உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வீட்டு கிளியானார் விஜய்; மூவர் கட்டுப்பாட்டில் கட்சி

வீட்டு கிளியானார் விஜய்; மூவர் கட்டுப்பாட்டில் கட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது தமிழக வெற்றிக் கழகம் தான்' என்ற பிரகடனத்துடன், தமிழக அரசியலில் கால் பதித்துள்ளார் நடிகர் விஜய். ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என, ஆர்வத்தோடு களம் இறங்கிய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தோர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். மேல் மட்டத்தில் இருக்கும் மூவர், விஜய் உள்ளிட்ட மொத்த கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், கட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் நிற்பதாக, புலம்பித் தீர்க்கின்றனர்.அவர்கள் மேலும் கூறியதாவது: அரசியல் ஆர்வம் காரணமாக, தன் ரசிகர்களை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு தயார்படுத்தினார் விஜய். ரசிகர் மன்றமாக இருந்ததை நற்பணி மன்றமாக்கி பின், மக்கள் மன்றமாக்கினார். அவ்வப்போது ரசிகர் மன்ற ஆட்களை சென்னைக்கு வரச்சொல்லி, அவர்களை சந்தித்து பேசுவதோடு, அவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு, பரிசுகள் கொடுத்து அனுப்பி வைத்தார்.

வேதவாக்கு

ரசிகர் மன்றத்தினரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், 'இது அரசியல் கட்சியாகும்; மன்றத்தில் இருப்போருக்கே கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும். 'போட்டியிடும் வாய்ப்பிலும் முன்னுரிமை இருக்கும். ஓய்வின்றி மக்கள் பணி செய்ய வேண்டும்' என்று உற்சாகப்படுத்தி அனுப்புவார். அதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, பலரும் கைக்காசை செலவு செய்து, இரவு, பகலாக செயல்பட்டனர். அரசியல் கட்சிகளுக்கு இணையாக, விஜய் மக்கள் மன்றம் வாயிலாக நலத்திட்ட உதவிகள் தரும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், பெரிய விளம்பரம் எதுவும் இன்றி, மக்களிடம் மன்றம் நேரடியாக போய் சேர்ந்தது.சொன்னது போலவே, விஜய் மூன்று ஆண்டுகளில் கட்சி துவக்கி விட்டார். ஆனால், மக்கள் மன்றத்தில் இருந்தோரில் ஒரு சிலருக்கு மட்டுமே பதவிகள் வழங்கி, முக்கியத்துவம் கொடுத்தார். மாநில நிர்வாகிகள் பலர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரால் வேகமாக செயல்பட முடியவில்லை. கட்சியில் இருவர் மட்டுமே பிரதானமாக இருந்து, விஜயை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.மாநில அளவில் முக்கியஸ்தராக இருக்கும் முன்னாள் மக்கள் பிரதிநிதியும், வியூகம் வகுத்துக் கொடுக்கும் நபரும் மட்டுமே, விஜய் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி, விஜயை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த இருவர் தவிர, மூன்றாவதாக ஒரு நபர் இருக்கிறார். அவர் வருமான வரித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. இவர்கள் மூவரும் என்ன நினைக்கின்றனரோ, அதை மட்டுமே விஜயால் செயல்படுத்த முடிகிறது. அதிலும் மாநில அளவில் முக்கியஸ்தராக இருக்கும் நபர், தன்னைப் பற்றி பெருமையாக நடிகர் விஜய் நினைக்க வேண்டும் என்பதற்காக, கட்சியின் கீழ் நிலையில் இருக்கும் தொண்டர்களை விட்டு கட்சி தலைமையகத்துக்கு கடிதம் எழுத வைக்கிறார்.அக்கடிதத்தில், மாநில முக்கியஸ்தரின் செயல்பாடுகளைப் புகழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதங்களை மட்டும் விஜய் பார்வைக்கு கொண்டு செல்கின்றனர். அதைப் படித்து விட்டு மாநில முக்கியஸ்தரை விஜய் ஏகமாக பாராட்டுகிறார்.

பயனில்லா யோசனை

மொத்தத்தில், சுதந்திரப் பறவையாக இருந்து, தமிழக மக்களை ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று சந்தித்து, கட்சியை வளர்க்க வேண்டிய விஜயை, வீட்டுக் கிளியாக முடக்கிப் போட்டுள்ளனர். மூவரையும் கடந்து, வெளியாட்கள் யாருமே விஜயை சந்திக்க முடியவில்லை.இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முயற்சித்தும் முடியாத நிலை உள்ளது.நாம் தமிழர் கட்சியின் பிரதான பெண் முகமாக இருந்தவர், சீமான் மீதான வெறுப்பில் த.வெ.க.,வில் இணைய முயற்சித்தார். இணைவதற்கு முன் விஜயை சந்தித்து பேச விரும்பினார். மும்மூர்த்திகள் தடை ஏற்படுத்த, அ.தி.மு.க., பக்கம் செல்லத் தயாராகி விட்டார்.இதையெல்லாம் மீறி, நாம் தமிழர் கட்சி தலைமை மீதான அதிருப்தியில் ஒதுங்கி இருந்த தலைவர் ஒருவர், விஜயை எப்படியோ சந்தித்து விட்டார். இந்தத் தகவல் மூவரணிக்குத் தெரியவர, அதற்கு உதவிய இரண்டாம் கட்டத் தலைவர்களை அழைத்து கடிந்து கொண்டுள்ளனர்.சமீபத்திய புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, நிவாரண உதவி அளிக்க விஜய் விரும்பினார். 'நீங்கள் நேரடியாக சென்றால், மக்கள் சூழ்ந்து கொள்வர்; பெரிய பிரச்னையாகி விடும்' என்று சொல்லி தடுத்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு பஸ்சில் அழைத்து வந்து, நிவாரண உதவிகளை வழங்க வைத்தனர்.இப்படித்தான் பயனில்லாத யோசனைகளை கொடுத்து வருகின்றனர். அதோடு, கட்சிக்கு மா.செ., உள்ளிட்ட நிர்வாகிகள் நியமித்து, மாநிலம் முழுதும் நிர்வாக கட்டமைப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. இப்படியே இருந்தால், வரும் 2026 சட்டசபை தேர்தலை, வலுவான கட்சியாக எதிர்கொள்ள முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Arul Selvan
பிப் 05, 2025 18:24

அப்ப dmk 2026ல் ஆட்சி அமைப்பது உறுதி. ஸ்டாலினுக்கு நல்ல தெரியும் எப்படி எதிர்க்க காட்சிகளை பிரித்தாள்வது என்பது.


Seekayyes
ஜன 08, 2025 22:05

அதான் சொன்னனே, தவெக நாளடைவில் "தவிக்க" ஆகிவிடும் என்று. ஒன்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள் கூத்தாடிகள் தங்கள் சினிமா புகழை வைத்து கொண்டு அரசியலில் பிரகாசிக்க முடியாது. குறைந்தபட்சம் 20-25 ஆண்டுகள் களப்பணி ஆற்ற வேண்டும். MGR, கருணாநதி ஏன் நரேந்தர மோடி கூட குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அரசியலில் களப்பணி ஆற்றிய பிறகே ஆளுமை செய்ய முடிந்தது. அரசியல் என்ன பீட்சாவா 30நிமிடத்தில் தயார் செய்ய.


angbu ganesh
ஜன 08, 2025 15:36

அதுக்கு பருத்தி மூட்ட அங்கேஏ இருந்திருக்கலாமே


V வைகுண்டேஸ்வரன்
ஜன 08, 2025 14:34

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, தவெக தொண்டர்கள் மற்றும் ஆதாரவாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஓட்டு போடவே வரவே மாட்டார்களா? அல்லது பணம் கொடுப்பவர்களுக்கு போடுவார்களா? தலைமை எதுவும் சொல்லவில்லையே?


Bala
ஜன 08, 2025 13:43

விஜய் சினிமாவில் வசனம் பேசுவதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.


Rajarajan
ஜன 08, 2025 12:31

நான் அப்போவே சொல்லல ? அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்னு.


Muralidharan raghavan
ஜன 08, 2025 12:06

உதயநிதி, விஜய், சீமான் மற்றும் அண்ணாமலை போன்ற அரசியல்வாதிகளில் அண்ணாமலை மட்டும் தகுதியான அரசியல்வாதியாக உள்ளார். சீமானும், அண்ணாமலையும் பத்திரிக்கையாளர்களை அடிக்கடி சந்தித்தாலும், அதிலும் நாகரிகமா பதில் சொல்லும் திறமை அண்ணாமலைக்குத்தான் உள்ளது. மற்ற இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதே இல்லை


V வைகுண்டேஸ்வரன்
ஜன 08, 2025 13:59

அண்ணாமலை நாகரிகமா? "வடக்கு தெற்கு" என்றார். "ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக வெங்காய போஸ்ட்டில் இருக்கிறேன்" என்றார். அவரோட கட்சியிலேயே பாதிப் பேருக்கு இவரைப் புடிக்காது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 08, 2025 10:37

ரெட் ஜெயண்ட் கிளவுட் நைன் சன் பிக்சர்ஸ் சன் மூவிஸ் சார்பாக திமுகவுக்கு உதவ கழக திரை அணி விஜய் துவக்கியுள்ளார் என்றே தெரிகிறது.


prasad
ஜன 08, 2025 09:54

vyugam vaguthu kudu pavar yaar...uyaramanavara..illa illa irukadhu??


Barakat Ali
ஜன 08, 2025 09:33

மீண்டும் மீண்டும் இங்கே பலர் சொல்லி வருகிறோம் ..... சொந்தக்கட்சி வெற்றிக்கனியைப் பறிப்பதற்காக விஜய் கட்சி துவக்கவில்லை.. சீமான், கமலஹாசன் வரிசையில்தான் விஜய் கட்சி துவங்கியுள்ளார். அதாவது எதிர்ப்பு வாக்குக்களைப் பிரித்து திமுகவுக்கு பெரும்பான்மை பெற்றுத்தர கட்சி துவக்கியுள்ளார்.. முதலில் அதிமுக மட்டுமே திமுகவுக்கு ஏறக்குறைய சமமான விசுவாச வாக்குவங்கியைப் பெற்றிருந்தது.. ஆனால் பாஜகவின் வளர்ச்சி மெதுவாக இருந்தாலும் உறுதியானதொன்றாகத் தொடர்கிறது ..... இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும் ..... 1. திமுகவை இவர் கொள்கைரீதியாக எதிர்க்கவில்லை .... 2. மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராடவோ, குரல் கொடுக்கவோ இவரோ அல்லது இவரது கட்சியோ முன்வராதது ... இந்த இரண்டு விஷயங்களையும் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும் .... பாஜக நினைத்தால் சில நடவடிக்கைகள் மூலம் இந்தத் தொடரை உடைக்கலாம் .... ஆனால் திமுகவுடன் சில அம்சங்களில் ரகசிய உறவு இருப்பதால் அது செய்யாது .... தமிழக பாஜகவுக்கு - அண்ணாமலையையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் - தமிழகத்தில் ஆட்சியமைக்கும் எண்ணமோ, ஆர்வமோ இல்லை ....


சமீபத்திய செய்தி