உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக பா.ஜ., தலைவர் தேர்வு; கடும் குழப்பத்தில் கட்சி மேலிடம்

தமிழக பா.ஜ., தலைவர் தேர்வு; கடும் குழப்பத்தில் கட்சி மேலிடம்

தமிழக பா.ஜ., தலைவரை தேர்வு செய்வதில், அக்கட்சி மேலிடம் பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும், தேசிய தலைவர் தேர்வான பின்னரே, தமிழக தலைவருக்கான தேர்தல் நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பா.ஜ., உட்கட்சி தேர்தல், கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகிறது. தேசிய தலைவர் தேர்தலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநில தலைவர் தேர்தலும்தான் நடக்க உள்ளன.தமிழக பா.ஜ., தலைவர் தேர்தலை, கடந்த ஜனவரிக்குள் நடத்தி முடிப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பல மாநிலங்களில், ஏற்கனவே உள்ள மாநில தலைவர்கள், எந்த சிக்கலும் இன்றி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:

'இண்டி' கூட்டணியில் உள்ள, தி.மு.க., போன்ற கட்சிகளை பலவீனப்படுத்த வேண்டும் என, எங்கள் கட்சி மேலிடம் நினைக்கிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், பா.ஜ.,வுக்கும், மத்திய அரசுக்கும் அதிக குடைச்சல் கொடுப்பர். பா..ஜ.,வுக்கு எதிரான, 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்த, முதல்வர் ஸ்டாலின் அனைத்து முயற்சிகளை மேற்கொள்வார். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் அல்லது தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையை ஏற்படுத்த வேண்டும் என, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நினைக்கின்றனர்.இது நடக்க வேண்டுமானால், தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு எதிராக, வலுவான கூட்டணி அமைய வேண்டும். அ.தி.மு.க., இல்லாமல், வலுவான கூட்டணி சாத்தியமில்லை. ஆனால், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்பதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்பதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் பிடிவாதமாக உள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்கும் நோக்கத்திலேயே, கட்சிக்கு புதியவரான அண்ணாமலையை, மாநில தலைவராக்கினர். அதற்கு ஓரளவு பலன் கிடைத்திருப்பதாக நம்பும் பா.ஜ., மேலிடம், அவரையே தலைவராக தொடரச் சொல்கிறது. ஆனால், தி.மு.க.,வை வீழ்த்த, எந்த முடிவுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. ஆனால், 'நான் தலைவரானால், அ,தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பில்லை' என்கிறார் அண்ணாமலை. அ.தி.மு.க., இல்லாமல், வலுவான கூட்டணி அமைக்க முடியும் என்ற வாதத்தை, பா.ஜ., மேலிடம் ஏற்க மறுக்கிறது.தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள், 'அ.தி.மு.க., இல்லாத கூட்டணியால், தி.மு.க.,வை வீழ்த்த முடியாது' என்கின்றனர். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லாத நிலையில், பா.ஜ., மோசமான தோல்வியை சந்திக்கும். அதிலிருந்து தப்பிக்கவே அண்ணாமலை நிபந்தனைகள் விதிப்பதாக, மூத்த தலைவர்கள், மேலிடத்தில் தெரிவித்துள்ளனர்.அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் மேலிடம் உறுதியாக இருந்தால், கட்சியின் துணைத் தலைவரான நயினார் நாகேந்திரனையோ, மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனையோ தலைவராக்கி, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளலாம் என்றும், சிலர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அண்ணாமலையை மாற்றினால், தமிழகத்தில் பா.ஜ.,வால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டது போலாகி விடும். புதிதாக ஒருவர் தலைவரானால், 10 மாதங்களில் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்துவது கடினம். எனவே, அண்ணாமலையே தொடர வேண்டும். ஆனாலும், தி.மு.க.,வை வீழ்த்த எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், அவர் ஏற்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது.இதில் ஒரு இணக்கம் ஏற்படாததால், மேலிடம் குழப்பத்தில் உள்ளது. அதனால்தான் தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல் தாமதமாகி வருகிறது. புதிய தேசிய தலைவர் தேர்வான பின், தமிழக பா.ஜ., தலைவர் தேர்வு குறித்து முடிவெடுக்க, மேலிடம் இப்போதைக்கு முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.--நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

VSMani
பிப் 27, 2025 10:25

மிகவும் சீனியரான மூத்த பொன் இராதாகிருஷ்ணனையே தலைவராக்கலாம்.


Nandakumar Naidu.
பிப் 08, 2025 19:41

தேச,சமூக மற்றும் ஹிந்து விரோதியான SDPI யுடன் கூட்டணி வைத்துள்ள மற்றும் முருகன் மலைமீது ஆடு பலியிட அனுமதிக்க வேண்டும் என்று தலை பேரிடம் மனு கொடுத்த இந்து விரோத கட்சியான அண்ணா திமுக வுடன் பிஜேபி கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது.


வாசகர்
பிப் 08, 2025 18:18

அண்ணாமலை மோடி ஜி மற்றும் அமித்ஷாவிற்கு கட்டுப்படுபவர். பிரச்சினை எடப்பாடியிடம் தான். திமுகவின் அச்சுறுத்தலால் தன் சுய லாபத்திற்காக, அதிமுக வை தவறான பாதையில் கொண்டு செல்கிறார்.அதிமுக தொண்டர்கள் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.


Rajasekar Jayaraman
பிப் 08, 2025 15:27

அதிமுக கூட்டனியில் பாஜாக வுக்கு ஓட்டு போடமாட்டான் பாஜாக இதோடு முடிவுக்கு வரும் தமிழக மக்கள் மனநிலை தெரியாமல் கட்சியை அழிக்க வேண்டாம்.


Karthik
பிப் 08, 2025 15:23

குறுகிய காலத்தில் தமிழகத்தில் பாஜக யை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்த பெருமை அண்ணாமலையை சேரும். இதற்கு முன்பு இருந்த யாரும் அவ்வாறு செய்ததில்லை. இவரால்தான் தமிழகத்தில் எந்த ஆளும் கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக இருக்க முடியும் .எனவே தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை தேர்ந்தெடுப்பதே சரி . இல்லையேல் பாஜக வீழ்ச்சி.


chennai sivakumar
பிப் 08, 2025 13:38

அண்ணாமலை இல்லாமல் தமிழ் நாட்டில் பிஜேபி இல்லை என்பது எழுதப்படாத விதி. It is purely a one man show like old aiadmk meaning Thiru MGR and அம்மா. துரதிர்ஷ்டவசமாக அஇஅதிமுக தனியாக நின்று மண்ணை கவ்வுவது நிச்சயம். ஊர் இரண்டு பட்டால் மீதி நான் எழுதி தெரிய வேண்டியது இல்லை.


Oviya Vijay
பிப் 08, 2025 11:04

ஒரு சங்கி என்னை இங்கே கிணற்று தவளை என கூறியிருக்கிறது. அந்த சங்கிக்கு தெரியவில்லை. நான் என் பதிவில் கூறுவதெல்லாம் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று... பாவம் அந்த சங்கி என்ன செய்யும். தோல்வி மேல் தோல்வி என்றாலும் தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு முட்டு கொடுத்தே ஆக வேண்டுமே... நான் எழுதும் கருத்துக்கு இல்லையென்று மறுக்கும் அளவிற்கு பதில் சொல்ல துப்பில்லை... நீங்கள் என்னை எந்த அளவிற்கு கடிந்து கொண்டாலும் தமிழகத்தில் உங்கள் கட்சிக்கு களநிலவரம் சரியில்லையே ராசா... முதலில் உங்கள் கட்சி நோட்டாவிடம் வைத்திருக்கும் நட்பை விடுத்து கட்சியை வலுப்படுத்தப் பாருங்கள்... ஆயிரம் வருடங்கள் கடந்தேனும் 3026 லயாவது உங்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறதா என பார்க்கலாம்...


venugopal s
பிப் 08, 2025 09:19

பாஜக மேலிடத்தை எதிர்க்கும் அளவுக்கு அண்ணாமலைக்கு தைரியம் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லையே!


அப்பாவி
பிப் 08, 2025 07:08

அண்ணாமலையை வெச்சு அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பான்னு சொல்லி அதிமுக வுடன் கூட்டு அவியல்னு பண்ணிக்க வேண்டியதுதான்.


Oviya Vijay
பிப் 08, 2025 06:28

பிஜேபி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கூட 2026 தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு மிகப்பெரிய நாமத்தைத் தான் போடப் போகிறது. ஏனென்றால் அதிமுக ஏற்கனவே எடப்பாடியாரால் கலகலத்துப் போய்விட்டது. ஜெயலலிதாவின் மரணம் என்றைக்கோ அக்கட்சிக்கான முடிவுரையை எழுதிவிட்டது... நோட்டாவின் நண்பன் பிஜேபி கட்சியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை... தேறாத ஒரு கட்சியை வைத்துக் கொண்டு ஓவர் ஸீன் போட்டுக் கொண்டுள்ளனர். தமிழக மக்களிடத்தில் இக்கட்சியின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆகிக் கொண்டு வருகிறது. இதற்கு மேலும் வலு சேர்ப்பதாக சுப்ரீம் கோர்ட் கவர்னரை விளாசித் தள்ளுவதும் மக்களால் கவனிக்கப் படுகிறது. ஏனென்றால் தமிழக கவர்னரை மக்கள் கவர்னராக பார்க்கவில்லை, மாறாக அவரை பிஜேபியின் கையாள் என்பதாகவே பார்க்கிறது. அதற்காகத் தான் தமிழகத்தில் பிஜேபியை டேமேஜ் செய்வதற்கு கவர்னர் ஒருவரே போதுமானது என்பதால் ஆளுங்கட்சி தரப்பில் கவர்னரை மாற்ற வேண்டாம் என்று கோரிக்கை வைக்கப் படுகிறது. இதற்கு நடுவில் புதிதாக அரசியல் களம் காணப்போகும் விஜய் வேறு பிஜேபி மற்றும் அதிமுகவை விட அதிக ஓட்டுக்கள் வாங்கி துவம்சம் செய்ய காத்திருக்கிறார். மொத்தத்தில் 2026 தேர்தல் முடிவு அறிவிக்கப் படப்போகும் நாளில் ஒப்பாரி வைக்க காத்திருக்கிறது தமிழக பிஜேபி. வாழ்த்துக்கள்.


சசிக்குமார் திருப்பூர்
பிப் 08, 2025 08:49

oviya மிகவும் ஆக்ரோஷமான பரம்பரை கொத்தடிமையே நீயெல்லாம் ஒரு கிணற்று தவளை. விடியும் அரசு நாறிக்கொண்டு உள்ளது. அதை மறைக்க ஊடகங்கள் மூலம் வெறும் பில்டப் மட்டுமே