உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆடு, மாடுகள் மாநாடு போல மரங்கள் மாநாடு: சீமான் அதிரடி

ஆடு, மாடுகள் மாநாடு போல மரங்கள் மாநாடு: சீமான் அதிரடி

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கடந்த, 2018ல், நா.த.க., - -ம.தி.மு.க., கட்சியினர் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு, திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர். சீமான் நேற்று ஆஜரானார். இந்த வழக்கில் வரும் 19ல் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

இதன் பிறகு, சீமான் அளித்த பேட்டி:

காங்., வலுவிழந்தபோது அந்த ஆட்சியை தி.மு.க., தாங்கிப்பிடித்தது. கடந்த, 2006ல் பா.ம.க., போன்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஏன், 2 அமைச்சர் பதவி கொடுக்கவில்லை? மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது தி.மு.க.,வின் முந்தைய நிலைப்பாடு. ஆனால், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என்று தற்போது மாறி விட்டது. வரும் ஆக., 17ல் மரங்கள் மாநாடு நடத்தி, மரங்களுக்காகவும் பேசப் போகிறேன். ஏற்கனவே மதுரை விரகனுாரில் ஆடு, மாடுகளுக்கு வெற்றிகரமாக மாநாடு நடத்தி, அவைகளுக்காக குரல் கொடுத்தது போல, மரங்களுக்காக பேசி, அவைகளுக்காகவும் குரல் கொடுக்கப் போகிறேன். 'தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதும், திருட்டு பயல்களை வீட்டுக்கு அழைப்பதும் ஒன்று தான்' என்று பேசியவர் காமராஜர். ஆனால், 'தமிழக மக்களை காப்பாற்ற, ஜனநாயகத்தை காப்பாற்ற நீதான் வர வேண்டும்' என்று, கருணாநிதி கையைப்பிடித்து காமராஜர் அழுததாக, தி.மு.க., - -எம்.பி., சிவா பேசியுள்ளார். காமராஜர் இன்று இல்லை என்பதாலேயே இப்படி பேசி இருக்கிறார்.இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Oviya Vijay
ஜூலை 17, 2025 20:06

முந்தைய தேர்தல்களில் இவரது கட்சி பெற்ற வாக்கு வங்கி சதவீதத்தை பற்றி இங்கு சிலர் அவ்வப்போது பேசுவதைக் கவனித்திருக்கிறேன்... ஆனால் வர போகும் தேர்தலில் இவர் கேவலமாக மண்ணைக் கவ்வப் போகிறார் என்பதே உண்மை... பல மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் இவரது நடவடிக்கையைப் பிடிக்காமல் இவரை விட்டுப் பிரிந்து சென்று கொண்டுள்ளனர்...


kannan
ஜூலை 17, 2025 17:49

பைத்தியமா இவர்


T. Sivaraj
ஜூலை 17, 2025 09:53

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல.


SUBBU,MADURAI
ஜூலை 17, 2025 18:29

முதல்வராக இருந்த காமராஜர் ஒருமுறை காரில் சிவகங்கையை தாண்டி போய் கொண்டு இருந்த போது கிழிந்த டவுசரோடு மாடு மேய்த்து கொண்டிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து வண்டியை நிறுத்தி தம்பி நீ ஏன் பள்ளிக்கு செல்லாமல் வயலில் மாடு மேய்த்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் .அதற்கு அந்த சிறுவன் ஐயா நான் பள்ளிக்கு போனால் இந்த மாட்டை யார் மேய்ப்பது எனக்கு யார் சோறு போடுவது என்று கேட்டான். அந்தப் பையனின் அறிவுக் கூர்மையை பார்த்து வியந்த காமராஜரின் மூளையில் அப்போது உதித்ததுதான் தமிழக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம். பை த பை அந்த சிறுவன் வேறு யாருமல்ல சாட்சாத் இந்த அடியேன் சீமானேதான் புஹ்ஹாஹ்ஹா.


vbs manian
ஜூலை 17, 2025 09:22

ஆடு மாடு மரங்கள் மாநாடு இவையெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா. ஏற்கனவே அமைப்புகள் உள்ளன.


ராமகிருஷ்ணன்
ஜூலை 17, 2025 07:40

பாவம்யா


mohana sundaram
ஜூலை 17, 2025 04:45

என்ன திரு சைமன் அவர்களே உம்முடைய கூட்டத்திற்கு மக்கள் வருவது இல்லையா? அதனால் ஆடு மாடுகளையும் மரங்களையும் வைத்து கூட்டம் நடத்துகிறீர்.


A viswanathan
ஜூலை 17, 2025 16:48

ஏதோ மற்ற அரசியல் வாதிகளிருந்து கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்தால் மக்களை வைத்தியம் பிடிக்க செய்திடுவார் போல தோன்றுகிறது.


முக்கிய வீடியோ