உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருப்பரங்குன்றம் மலையை காக்க ஒலித்த கோஷம் குன்றத்து மலை குமரனுக்கே: 1216 பேர் கைது

திருப்பரங்குன்றம் மலையை காக்க ஒலித்த கோஷம் குன்றத்து மலை குமரனுக்கே: 1216 பேர் கைது

திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், மீட்கவும் கோரி நேற்று 144 தடையை மீறி கோயிலுக்குள் ஒன்று கூடிய பக்தர்கள் 'குன்றத்துமலை குமரனுக்கே', 'வீரவேல் வெற்றிவேல்' என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறியதாக நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு மண்டபத்திலும், வீட்டுச்சிறையிலும் வைக்கப்பட்டனர்.திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு வெட்டி உயிர்ப்பலி கொடுக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கோயிலின் புனிதத்தன்மையை பாதிப்பதாக கூறி ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மலையை 'சிக்கந்தர் மலை' என்று கூறி சில அமைப்புகள் ஆக்கிரமிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து முன்னணி, நேற்று திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது.இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் அனுமதி மறுத்தனர். மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு முதலே திருப்பரங்குன்றத்தில் வசிக்காதவர்களை போலீசார் வெளியேற்றினர்.

எல்லைகளில் சோதனை

போலீஸ் கமிஷனர் லோகநாதன், தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா தலைமையில் 5 எஸ்.பி.,க்கள் உட்பட 3 ஆயிரம் போலீசார் நேற்று காலை முதலே மதுரை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து தெருக்களின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை நகர், மாவட்ட எல்லைகளில் வெளியூர் வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.

மதுரை ஆதினத்திற்கும் தடை

அதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திருப்பூரில் இருந்து ரயிலில் திருப்பரங்குன்றம் வந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்திலும், வீட்டிலும் சிறை வைக்கப்பட்டனர். மதுரை ஆதினமும் மடத்தை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டது.

கோயிலுக்குள் ஆர்ப்பாட்டம்

அதேநேரம் பக்தர்கள் தனித்தனியாக திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சென்று வழிபட போலீசார் அனுமதித்தனர். அப்படி சென்று தரிசனம் செய்தவர்கள் மதியம் 12:30 மணிக்கு சஷ்டி மண்டபம் வழியாக வெளியே வந்தனர். அப்படி வந்த 500க்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபம் முன்பு அமர்ந்து 'குன்றத்து மலை குமரனுக்கே' 'வீரவேல் வெற்றி வேல்', 'காப்போம் காப்போம் முருகன் மலையை காப்போம்' என கோஷமிட்டனர். இதில் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.இதை எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சியுற்று உடனடியாக மண்டபத்திற்கு வந்து வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் கோஷமிட்டவாறே ஓட, அவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்தனர். சுவாமி தரிசனத்திற்கு வந்து போராட்டத்தில் தாங்களாக முன்வந்து பங்கேற்ற துாத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தனர். பக்தர் ஒருவர் கன்னத்தில் 16 அடி நீளமுள்ள வேல் குத்தி கோயிலுக்கு நடைபயணமாக வந்தார். கோயில் வரை அனுமதித்த போலீசார் பின்னர் வேலை அகற்ற செய்து அவரை கைது செய்தனர்.நேற்று மதியம் வரை மொத்தம் பெண்கள் உட்பட 485 பேரும், திருப்பரங்குன்றத்திற்கு தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட 731 பேரும் கைது செய்யப்பட்டனர்.திருப்பரங்குன்றத்தில் டவுன் பஸ்கள் அனுமதிக்கப்படாததால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் 'பாதயாத்திரையாக' வந்தனர்.மதியம் 3:15 மணிக்கு கோயில் முன் நடந்த திடீர் போராட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், திருச்செங்கோடு, துாத்துக்குடி பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்கள் கூறுகையில், 'போலீசார் தடுத்தாலும் ஹிந்துக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் திருப்பரங்குன்றத்திற்கு திரண்டு வந்து போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றோம்' என்றனர்.

விடுவிப்பு

முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். மதுரை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வாகனங்களில் புறப்பட்டு பழங்காநத்தம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

போலீஸ் - எச்.ராஜா வாக்குவாதம்

பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடி பண்ணை வீட்டில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல காரில் புறப்பட்டார். டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் போலீசார் அவரை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் எச்.ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரிலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எச்.ராஜா காத்திருந்தார். பின் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பையடுத்து எச்.ராஜா அங்கிருந்து சென்றார்.

நீதிபதிகள் கேள்வியால் ஆடிப்போன அரசு தரப்பு!

திருப்பரங்குன்றம் மலையை காக்க ஹிந்து அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, போடப்பட்ட 144 தடை உத்தரவை நீக்கக் கோரியும், போராட்டத்துக்கு அனுமதி கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மதுரை சுந்தரவடிவேல் தாக்கல் செய்த அவசர பொதுநல மனு:மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசம் திருவிழா ஜன.29 ல் துவங்கி பிப்.11 வரை நடைபெறுகிறது. சிலர் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க மற்றும் ஆடு, கோழிகளை பலியிட முயற்சித்து திட்டமிட்டு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர். இதிலிருந்து ஹிந்துக்களின் புனிததலமான மலையை பாதுகாக்க வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் பிப்.4 ல் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. பாரபட்சமாக போலீசார் அனுமதி மறுத்தனர்.பிப்.3 முதல் பிப்.4 வரை போராட்டம், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்படுகிறது; இரு நாட்களிலும் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் பிப்.2 ல் உத்தரவிட்டார். இதனால் பக்தர்கள் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. 144 தடையுத்தரவை ரத்து செய்ய வேண்டும். தைப்பூசத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதை தடுக்கக்கூடாது என கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.மதுரை முருகன் தாக்கல் செய்த மற்றொரு அவசர பொதுநல மனுவில், ''திருப்பரங்குன்றம் கோயில் தெப்பத்திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களை தடுக்கக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இதே போல, ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட பொதுச் செயலர் கலாநிதி மாறனும் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், ''திருப்பரங்குன்றம் கந்தர் மலையை காக்க, பிப்.4 ல் மதியம் 3:00 மணிக்கு ஹிந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே போராட்டம் நடத்த அனுமதி கோரி போலீசாரிடம் மனு அளித்தோம். நிராகரித்தனர். அதை ரத்து செய்து அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்,'' என கலாநிதி மாறன் கோரியிருந்தார்.மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு, ''144 தடையுத்தரவு அமலில் உள்ளபோது ஒரு (அண்ணாதுரை நினைவுநாள்) ஊர்வலத்திற்கு எப்படி அனுமதியளிக்கப் பட்டது,'' என கேள்வி எழுப்பியது. பின், ''பழங்காநத்தத்தில் பிப்.4 ல் மாலை 5:00 முதல் 6 :00 மணிவரை அமைதியான முறையில், ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தலாம். எவ்வித ஆட்சேபகரமான கோஷங்களையும் எழுப்பக்கூடாது. அதை, போலீசார் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால் அதற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க வேண்டும். கலெக்டர், போலீஸ் கமிஷனர் பிப்.19 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அந்த உத்தரவின்படி, ஹிந்து அமைப்பினர் மதுரை பலங்காநத்தத்தில் போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

நரேந்திர பாரதி
பிப் 06, 2025 04:37

2026ல் மீண்டும் திருட்டு திராவிடம் ஆட்சிக்கு வந்தால், இந்துக்கள் இனி இப்படி தான் பாட வேண்டும். சிக்கந்தர் மலையில் நீ சிரித்தால்... அல்லா அக்பர் மலை மீது எதிரொலிக்கும் அன்வர் ஊரிலே வேலாடும் நம் திருகுரான் பாடியே கடலாடும் கோல்மால்புரத்தில் நீ சிரித்தால்...உடன்பிறப்பே அண்ணா அறிவாலயத்தில் எதிரொலிக்கும் திமுக மேடையே தள்ளாடும் கட்டுமர புகழ் பாடி ஆட்டமிடும் சபையில் சட்டையை நீ கிழித்தால்... அது ஆளுநர் மாளிகையில் எதிரொலிக்கும் டாஸ்மாக் கடையிலே வரிசை கட்டும் அந்த திராவிடக் கூட்டமே கூத்தாடும் சமத்துவத்தில் இருக்கும் பேரிச்சம் பழம்... நீ பார்வையிலே கொடுக்கும் காமப் பழம் அறிவாலயத்திலே முதிர்ந்த பழம் பசியோடு வருவோர்க்கு ஓசி பழம்


கிஜன்
பிப் 05, 2025 22:02

ராஜாவாவது எப்பவுமே சவுண்ட் பார்ட்டி..


தமிழ்பாரதி
பிப் 05, 2025 16:37

2035..., கொள்ளையடிக்க வந்தவர்களுக்குதான் நாடு சொந்தமாம்... ஹிந்துக்கள் paraதேசிகளா கிளம்பணுமாம் சீக்கிரமா... எங்கேயாவது.... பொம்பளைங்களை விட்டுட்டு... மசூதியில பாங்கு அறிவிச்சிடுச்சு.... ஓடுடா... ஓடு... எங்கனாலும்....


சிந்தனை
பிப் 05, 2025 16:35

"இந்துக்களுடன் சேர்ந்து வாழ முடியாது" - என்று சொல்லி தான் முஸ்லிம்களின் ஜனத்தொகை சதவிகிதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்து வாங்கிக் கொண்டார்கள். அதற்குப் பிறகும் இங்கு என்ன வேலை? இதைக் கேட்க அறிவு யாருக்குமே இல்லை? இது என்னங்கடா குருட்டு நீதி?


kantharvan
பிப் 06, 2025 16:48

கழிவு சிந்தனை


guna
பிப் 05, 2025 15:25

.முதலில் திருப்பரங்குன்றம் கூடிய கூட்டத்திடம் நீ மன்னிப்பு கேள்..


Oviya Vijay
பிப் 05, 2025 15:01

இரு தரப்பும் அமர்ந்து பேசினாலே சுமூகமாக முடிந்து போகும். பிரச்சனை செய்ய வேண்டுமென்பதற்காகவே இரு தரப்பும் முற்பட்டால் பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லாமல் நெடுங்காலம் இழுத்துக் கொண்டே செல்லும்.


guna
பிப் 05, 2025 15:25

என்ன ஓவியர் பம்மிடாரு....நேத்து வேற மாறி பேச்சு....இன்னைக்கு டம்மி பேச்சு


vivek
பிப் 05, 2025 15:30

நேத்து லட்டி அடி கொடுக்க சொன்ன வாய் இப்போ சமாதானம் பேசுது....ஈன பிறவி


mpav.krr
பிப் 05, 2025 19:16

குடியிருக்கிற வீட்ல திடீர்னு எவனோ ரோட்ல போறவன் வந்து உரிமை கொண்டாடினா நீங்க உக்காந்து சமரசம் பேசுவீங்களா? மலை முருகனுக்கு சொந்தம். கருத்து போடும்போது அறிவிலிய கொஞ்சமாவது உபயோகப்படுத்து எதுக்கும் உதவாத மூடனே


guna
பிப் 05, 2025 13:45

எவனையும் காணோமே


M Ramachandran
பிப் 05, 2025 13:08

ஸ்டாலின் திருந்த வேண்டும். இல்லை யென்றால் மத சார்புடன் வலம் வரும் ஸ்டாலினுக்கு என்ன முயன்றாலும் மக்கள் 2026 இல் தண்ணி அல்ல தண்ணீர் குடிக்க வைத்து விடுவார்கள் நிச்சயம். திறமையற்ற பலவகையில் தள்ளாடும் தற்போதைய போதை தமிழக அரசு நிச்சயம் கடைசி முறையாக குடும்ப அரசு


Nandakumar Naidu.
பிப் 05, 2025 12:28

நம் முருகன் மலை மீது இடத்தை அபகரித்து கட்டியுள்ள மத வெறி பிடித்தவர்களின் கட்டிடத்தை ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இடித்து தள்ள வேண்டும்.


kantharvan
பிப் 06, 2025 16:51

நம் முருகன் மலை மீது இடத்தை அபகரித்து கட்டியுள்ள மத வெறி பிடித்தவர்களின் கட்டிடத்தை??? ஏமண்டி திருப்பதி மலையத்தான் சொல்றிங்களா?? சீக்கிரமா ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இடித்து தள்ள வேண்டும்.


ram
பிப் 05, 2025 11:15

அதுவும் நீதிமன்ற உத்திரவு வந்தது நான்கு மணிக்கு, போராட்டம் ஐந்து டு ஆறு மணி, இதற்குள் ஆயிரம் கணக்கானவர் வந்தது அந்த முருகன் செயலே. இதுபோல ஒற்றுமையாக தேர்தல் பொது திருட்டு திமுகவுக்கு வாக்கு போடாமால் இருக்கனும் அந்த முருகன் அருளாளே. இந்த ஹிந்து விரோத ஆட்சி, ஆட்டை வெட்டுவதற்கு வந்தவனுக்கு போலீஸ் காவல், பிரியாணி தின்னவனுக்கு விக்க கூடாது என்று இந்த காவல் துறை ஆட்கள் தண்ணீர் சப்ளை, அவனுங்க திமிராக ஆடு என்ன மனிதனை வெட்டுவோம் என்று சொன்னவனை தட்டி கொடுத்து அனுப்பின காவல் துறை ஆட்கள். இப்போது என்னவென்றால் முருக பக்தர்களை தேடி தேடி கைது செய்கிறார்கள், இவர்கள் மனித இனத்தில் சேர்த்தி இல்லை.


kantharvan
பிப் 06, 2025 16:56

இது என்னடா?? புது உருட்டா...லா இருக்கு குறத்தி வீட்டுக்காரன் வீட்டுல அசைவம் சாப்பிட்டா தீட்டா?? உலகத்துல எங்கேயும் இத மாதிரி அறிவாளிகளை பார்க்க முடியாது?? ஊர்ல உள்ள அம்ம்புட்டு விஞ்ஞானிகளும் மதுர காரன்தான் அப்பு ??


முக்கிய வீடியோ