பீஹார் தேர்தல் பிரசாரத்தில், 'பீஹாரை சேர்ந்த கடின உழைப்பாளிகளை, தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க., தவறாக நடத்துகிறது' என பிரதமர் மோடி பேசியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=83h8rf4z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்படியெல்லாம் தி.மு.க., செய்யாது என்ற ரீதியில், தி.மு.க., தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, அதிரடியாக பேசியுள்ளார் அமைச்சர் நேரு. இது, தி.மு.க.,வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 'என் வாக்குச்சாவடி; வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் நேரு பேசிய தாவது: பீஹாரிகள் உள்ளிட்ட வட மாநிலத்தவர், மூன்று மாதங்கள் ஒரே இடத்தில் தங்கியிருந்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும். ஆனால், அவர்கள் இடம் மாறிக் கொண்டே இருப்பர். எனவே, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என கட்சியினர் அதிகாரி களிடம் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். முஸ்லிம்களின் ஓட்டுகள், ஒன்று கூட, வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்போரை தவிர்க்க, தேர்தல் அலுவலர்கள் திட்டமிட்டால், தடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் 100, 200 வாக்காளர்களை மொத்தமாக சேர்த்தால், அதை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
'நான் எந்த தவறும் செய்யவில்லை'
அமைச்சர் நேரு அளித்த பேட்டி: எனக்கு சொந்தமான இடத்தில், நடத்திய சோதனையில், சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறும், தமிழக போலீசாருக்கு அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப் படையில் தமிழக போலீசார், அந்த ஆவணங்களை ஆய்வு செய்து, நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்ந்த பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததா என விசாரிப்பர். நான் எந்த தவறும் செய்யவில்லை. தி.மு.க.,வை மிரட்ட, பா.ஜ., அமலாக்கத்துறை வாயிலாக, இது போன்ற காரியங்களை செய்கிறது. தேர்தல் நேரத்தில், அமலாக்கத்துறையை பயன்படுத்தி, இப்படி பரபரப்பு கிளப்புவதன் வாயிலாக, எதிர்கட்சியினர் எங்களை நோக்கி விமர்சனங்களை வீசுகின்றனர். இதை எதிர்பார்த்துத்தான், பா.ஜ., தரப்பில் அமலாக்கத்துறையினரை ஏவி விட்டுள்ளனர். விசாரணை முடிவில், குற்றமற்றவர்கள் என நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -