உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட விஜய் கட்சி முடிவு?

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட விஜய் கட்சி முடிவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்த இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9nod4pah&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸே போட்டியிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் நடக்கும் இந்த இடைத்தேர்தல், தி.மு.க., ஆட்சியை எடை போடும் தேர்தலாக இருக்கும் என்பதால், இத்தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி உள்ளது.இதற்காக, இப்போதே அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூத்த தலைவர்களை, ஈரோடு நோக்கி தி.மு.க., தலைமை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இடைத்தேர்தல் என்றாலே ஆட்சி, அதிகார, பண பலத்தால் ஆளும்கட்சியே வெல்லும் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் போல, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் புறக்கணிக்கலாம் என்ற முடிவுக்கு அ.தி.மு.க., தலைமை வந்திருப்பதாக கூறப்பட்டாலும், தொடர்ச்சியாக தேர்தலை புறக்கணிப்பது சரியாக இருக்காது என்று சொல்லி, அ.தி.மு.க., தலைமையை இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.அதேநேரம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டது போல, பா.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுத்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி கொங்கு பகுதியில் வருவதால், அங்கே பலமாக இருக்கும் பா.ஜ., தரப்பில் போட்டியிட விரும்புகின்றனர்.பா.ஜ.,வும், தி.மு.க.,வும் தான் தன் கட்சிக்கு சித்தாந்த ரீதியில் எதிரானவை என, கட்சி மாநாட்டின் வாயிலாக நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடவிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என நடிகர் விஜயை, கட்சியின் முன்னணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதையடுத்து, அத்தொகுதியில் த.வெ.க., சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கும் நடிகர் விஜய், கட்சியின் செல்வாக்கு குறித்து அறிய அவசர சர்வே எடுக்கச் சொல்லி இருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். -நமது நிருபர்_


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Pon Thiru
ஜன 12, 2025 16:25

இந்த கட்சி ஒரு ஆழ நிறுத்தினா .. அது சரி .. அப்புறம் அவங்க நாங்க தேர்தல சுயமா நின்னு நேர்மையா வெற்றி பெற்றோம்ன்னு சொல்ல ஒரு வசதி வாய்ப்பை ஏற்படுத்தி தர மாதிரி இருக்கு. யாருமே நிக்காம இருந்த ஈரோடு மக்களுக்குத்தான் வருமான இழப்பு ..மக்களுக்கு புரிந்தால் சரி


வல்லவன்
டிச 17, 2024 23:18

ஒரு ஆர்வக்கோளர்ல தம்பி விசய் திடுதிப்பென கட்சிய ஆரம்புச்சுட்டார். மானாட்டுல ஆக்ரோசமா பேசிட்டார். இனிமேல் சொல்லி குடுப்பதற்கு டைரக்டர் இல்லை, டப்பிங் தியேட்டர் இல்ல, ரிகர்ஷல் எடுக்க முடியாது. பாப்போம் விசய் என்ன செய்ய போறார்னு


வைகுண்டேஸ்வரன் V
டிச 17, 2024 19:50

த வெ க விற்கு ஈரோடு மாவட்ட செயலர் இன்னும் இல்லை. கட்சிக்கு சின்னம் இல்லை. வெற்றி பெருபவரின் MLA பதவி வெறும் 14 மாதத்துக்குத் தான், எனவே போட்டியிடவில்லை என்று விஜய் ஒதுங்கிடுவார். அதிமுக வும் போட்டியிடாது என்று தோன்றுகிறது.


Perumal Pillai
டிச 17, 2024 14:52

In 1973 karunanithi allowed a new born komaali katchi to win the bye election in Dindigul. And the rest is history. Hope karunanithis magan will not allow another komaali katchi to get even 5000 votes in this bye election and erode dmk in Erode.


Perumal Pillai
டிச 17, 2024 10:24

திரிஷா அல்லது சங்கவி நிற்க வேண்டும் .வெற்றி நிச்சயம் .


ராமுகப்ரபர்ட் க்ஹோசை
டிச 17, 2024 15:56

எப்படி நிற்க வேண்டும்


சம்பா
டிச 17, 2024 10:21

தலைவரே அங்கு போட்டி இடலாம்


chennai sivakumar
டிச 17, 2024 09:54

வெற்றி பெறவில்லை என்றாலும் ஓட்டு சதவீதம் தெரிந்து விடும். அதை அடிப்படையாக கொண்டு வரும் மெகா தேர்தலுக்கு தயார் படுத்தி கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு என்று கருதுகிறேன். எல்லாவற்றிலும் ரிஸ்க் இருப்பது போல இதிலும் ரிஸ்க் இருக்கிறது. ஒருக்கால் ஓட்டு சதவீதம் குறைவாக இருந்தால் கூட்டணிக்கு பேரம் சுலபமாக படியாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2024 11:17

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற பழமொழி இந்த விஷயத்தில் சரிப்பட்டு வராது ....


chinnamanibalan
டிச 17, 2024 08:10

ஈரோடு இடைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு வாழ்வா சாவா பிரச்சினை. அவ்வளவு எளிதில் எதிர்க்கட்சிகளை அங்கு வெற்றி அடைய விடப் போவதில்லை. ஒருவேளை எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரு பொது வேட்பாளரை களம் இறக்கினால், நிலைமை சற்று கடினமாக மாறக்கூடும்.


Barakat Ali
டிச 17, 2024 08:09

ஒண்ணேகால் வருடங்களே பாக்கி என்றாலும் ஆளும் தரப்பு தனக்கு செல்வாக்கு குறையலை என்று காட்ட அங்கே அதிகம் செலவு செய்ய வேண்டிவரும் ..... டிவிகே ஒதுங்கினாலும் பிரச்னை ..... நின்னு தோத்தாலும் பிரச்னை .... வெற்றிக்கோ கியாரண்டி இல்லை ....


sanjai
டிச 17, 2024 07:53

சம்பாரிச்ச ஒட்டுமொத்த பணத்தையும் இழக்க நேரிடும்.. ஆனாலும் வெற்றி கிடைக்காது.. அரசியலுக்கு வந்துவிட்டு த்ரிஷாவுடன் தனி விமானத்தில் போனதெல்லாம் விஜய் இமேஜ் damage தான்.. இன்னும் அரசியல் இலக்கணம் என்னவென்று தெரியாத இவருக்கு தப்பான யோசையை கொடுக்கிறார்கள்.. பாவம் விஜய்..


Barakat Ali
டிச 17, 2024 09:11

த்ரிஷாவுடன் தனி விமானத்தில் போனதெல்லாம் விஜய் இமேஜ் damage தான்.. நீங்க 1965 இல் இருந்து 1975 வரை வெளியான திரைப்படங்களை ஆர்வமுடன் பார்ப்பதுண்டு .... சரியா ????


Nallavanaga Viruppam
டிச 17, 2024 14:59

அடுத்த எம்ஜியரும் ஜெயா அம்மையாரும் தயாராகிட்டாங்க தமிழ்நாட்டுக்கு... என்ன ஒரு கொடுப்பினை தமிழ் நாடு மக்களுக்கு


சமீபத்திய செய்தி