உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக வாட் வரியால் பெட்ரோல் விற்பனை 40 சதவீதம் குறைவு

தமிழக வாட் வரியால் பெட்ரோல் விற்பனை 40 சதவீதம் குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில் 20 சதவீதம் வாட் வரியால் பெட்ரோல், டீசல் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளதாக பெட்ரோல் டிரேடர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.இது குறித்து சங்கப் பொருளாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழக வாட்வரி போர்ட்டலில் நாங்கள் மாதந்தோறும் வருமானத்தை தாக்கல் செய்கிறோம். எங்கள் பரிவர்த்தனையின் அனைத்து விபரங்களும் அதில் உள்ளது. எங்கள் வர்த்தகத்தில் ஜி.எஸ்.டி., அறிமுகத்திற்குப் பிறகு, ஜி.எஸ்.டி., போர்ட்டலில் நாங்கள் வருடாந்திர ரிட்டர்ன் சமர்ப்பிக்கும் போது பூஜ்ஜியமாக இருக்கும். ஆனால் 'வாட்' அறிக்கை தாக்கல் செய்யும்போது 20 சதவீதம் வரி செலுத்தும் நிலை உள்ளது.தமிழகத்தில் வாட் வரி விதிப்பு கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. இதனால் விற்பனை தமிழகத்தில் குறைந்துள்ளது. தமிழகம் வரும் வடமாநில வாகனங்கள், அருகேயுள்ள மாநிலங்களின் ஊர்களில் பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்கின்றன. அவர்கள் தமிழகத்தை தவிர்ப்பதால் அவற்றின் விற்பனை குறைந்துவிட்டது. இதனால் எங்களுடைய கொள்முதலும் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழக அரசு விரைவில் வாட் வரியை குறைத்து பெட்ரோல் விற்பனையை அதிகரிக்க முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

g.s,rajan
பிப் 10, 2024 22:27

பொதுவா நம்ம நாட்டுல வேலையும் இல்ல ,வருமானமும் இல்ல.தொழில்களும் மந்தமா இருக்கு ,பொழப்பும் இல்ல போதாக்குறைக்கு விலைவாசியும் எக்கச்சக்கம் .மக்களால் எப்படிப் பெட்ரோல் போடமுடியும்...???


g.s,rajan
பிப் 10, 2024 22:23

இந்தியாவில் ஏமாந்த சோணகிரி எப்பொழுதும் மக்கள் தான் மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி எரிபொருளுக்கு ஏகப்பட்ட வரியைப் போட்டு மக்களைச் சித்திரவதை செய்யறாங்க. விலைவாசியை இஷ்டத்துக்கு ஏத்திவிடறாங்க.....


Venkataraman
பிப் 10, 2024 21:02

திமுக ஆட்சியை விரட்டி அடிக்கவில்லை என்றால் ஊழலும் கொள்ளையும் சேர்ந்து தமிழ்நாடு முழுவதுமாக விரைவில் அழிந்து விடும்.


sridhar
பிப் 10, 2024 19:10

எங்கேயோ ஏற்படும் இழப்பை ஈடுகட்ட எங்கள் தலையில் வரிச்சுமை . ஆட்சியா இது.


Dharmavaan
பிப் 10, 2024 16:41

இதற்கு போராட்டம் நடத்தாது


Anantharaman Srinivasan
பிப் 10, 2024 16:13

நீ ஆயிரம் தான் திராவிட மாடலை குத்தம் சொல்லுங்க..... மீண்டும் மீண்டும் பணத்தை கொடுத்தே ஜெயித்து காட்டுவார்கள்.


ديفيد رافائيل
பிப் 10, 2024 15:40

DMK ஆட்சிக்கு வர்றதுக்கு முன் இருந்த பல சலுகைகளை miss பண்றேன்


Svs Yaadum oore
பிப் 10, 2024 11:54

இந்த விடியலால் என்னவெல்லாம் காணாமல் போனது ....தாலிக்கு தங்கம் (8கிராம்) , திருமண உதவித்தொகை (₹50000) , அரசு மானிய சிமெண்ட் (200 ரூபாய்க்கு சிமெண்ட் மூட்டை ) , இருசக்கர வாகன மானியம் (₹30000) ,அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணி (₹25000) ,100 யூனிட் இலவச மின்சாரம் , கர்பிணி பெண்களுக்கான பணம் , அம்மா_உணவகம் என்றும் அனைத்தும் காணாமல் போனது ..அதற்கும் மேல் , பத்திரபதிவு கட்டணம் உயர்வு , மின்சார கட்டணம் உயர்வால் மாத சம்பளத்தில் ஒரு பகுதி காலி ......


அசோகன்
பிப் 10, 2024 11:54

உண்மை....... நானும் தமிழ் நாட்டிற்குள் நுழையும் முன்பே காரணம் விலை அதிகம்


rama adhavan
பிப் 10, 2024 11:32

அப்போ தமிழகத்தில் 40% மாசு குறைந்து உள்ளது என பொருள். ஆமாம் இவர்கள் பில் இல்லாமல் பெட்ரோல் போடுவது, பெட்ரோல் குறைத்து போடுவது, கலப்படம் செய்வது, பாட்டில், கேன் களில் பெட்ரோல் தருவது முதலிவைகளை எங்கு சொல்வது?


Arul Siva Murugan Velayutham
பிப் 16, 2024 12:33

தம்பி உனது கருத்து மிகவும் தவறு ... மாசு குறையவில்லை .. டீசல் பெட்ரோல் வேறு மாநிலங்களில் நிரப்பி இங்கு அதே அளவு வண்டி செல்வதால் மாசு குறையாது .. வண்டி வராமலே இருந்தால் தான் குறையும்... வருமானம் போனது தான் மிச்சம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ