உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உங்களில் ஒருவன்: பாதங்களை கட்டிப் போட்ட தமிழக காவல் துறை!

உங்களில் ஒருவன்: பாதங்களை கட்டிப் போட்ட தமிழக காவல் துறை!

'என் மண்; என் மக்கள்' யாத்திரை, 200 தொகுதிகளை கடந்திருக்கிறது. இதை எண்ணிப் பார்க்கும் போது, என் புருவங்கள் வியப்பு குறிகளை சந்திப்பதை, என்னால் தவிர்க்க முடியவில்லை. இதுவரை கடந்து வந்த பாதைகளை எல்லாம் அரிமா நோக்கிலே, நான் அலசி பார்க்கிறேன். கடந்து வந்து பாதைகள் கனவு போல இருக்கின்றன. ஆனால், அந்த கனவுகள் என் இதயத்திற்குள் கனமாக இருக்கின்றன.

அற்புத அனுபவம்

எத்தனை எத்தனைமனிதர்கள், எத்தனை விதமான தொகுதி பிரச்னைகள்.ஆளும் தி.மு.க., அரசின் திறமையின்மையால், எத்தனை விதமானமக்கள் பிரச்னைகள் என்று மலைத்திருக்கிறேன். ஆனால், பிரதமர் மோடி மீது நம்பிக்கை கொண்டு இத்தனை இன்னல்களையும் மீறி, எக்கச்சக்கமான எதிர்பார்ப்புடன், ஏராளமான அன்புடன், பாதயாத்திரையை எதிர்நோக்கி, கால நேரம், சுற்றுச்சூழல், வெயில், மழை என்று எதையும் பொருட்படுத்தாமல், கோடிக்கணக்கான மக்களை சந்தித்த, இந்த அற்புதமான அனுபவத்தை வாழ்நாளில் மறக்க இயலாது.பாதயாத்திரையில் கடந்து வந்த தொகுதிகளை, ஊடகங்களில் நிழற்படமாக பார்த்திருப்பீர்கள். நான் அவற்றை எல்லாம் நிஜப் பாடமாக பார்க்கிறேன்.

பின்னணி சக்திகள்

பாதயாத்திரைக்கு பின்னணியில் எத்தனை மனித சக்திகள் இருக்கின்றன; எத்தனை உழைப்புகளும், எத்தனை தியாகங்களும் இதன் பின்னே மறைந்திருக்கின்றன என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறேன். இது, சரித்திரத்தை மாற்றக்கூடிய வல்லமை படைத்த பாதயாத்திரை என்றால், அதை ஒற்றை மனிதனாக சாதிக்கவில்லை. பா.ஜ., மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட, ஒரு திறமையான குழு இந்த பயணத்தை வெற்றிப் பயணமாக, சரித்திர சாதனையாக, எவரும் செய்யாத தொடர் முயற்சியாக, வெற்றிகரமாக செய்து காட்டி இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும், அப்பகுதியின் பெரிய மனிதர்களை சந்திக்க முடியவில்லை. ஆனால், இந்த பயணம் முழுதும் சாமானியமக்களோடு பயணித்து இருக்கிறேன்ஏழை எளிய மக்களோடு பழகி இருக்கிறேன்; விவசாய பெருமக்களின் வேதனைகளை உணர்ந்திருக்கிறேன்; சாலையோர வியாபாரிகளின் சங்கடங்களை சந்தித்திருக்கிறேன். மகளிர் படும் துன்பங்களை மனச்சுமையோடு கண்டிருக்கிறேன்; கேட்டிருக்கிறேன்எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பயன் கருதாத துாய்மையான அன்பை தரிசித்து இருக்கிறேன். எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு சிறப்பான வாய்ப்பு? எந்தவிதமான சங்கடங்களுக்கும் இடம் தராமல், திறமையாக இந்த பாதயாத்திரையை வழிநடத்தி வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குழுவினருக்கும், அனைத்து மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளுக்கும் என் அன்பை காணிக்கையாக்குகிறேன்.

பல வழிகளில் தடை

இந்த பாதயாத்திரைக்கு மக்களிடமிருந்து இப்படியொரு 'ரியாக்ஷன்' இருக்கும் என அரசு தரப்பினரும், ஆளுங்கட்சியினரும் எதிர்பார்க்கவில்லை. அதனால், ஒரு கட்டத்துக்கு மேல் பாதயாத்திரையை தொடர்ந்து நடத்த விடக்கூடாது என திட்டம் போட்டு செயல்படத் துவங்கினர். ஆனாலும், உறுதியாக பாதயாத்திரை வாயிலாக திட்டமிட்டபடி மக்களை சந்தித்தே ஆவது என்ற உறுதியோடு, தொண்டர்கள் சகிதம் நடந்தேன்.ஒரு கட்டத்துக்கு மேல், அவர்களால் பொறுக்க முடியவில்லை. சென்னையில் பாதயாத்திரைக்கு எப்படியாவது தடை ஏற்படுத்த வேண்டும் என, பல வழிகளிலும் திட்டமிட்டனர். சென்னையில் இந்த பாதயாத்திரை எப்படி நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோமோ, அதைச் செய்ய விடாமல், காவல் துறையின் துணை கொண்டு, மாநில அரசு எங்கள் பாதங்களை கட்டிப் போட்டு விட்டது. சென்னையில் பொது மக்கள் வழங்கும் ஏகோபித்த ஆதரவு, தி.மு.க.,வின்வீழ்ச்சிக்கு வித்திட்டு விடுமோ என்ற அச்சத்தை என்னால் உணர முடிகிறது. இப்படி பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை குறைப்பதால், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைந்தா போய் விடும்?ஆனால், இப்படிப்பட்ட அடக்குமுறைகளை கண்டு, பா.ஜ., ஒருபோதும் அஞ்சாது என்பதை, எங்களின் துணிச்சல் வாயிலாக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் காட்டுவோம். வீரியத்துடன் வேகமாக வெளிப்படுவோம். தாமரையின் மலர்ச்சியையும், வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது.பயணம் தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

திகழ்ஓவியன்
பிப் 19, 2024 12:57

நாங்கள் வளர்ந்து விட்டோம் அசுரர் வளர்ச்சி என்று சொன்ன அண்ணாமலை தேர்தல் நிற்கமாட்டேன் என்கிறார் , 9 தொகுதி இலக்கு நான் நீலகிரியில் நிற்கிறேன் என்று சொன்ன வன்டு முருகன் MP க்கு ஓடிவிட்டார் ராஜாய சப MP ஆகிவிட்டார் , இதில் இருந்து கட்சி வளர்ந்த பவிசு தெரிகிறது


M Ramachandran
பிப் 13, 2024 20:26

Abbaasaamy - appaasamy கதை போல் மிளகாய் அரைத்து உடலில் பூசிக்கொண்ட எரிச்சல்


M Ramachandran
பிப் 13, 2024 20:24

ஜிங்க்கு சா ஊபீஸ்களுக்கு பொத்து கொண்டு வருகிறது உடல் உள்ளும் வெளியும் எரிச்சல். . அவர்களும் உள்ளத்திலும் உடம்பிலும் தெம்பிருந்தால் நடை பயணத்தை மேர்கொள்ளட்டுமே யார் வேண்டாம் என்பது இந்த காழ்புணர்ச்சி தான் அவர்கள் குணாதிசையங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அடுத்த வீட்டு காரி ஆம்பிள்ளையைய் குழந்தையய் பெற்று கொண்டால் இவள் வயிற்றில் உலக்கையால் இடித்து கொண்டாளாம்


Gopalu
பிப் 13, 2024 20:09

ராகுல் பாத யாத்திரைக்கு ஆளும் பி.ஜேபி யான ம.பிரதேச அரசு தடை விதித்தது அதுக்கென்ன அர்த்தம்


அப்புசாமி
பிப் 13, 2024 19:37

இத்தனை நாள் பொய்க்கால்ல நடந்து போனாரா கோவாளு?


பேசும் தமிழன்
பிப் 13, 2024 17:21

நோட்டா கட்சி என்றவர்கள்.... இன்றைக்கு ஊர்வலம் போக அனுமதி இல்லை... காரணம் டிராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு கூட்டம் வரும் என்று கூறுகிறார்கள்.... பிஜெபி கட்சி தமிழகத்தில் வளர்ந்து வருகிறது..... அதை திமுக மற்றும் அதன் காவல்துறையே ஒப்பு கொண்டு விட்டது.


Oviya Vijay
பிப் 13, 2024 14:35

Waste Fellow...


GoK
பிப் 13, 2024 11:08

உளுத்துப்போன, ஊசிப்போன உதயநிதியும் சரி அவன் அப்பா அவன் பாட்டன் வாரிசுகளும் கொள்ளைக்கார குடும்பத்தினரம் சரி எவனாலும் ஒரு ..... முடியாது. வர்ற தேர்தல்ல அப்படி ஒரு இடி காத்திருக்குது


திகழ்ஓவியன்
பிப் 13, 2024 12:42

உளுத்துப்போன, ஊசிப்போன உதயநிதி... 70000 வோட்டு மார்ஜினில் வெற்றி , சிரிப்பு போலீஸ் 26000 வோட்டு வித்தியாசத்தில் தோல்வி , யார் தகுதியானவர் என்று இப்ப சொல்லு


sridhar
பிப் 13, 2024 15:38

நேர்மையான தேர்தல் வைத்துப்பார் , அப்போ தெரியும் உதயநிதி லட்சணம்.


pmsamy
பிப் 13, 2024 09:34

????????????????


VENKATASUBRAMANIAN
பிப் 13, 2024 08:39

பாஜக இல்லையென்றால் எதுக்கு தடுக்கணும். உண்மையை மறைக்க முடியாது. திமுகவே பாஜகவை வளர்த்து விடுகிறது. இதுதான் தற்போதைய நிலைமை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை