09:39

கருணாநிதியே எந்தத் தமிழரும் தன்னைவிட உயர்ந்த பதவிக்குப் போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.(மூப்பனார் அவர்களை வாரி விட்டது நினைவிருக்கலாம்,).மகனுக்கே தலைவர் பதவியை விட்டுத்தரவில்லையே. அதே ரத்தமான ஸ்டாலின் வேறெப்படி நடப்பார்?.


kamal 00
ஆக 24, 2025 05:07

ஆக இவரு தான் திமுகவுக்கு ஆசைக்காட்டி தோசை குடுத்தவர் போல.... விடுங்க நேரு மாமா இனி கோப பட மாட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை