உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நிதீஷ் வருகையால் பா.ஜ.,வுக்கு என்ன பயன்?

நிதீஷ் வருகையால் பா.ஜ.,வுக்கு என்ன பயன்?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், நிதீஷ் குமாருக்கு கதவுகள் அடைக்கப்பட்டு விட்டதாக பா.ஜ., ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது அவரை கூட்டணிக்குள் ஏன் பா.ஜ., சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், பா.ஜ., பெறப்போகும் பயன் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள, 'இண்டியா' கூட்டணி உருவாக முக்கியப் பங்காற்றியவர் நிதீஷ்குமார். அவரே தற்போது அந்த கூட்டணியை புறக்கணித்துவிட்டு வெளியேறுவது, பா.ஜ.,வுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.

பின்னடைவு

மேலும், பீஹாரில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் இண்டியா கூட்டணி பலமுடன் இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில், நிதீஷின் இந்த திடீர் 'பல்டி', இண்டியா கூட்டணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.நிதீஷ் குமாரை மீண்டும் கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்வதை பீஹார் பா.ஜ., தலைவர்கள் பலர் விரும்பவில்லை என்ற போதிலும், வேறு சில அரசியல் கணக்குகளுடன் பா.ஜ., தலைமை அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து முறை கூட்டணி மாறிய நிதீஷ் குமாருக்கு, பீஹாரில் மக்கள் ஆதரவு குறைந்துள்ளது.கடந்த 2010 பீஹார் சட்டசபை தேர்தலில் 115 இடங்களில் வென்ற அவரது ஐக்கிய ஜனதா தளம், 2020ல் 43 இடங்களில் மட்டுமே வென்றது. அவரை கூட்டணிக்குள் சேர்த்து, தொடர்ந்து பீஹார் முதல்வராக நீடிக்க அனுமதித்தாலும், மாநில அரசு பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் தான் செயல்படும் என்பதை அக்கட்சி தலைமை நன்கு உணர்ந்துள்ளது.இதுவும் அவரை கூட்டணிக்குள் சேர்க்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறி வந்த காரணத்தால், அவை பா.ஜ., செய்த சதியாக பார்க்கப்பட்டது.ஆனால், பீஹாரை பொறுத்தவரை பா.ஜ., மீது மக்கள் குற்றம் சொல்ல வாய்ப்பு இல்லை என்பதும் அவர்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது.இவை அனைத்தையும் தாண்டி, பீஹாரில், 2.5 சதவீத பெரும்பான்மை வகிக்கும் குர்மி இனத்தவர்கள் தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.குறிப்பாக கிழக்கு உத்தர பிரதேசத்தில் இவர்களின் ஓட்டுகள் தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கின்றன.

அழுத்தம்

உ.பி.,யில் நேரடியாக 20 லோக்சபா தொகுதிகள் குர்மி இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இனத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார் தே.ஜ., கூட்டணியில் இருப்பது, பீஹார் மற்றும் உ.பி., - பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என அக்கட்சி கணக்கு போடுகிறது.இண்டியா கூட்டணியில் இருந்து நிதீஷ் வெளியேறுவதாக அறிவித்தவுடன் அதுகுறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தள தலைவர் கே.சி.தியாகி, தொகுதிப் பங்கீட்டில் காங்., ஆதிக்கம் செலுத்துவதாகவும், மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டுவதே அவர்களது குறிக்கோளாக இருப்பதாகவும் தெரிவித்தார்.நிதீஷ் வெளியேற்றத்தை தொடர்ந்து, இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர், மாநிலங்களில் அதிக இடங்களை கேட்டு காங்., தலைமைக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது.நிதீஷை பின்பற்றி மேலும் சில மாநில கட்சிகள் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகவும் பா.ஜ., கணக்கு போடுகிறது.பல்வேறு மாநிலங்களில் எலியும் பூனையுமாக உள்ள கட்சியினர் ஒரே கூட்டணியில் இணைந்தால், அக்கூட்டணி நிலையானதாக இருக்காது என, பா.ஜ., ஆரம்பம் முதலே கூறி வருவது தற்போது உறுதியாகி உள்ளது.

என்ன கோபம்?

'இண்டியா' கூட்டணி கட்சியினர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தன்னைத் தான் கூட்டணியின் தலைவராக தேர்வு செய்வர் என நிதீஷ் குமார் நினைத்திருந்தார். ஆனால், மம்தா பானர்ஜி, ராகுல் ஆகியோரின் உள்ளடி அரசியல் காரணமாக, கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இது, நிதீஷ் குமாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த ஒரு ஆண்டாகவே, எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதில், அவர் ஆர்வம் காட்டி வந்தார். இண்டியா கூட்டணியை உருவாக்குவதற்கு அவர் தீவிரம் காட்டியதும் இது தான் காரணமாக கூறப்பட்டது.

கூட்டணி உடையும்

ஆனால், தான் நினைத்தது நடக்கவில்லை என்றதும், கூட்டணியிலிருந்து வெளியேற அவர் முடிவு செய்து விட்டார்.மேலும், லோக்சபா தேர்தலில் பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள், தலா, 17 தொகுதிகளில் போட்டியிட விரும்பின.கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு, மொத்தமாக ஐந்து இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் சூழல் நிலவியது.இதனால், கடைசி நேரத்தில் கூட்டணி உடையும் என கருதிய நிதீஷ், சுதாரித்துக் கொண்டு, முன்கூட்டியே கூட்டணியிலிருந்து கழன்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

லாலு பிரசாத் மகள் கிண்டல்

பீஹாரில், 2020 சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஆதரவுடன் கூட்டணி அரசு அமைத்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார், கருத்து வேறுபாடால் அக்கூட்டணியில் இருந்து விலகி, 2022ல், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆனார். தொடர்ந்து, லாலு மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் ஏற்பட்ட பிரச்னையால், மீண்டும் முதல்வர் பதவியை, நிதீஷ் குமார் நேற்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக, லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், 'குப்பை, குப்பைத் தொட்டிக்கு போய் விட்டது' என, நிதீஷ் குமாரை விமர்சித்துள்ளார். சமீபத்தில், சமூக வலைதளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவிலும், நிதீஷ் குமாரை கடுமையாக தாக்கி ரோஹிணி ஆச்சார்யா பதிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்தப் பதிவை அவர் நீக்கினார்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

s.sivarajan
ஜன 29, 2024 18:44

இன்னும் தேர்தலுக்குள் எத்தனை கட்சிகள் கூட்டணி மாறப்போகிறதோ


திகழ்ஓவியன்
ஜன 29, 2024 20:03

ஹிந்தி தெரியவில்லை என்றால் சென்று வாருங்கள் என்றவர் கடைசியில் ஹிந்தி திணிப்பு FACTORY க்கு வேலைக்கு சேர்ந்து விட்டார்


Sampath Kumar
ஜன 29, 2024 14:37

பச்சோந்திகள்


RAMAKRISHNAN NATESAN
ஜன 29, 2024 13:11

நிதிஷ் சரியில்லை என்றால் அவரோடு இதுவரை குலாவிய லாலுவின் ஆர் ஜெ டி கட்சி ?? பாஜக ??


Duruvesan
ஜன 29, 2024 13:00

20-25 சீட் ஜெயிக்கணும் ,அப்புறம் நிதிஷ் ஜூலை ல அரசியல் அநாதை ஆக்க படுவார் .KCR சந்திரபாபு உத்தவ் இப்போ இவரு .சங்கிய கூட இருந்து குழி பறித்தால் விளைவு அப்படி தான் இருக்கும்


Senthoora
ஜன 29, 2024 17:20

அதெப்படி தர்மபுரியில் இருந்து பிகார் களநிலவரம் பற்றி ஆருடம் சொல்வது.


abdulrahim
ஜன 29, 2024 12:47

2004 இல் இப்படித்தான் கார்கில் போர் வெற்றி மற்றும் காங்கிரசை பல காட்சிகளாக உடைத்தது நமக்கு தேர்தலில் கைகொடுக்குமென்று பாஜக கணக்கு போட்டது ஈசியாக ஜெயிக்கலாம் என இறுமாப்பில் இருந்தது ஆனால் மக்கள் பாஜகவை மண்ணை கவ்வ வைத்தார்கள் இப்பபோதும் அதுதான் நடக்கும் அதிக மிதப்பு மற்றும் காங்கிரசை குறைத்து மதிப்பிடுவது போன்றவையால் பாஜக மண்ணை கவ்வும் ....


தமிழரசன்,விழுப்புரம்
ஜன 29, 2024 14:14

இன்னும் பழைய அம்புலிமாமா கதைகளையே சொல்லிட்டு இருக்காம லேட்டஸ்ட் கதை எதையாவது சொல்லுங்க


abdulrahim
ஜன 29, 2024 15:36

பழைய கதைகள் திரும்பிய வரலாறுகள் நிறைய உண்டு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2024 19:46

@AbdulRahim, உளறக்கூடாது ..... பாஜக கூட்டணி 2004 இல் எதிர்க் கூட்டணியை உடைக்கும் அளவுக்கு வலுவானதாக இல்லை ..... அந்த மக்களவைத் தேர்தலில் தோற்றதற்கு காரணம் வேறு ...... வேறொரு விஷயம்,1999 தேர்தலில் திமுக போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெறாமல் ஆட்சியை விட்டுக்கொடுத்திருந்தால் 2009 ஆம் ஆண்டு வந்த மக்களவைத் தேர்தலிலேயே அக்கூட்டணி வென்றிருக்கும் ..... அன்றுமுதலே பாஜக அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்திருக்கும் .....


Indian
ஜன 29, 2024 10:27

பீஹார் மக்களுக்கு உண்மையாகவே அறிவு என்று இருக்குமேயானால் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையை முடித்து வைப்பார்கள்


Velan Iyengaar
ஜன 29, 2024 12:02

கூடவே BJ கட்சியையும்...சேர்த்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்


Ravichandran,Thirumayam
ஜன 29, 2024 14:15

நீங்க ரெண்டு பேரும் கொரில்லா செல் ரூம் மேட்டா?????


Velan Iyengaar
ஜன 29, 2024 09:49

இந்த ரெண்டு கட்சிக்கும் மக்கள் மத்தியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்


Duruvesan
ஜன 29, 2024 12:50

கரெக்ட் பாய் விடியலின் கூட்டணி 450 சீட் ஜெயிச்சி விடியல் பிரதமர் ஆவது உறுதி


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2024 07:52

பீகார் மக்களும் டுமீலன்ஸ் போலத்தான் ...... நம்மள வெச்சு காமெடி பண்ணுறாய்ங்க ன்னு புரிஞ்சுக்கத் தெரியாத ஜென்மங்கள் ......


Senthoora
ஜன 29, 2024 12:29

ஒருவேளை லாலுவுக்கு எதிராக விழும் ஓட்டுக்களை, EVM எதிராக மாற்றி வெற்றிக்கு துணையாக இருக்கும். மொத்தத்தி அரசியல் சாக்கடை.


அன்பழகன்,பல்லாவரம்
ஜன 29, 2024 14:17

நீ புரிஞ்சு பேசுகிற பெரிய அறிவாளிதான் போவியா...


Godyes
ஜன 29, 2024 07:18

லாலு ஊழலில் திகழ்ந்தவர். அவர் மகள் எப்படி இருப்பாள்.


Senthoora
ஜன 29, 2024 12:24

ஊழலை மறைக்க பிஜேபியுடன் கூட்டு சேர்ந்தார், இப்போ எந்தக்கட்சி ஊழல் கட்சி.


Godyes
ஜன 29, 2024 07:16

நிதிஷ்குமார் சிங்கிளாக வரவில்லை.பெருவாரி மக்களை திரட்டி வருகிறார்.


Senthoora
ஜன 29, 2024 12:27

உண்மை, லாலு கட்சி மாறினார் என்றால் அவரின் அதரவாளர்களும் மாறுவார்கள் என்று என்ன நிச்சயம்.


Duruvesan
ஜன 29, 2024 12:52

,ஜூன் அல்லது ஜூலை வரை தான் நிதிஷ் ஆட்சி இருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை