உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைகிறது இன்று?

ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைகிறது இன்று?

சென்னை : ஆசிரியர்களின் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிட்டோ ஜாக் ஆசிரியர் கூட்டமைப்பினர், நேற்று இரண்டாவது நாளாக, பள்ளிக்கல்வி துறையின் டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டனர். இதில், 300 ஆசிரியைகள் உள்பட, 1,100 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இன்றைய போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

வலியுறுத்தல்:

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், 11 சங்கங்கள் இணைந்து, டிட்டோ ஜாக் என்ற கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தியுள்ளன. இந்த கூட்டமைப்பு சார்பில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்; ஆசிரியர்களுக்கு வேறு அலுவல் பணிகள் வழங்கக்கூடாது.தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வை, ஒன்றிய பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத நிலையில், புதிய போராட்டத்தை டிட்டோ ஜாக் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள, டி.பி.ஐ., வளாகத்தை மூன்று நாட்கள் முற்றுகையிடும் போராட்டம், நேற்று முன்தினம் துவங்கியது.முதல் நாளில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இரண்டாவது நாளாக நேற்றும், டி.பி.ஐ., வளாகம் முன் கூடிய, 300 ஆசிரியைகள் உள்பட, 1,100 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.உரிய முடிவுபோராட்டத்துக்காக பிற மாவட்டங்களில் இருந்து வந்த ஆசிரியர்களின் வாகனங்கள், ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு, ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பு நிர்வாகிகளுடன், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் ஆகியோரது குழுவினர் பேச்சு நடத்தினர்.போராட்டத்தை நிறுத்துமாறும், அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, உரிய முடிவெடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இன்றைய போராட்டத்தில், சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பர் என்றும், கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும் போராட்டத்தை வீரியமாக நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

'கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது'

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களை, தி.மு.க., அரசு கைது செய்வது கண்டனத்துக்குரியது. மத்திய அரசை எதிர்த்து குரல் எழுப்பும் உரிமை, மாநில அரசுக்கு இருக்கும் போது, வாக்குறுதியை நிறைவேற்றாத மாநில அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் உரிமை, ஆசிரியர்களுக்கு இருக்கக் கூடாதா; ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்; ஆசிரியர்களுக்கு வேறு அலுவல் பணிகள் வழங்கக்கூடாது. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வை, ஒன்றிய பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே நடத்த வேண்டும். மாநில வாரியான பணி மூப்பு குறித்த, 243ம் எண் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை, டிட்டோ ஜாக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mr Krish Tamilnadu
ஆக 03, 2024 11:42

மனச்சாட்சியுடன் யோசிக்க வேண்டும். பிரவின் சுல்தானா அவர்கள் கூறுவார்கள், டாக்டர்களை விட உயர்ந்தவர்கள் ஆசிரியர்கள் என்று. இன்றைய சமுதாய மாணவ விதைகளில் சரியான விதைகளை எண்ணங்களை உருவாக்குபவர்கள். தொடக்கப்பள்ளிகளில் 15, 25 பிள்ளைகளின் படிப்பிற்காக ஒரு வருடத்திற்கு அங்குள்ள ஆசிரியர் சம்பளம், இதர விசயங்களுக்காக அரசு எவ்வளவு செலவு செய்கிறது. ஒரு சிபிஎஸ்இ குழந்நையின் படிப்பு செலவை விட அதிகம். அடுத்து, அரசர் காலத்தில் கோயில்கள் தங்குமிடமாக பயன்படுத்த பட்டது. அதேபோல், ஆசிரியர்கள் படித்த, பக்குவமான அவர்கள் நேர்மையாக நடைபெற வேண்டிய அரசு வேலைகளுக்கு ஊதியத்துடன் பயன்படுத்த படுகிறார்கள். எலெக்ஷன். இதில் என்ன தவறு. சமுதாயத்தை உயர்த்துபவர்கள், உயர வேண்டும் என அரசு எவ்வளவோ விசயங்கள் செய்கிறது. அதை நினைத்து பாருங்கள். 40 வருடத்திற்கு முன் ஆசிரியர்கள் சம்பளம் எவ்வளவு?. தூய உள்ளமும், பிறதி உபகாரம் பார்க்காத பண்பு தான், ஆசிரியர் பண்பு. அதை இழந்து விடாதீர்கள்.


Jay
ஆக 01, 2024 14:40

ஒவ்வொரு முறையும் இது ஆசிரியர்கள் போராட்டம் என்று தவறாக செய்தி வெளியிடப்படுகிறது. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் உண்மையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொதுவான ஊதிய உயர்வுக்கானது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கும் சேர்த்து ஆசிரியர்கள் சங்கம் போராடும். பதிலுக்கு ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு அலுவலகங்களில் கிடைக்கும். இது இரண்டு பேருக்கும் வெற்றி-வெற்றி win-win என்னும் நிலை, பொதுமக்களுக்கு மட்டும் தான் தோல்வி. அரசுக்கு வரும் வருமானத்தில் ஏற்கனவே ஊழியர்கள் ஊதியம் மற்றும் பென்சனுக்கு 90% வருமானம் செல்கிறது. இன்னும் ஊதிய உயர்வு வேண்டும் என்றால் அரசு ஊழியர்கள் அரசை நடத்த இருக்கிறார்களா? இல்லது அரசு அரசு ஊழியர்களின் லாபத்திற்காக இயங்குகிறதா? மக்களின் வரிப்பணத்தை பிடுங்குவதில் அம்பானி அதானி என்று பொய்யாக பிரச்சாரம் செய்கிறார்கள் உண்மையில் அரசு ஊழியர்கள் தான் முழுவதையும் பிடுங்கிக் கொள்கிறார்கள், பொதுமக்களின் வருமானத்திலிருந்து.


Prabakaran J
ஜூலை 31, 2024 22:25

Govt thinking and teaching to teachers - Barking dogs seldom bites.


shanker Ramaswamy
ஜூலை 31, 2024 16:28

முதல வெக்கற எக்ஸாம் பாஸ் பண்ணுக கொடுக்குற சம்பளமே அதிகம். இதுல போராட்டம் வேற கொச்சம் மாவது நியாயம் வேண்டாம்


jaya
ஜூலை 31, 2024 12:49

இவனுகளுக்கு வேற வேலை இல்லை, போராட்டம் நடத்துவானுக , ஒன்னும் கிடைக்காது , அப்புறம் அந்த கூட்டத்துக்கே ஒட்டு போடுவானுங்க ..அடுத்தது போராட்டத்தை ஆரம்பிச்சுடுவானுக ... இதே தொழில்


krishnan
ஜூலை 31, 2024 12:02

ஆயிரம் MBBS மாணவர சேர்க்கையில் அரசாங்க பள்ளி மாணவர் ஏழே பேர் தான் .மீதி 993 மாணவர் பிரைவேட் ஸ்கூலில் இருந்து. கடந்த முப்பது வருசமா அரசு ஆசிரியர் performance இதுதான் . கொடுக்கிற சம்பளமே அதிகம் . வெக்கம் இல்லாமல் போராட்டம் செய்கிறார்கள். இவர்கள் துரோxxள்


Iniyan
ஜூலை 31, 2024 11:09

இவ்வளவு நாள் திமுக விக்கு சொம்பு தூக்கி கொண்டிருந்தீர்கள். இப்போ அனுபவிங்க


ulaganathan murugesan
ஜூலை 31, 2024 09:34

கொடுக்குற சம்பளமே அதிகம். இதுல போராட்டம் வேற


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை