உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உதயநிதி மகனுக்காக பெண் கலெக்டர் அவமதிப்பு?

உதயநிதி மகனுக்காக பெண் கலெக்டர் அவமதிப்பு?

முதன்முறையாக தன் மகன் இன்பநிதியுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார். இன்பநிதி தன் நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். நண்பர்களுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. மகன் இன்பநிதியை அருகில் அமரவைத்த உதயநிதி, ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து மகனுக்கு விளக்கம் அளித்தார். தன் நண்பர்களை முன் வரிசைக்கு இன்பநிதி அழைத்ததும், கலெக்டர் தன் இருக்கையை மாற்றிக் கொண்டார். இது சர்ச்சையானது. இது குறித்து கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது துணை முதல்வர் உதயநிதி அருகே இருந்த நான் எழுந்து இருக்கை மாறியது குறித்து சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வதந்தி பரப்புகின்றனர். அந்த நிகழ்ச்சியில் 'புரொட்டோகால்' படி தான் நான் எழுந்து நின்றேன்,'' என்றார்.நிகழ்ச்சியை கவர் செய்த ட்ரோனை உதயநிதியும், அவரது மகனும் சில நிமிடங்கள் இயக்கினர். இன்பநிதி இயக்கிய போது சரியாக இயக்காததால், அது களத்தில் விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் மேல் விழுந்தது. வீரர்கள் சற்று அதிர்ச்சியாகினர்.

பா.ஜ., கண்டனம்

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: துணை முதல்வர் உதய நிதி, ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லுார் சென்றதில் தவறில்லை. அவரின் மகன் இன்பநிதி சென்றதிலும் தவறில்லை. இன்பநிதி, தன் நண்பரோடு பின்னால் அமர்ந்து பார்ப்பதாக சொன்னதும் தவறில்லை.ஆனால், ஒரு அமைச்சர், அமர்ந்திருந்த கலெக்டரை எழச் செய்ததோடு, பின்னர் இன்பநிதியின் நண்பரை, கலெக்டர் அமர்ந்திருந்த இடத்தில் அமரச் செய்தது மாபெரும் தவறு; அவமரியாதையின் உச்சம். சுயமரியாதை பேசுவோருக்கு மரியாதை அளிக்க தெரியாதது தான் திராவிட மாடல். உதயநிதியின் அரசியல் முதிர்ச்சியின்மை, இந்த சம்பவத்தால் தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Sivagiri
ஜன 21, 2025 13:08

சரீ... நாளைபின்ன, ஏதாவது ப்ரோமோஷன், டபுள் ப்ரோமோஷன், அது இதுன்னு, கொடுத்தா வேண்டாம்னா சொல்வாங்க? இல்ல-இல்ல ரூல்ஸ் படி கொடுங்க போதும்னா சொல்வாங்க? இப்போ உள்ள அரசியல்வாதிகளும் சரி, அதிகாரிகளும் சரி, ரெண்டும் ஒரே மட்டைகள்தான்.. யாருக்கும் பயப்படாமல், நாட்டுக்கு நல்லது செய்வேன், ஏழைகளுக்கு உதவி செய்வேன் - அப்டீன்னு ஸ்கூல்ல படிக்கும்போது சொன்னதெல்லாம் , இப்போ செய்ஞ்சு காட்ட முடியாது


Sankara Narayanan
ஜன 19, 2025 13:30

வயதில் சிறியவராக இருந்தாலும் ஒரு அமைச்சருக்கு மாவட்ட கலெக்டர் மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதில் தவறில்லை .அதுவும் அவர் டிபுடி துணை அமைச்சர் . தண்ணீர் இல்லாத காட்டிற்கு போஸ்டிங் செய்யும் அதிகாரம் உள்ளவர் . இதெல்லாம் அரசாங்கதில் சகஜம்தான்


Matt P
ஜன 18, 2025 05:13

அமைச்சர் என்பவர் மக்களின் பிரதிநிதி தான். மாவட்ட ஆட்சி தலைவர் என்பவர் மாவட்டத்தின் தலைவர். குடியரசு தலைவர் நாட்டின் தலைவர். ஆளுநர் மாநிலத்தின் தலைவர். மேற்கூறப்பட்ட மூவரும் அதிகாரம் உள்ள அதிகாரிகள். அமைச்சரின் வேலை பணிகள் நேரத்தில் தொய்வின்றி நடக்கின்றதா நடக்கவில்லை என்றால் அதிகாரிகளை மக்களின் பிரதிநிதிகள் என்பதால் வேகப்படுத்துவது தான்.


நிக்கோல்தாம்சன்
ஜன 17, 2025 21:15

நேபோட்டிசம் ஒழிக


Anonymous
ஜன 17, 2025 19:32

இந்த செய்திக்கு முட்டு குடுக்க ₹200 உபீஸ் வழக்கமா வருவாங்க, எங்கே சத்தமே காணோம், வைகுண்டம், வேலா யாரும் காணோம், பாவம்........


பேசும் தமிழன்
ஜன 17, 2025 19:26

நாடகம் முடியும் வேளை தான் உச்ச காட்சி நடக்குதம்மா !!!


Anand
ஜன 17, 2025 17:34

இவனுங்க மூஞ்சி மொகரக்கட்டையை பார்த்ததும் எழுந்து சென்றிருப்பார்...


samvijayv
ஜன 17, 2025 17:15

அதிகாரம் பலமும் பண பலமும் இருந்தால், யாரை வேண்டுமெனில் அவமானம் படுத்தலாம்., ஒரு மாணுவையோ அல்லது ஒரு கோரிக்கையோ மாவட்ட ஆட்ச்சியாளரிடம் நேரடியாக வழங்க முடியுமா?, உதாரணத்திற்கு திருவள்ளூர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் கூறலாம்.


Nagendran,Erode
ஜன 17, 2025 18:47

எனக்கு வயிறு பயங்கரமாக பசித்தது அதனால புரோட்டா சாப்பிட எந்திருச்சு போனேன் அதே நேரத்தில் இன்பநிதியும் வந்துட்டாரு...


Palanisamy T
ஜன 17, 2025 16:55

1. அமைச்சர் செய்ததில் எந்த தவறுமில்லை. கலெக்டரை எழச் செய்து அந்த இடத்தில் இன்பநிதியின் நண்பரை அமரச் செய்ததிலும் தவறில்லை. நாளைய முதல்வரின் மகனான துணைமுதல்வர் இன்பநிதிக்கு இப்போதே சுயமரியாதைக் கெட்ட அமைச்சர் அவர்கள் அடிமைச் சேவைகள் செய்ய ஆரம்பித்ததிலும் தவறேதுமில்லை. தவறெல்லாம் கொடுக்கும் இலவசங்களை சும்மா வாங்கிக் கொண்டு தங்களது சுயமரியாதையை இழந்து சிந்திக்காமல் வாக்களித்த தகுதியில்லாத வாக்காளர்கள்தான் மக்கள் கொடுக்கும் வரிப் பணத்தில் இன்றைக்கே இந்த ஆட்டங்கள். சுயமரியாதை பற்றி பேசுபவர்கள் மற்றவர்களிடமும் சுயமரியாதையோடு நடந்துக் கொள்ளவேண்டும் . 2. கலெக்டருக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதைக்கு சம்பந்தப் பட்டவர்கள் மக்களிடம் தகுந்த விளக்கங்கள் கொடுப்பார்களா மக்கள்தான் எஜமானர்கள்.


RK
ஜன 17, 2025 16:37

திருட்டு திமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் மக்களே... ??????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை