உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இ.சி.ஆரில் பெண்கள் காரை துரத்தியது ஏன்? கைதானவர் சொல்லும் கதை

இ.சி.ஆரில் பெண்கள் காரை துரத்தியது ஏன்? கைதானவர் சொல்லும் கதை

சென்னை : ''என் கூட்டாளி சந்தோஷ் பிடிக்கச்சொன்னதால், இ.சி.ஆரில், பெண்களை காரில் துரத்தினேன்,'' என, கைதான சந்துரு வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை, இ.சி.ஆரில், அதிகாலை, 2:00 மணியளவில், டாடா சபாரி கார் மற்றும் மஹிந்திரா தார் ஜீப்பில், மற்றொரு காரில் சென்ற பெண்களை துரத்தியது தொடர்பாக, கானத்துார் போலீசார் கல்லுாரி மாணவர்கள் உட்பட, ஐந்து பேரை கைது செய்துஉள்ளனர்.

கடத்தல் வழக்கு

அவர்களில், இரும்புலியூரைச் சேர்ந்த சந்துரு, 26 என்பவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:சென்னை பீர்க்கங்காரணையைச் சேர்ந்த சந்தோஷ், 28, என்பவரும் நானும் கூட்டாளிகள். நான் பொறியியல் படித்துள்ளேன். மொபைல் போன் கடை நடத்தி வந்தேன். அதில், ஒரு பிரச்னை ஏற்பட்டு கைதாகி சிறைக்கு சென்றேன். வெளியே வந்த பின், என் கூட்டாளிகள் சிலர், எங்கள் வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒருவரை கடத்தி பணம் பறித்து, என் வங்கி கணக்கில் செலுத்தினர். இதனால், அந்த கடத்தல் வழக்கிலும் கைதாகி சிறைக்கு சென்று வந்தேன். அதில் ஜாமின் கிடைத்ததும், பழைய கார், பைக் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன்.இதே தொழில் செய்யும் இரும்புலியூர் சந்தோஷ் அறிமுகம் கிடைத்தது. அவர் அந்த பகுதியில் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தார். பொத்தேரி கல்லுாரி மாணவர்கள் பிரச்னையில் சிக்கும் போது நாங்கள் இருவரும் பஞ்சாயத்து செய்வோம். என்னை தேடி, மஹிந்திரா தார் ஜீப்பில், சந்தோஷ் மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர் வந்தனர்.

வாக்குவாதம்

நானும் மாணவர்கள் மூவரும் டாடா சபாரியிலும், சந்தோஷ் மற்றும் 2 மாணவர்கள் ஜீப்பிலும் கோவளத்துக்கு இ.சி.ஆர்., வழியாக சென்றோம். முட்டுக்காடு சென்ற போது, சந்தோஷ் மொபைல் போனில் அழைத்தார். நம் காரை இடித்து விட்டு, கார் ஒன்று நிற்காமல் செல்கிறது. அதை பிடி என்றார். நானும் அந்த காரை துரத்தி சென்றேன். பாலத்தில் அந்த காரை மடக்கி குறுக்கே நிறுத்தினேன். அந்த காரில் இருந்த பெண்கள் அதற்குள் ரிவர்ஸ் எடுத்து, கானத்துார் சென்று விட்டனர். நானும் வீடு வரை துரத்தினேன். சந்தோஷும் வந்துவிட்டார். பெண்களிடம் வாக்குவாதம் செய்தோம். அப்போது, நான் சொன்னது இவர்களின் காரை அல்ல; அதனால், அவர்களிடம் மன்னிப்பு கேள் என சந்தோஷ் கூறினார். நானும் மன்னிப்பு கேட்டேன்.போக்குவரத்து போலீசாரிடம் கெத்து காட்டவும், சுங்க சாவடியில் கட்டணம் செலுத்தாமல் போகவும் தான், காரில் தி.மு.க., கொடி கட்ட சந்தோஷ் சொன்னார். அதன்படி கட்டினேன். நான் எந்த கட்சியிலும் இல்லை. என் தாத்தா, எம்.ஜி.ஆரிடம் டிரைவராக இருந்தார். என் மாமா செந்தில்குமார், தாம்பரம் பகுதியில் அ.தி.மு.க., நிர்வாகி. இவ்வாறு சந்துரு வாக்கு மூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

KRISHNAN R
பிப் 08, 2025 10:47

சொல்ல வேண்டிய பாடம் போல


ponssasi
பிப் 04, 2025 16:46

எந்த கட்சிகாரனாக இருந்தாலும் தவறு செய்தால் நிச்சியம் தண்டனை அனுபவிக்கவேண்டும். சமீபகாலமாக என்சாதிகாரன் தவறுசெய்யமாட்டான், தவறு செய்தவன் என் கட்சிக்காரன் இல்லை எனும் போக்கு அதிகரித்துவருகிறது. ஆனால் திமுக குற்றவாளிக்கு முட்டு கொடுக்குமளவுக்கு வேறு கட்சி தலைவர்கள் யாரும் முட்டுக்கொடுப்பதில்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.


Mohanadas Murugaiyan
பிப் 04, 2025 21:23

முன்பு பிஜேபி காரர்கள் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி, மாட்டிக்கொண்டு அவமானப் பட்டனர் இப்போது அதிமுக எவ்வளவு அசிங்கப் பட்டாலும் துடைத்துக் கொண்டு முட்டு கொடுப்பதை எப்படி மாற்றிக் கொள்ள முடியும்?


Chandrasekaran Sriram
பிப் 04, 2025 05:48

கொஞ்சம் கூட உண்மைகலப்பில்லாத பொய்


Raj S
பிப் 03, 2025 23:14

ரெண்டு கார்ல போனாங்க... முன்னாடி போன கார்ல இடிச்சது அவங்க போன் பண்ணி சொன்ன அப்பறம் தான் தெரிஞ்சுது... போன் பண்ணவனுக்கு இவங்க எங்க வராங்க இடிச்ச காரை பிடிக்க முடியுமான்னு தெரிஞ்சிருக்கு... அதெல்லாம் விட இவன் போய் அந்த காரை மடக்கி அப்பறம் அவங்க வீடு வரைக்கும் போன அப்பறம் தான் இன்னொரு கார் வந்து இவங்க இல்ல இடிச்சதுனு சொன்னாங்க... திருட்டு திராவிட கோபாலபுர கும்பலின் அறிவு அடேங்கப்பா... இந்த கதையை ஆறாவது படிக்கிற பசங்க கிட்ட சொன்னாகூட காரி துப்புவான்...


Mohanadas Murugaiyan
பிப் 04, 2025 21:29

திமுக மீது பழி போட அறிவில்லாமல் எதையாவது செய்து மாட்டிக்கொண்டு முழிப்பதே இவர்கள் பிழைப்பாகி விட்டது பிஜேபி காரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச இவர்களே ஆள் அனுப்புவார்கள் பிறகு அவனை இவர்களே ஜாமீனில் எடுப்பார்கள் அவனையே கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச அனுப்புவார்கள் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூப்பாடு போடுவார்கள் ஆனால் மூளையுள்ள தமிழர்கள் யாரும் அவர்களை நம்பமாட்டார்கள்


Raj S
பிப் 05, 2025 03:47

ஏங்க டாஸ்மாக் பகுத்தறிவாளி மோகனதாஸ் முருகையன், கொஞ்சம் நான் என்ன சொன்னேன் அதுக்கும் உங்க வாந்திக்கும் என்ன சம்மந்தம்னு யோசிங்க... நான் சொன்னது இங்க போட்டு இருக்கற நியூஸ் பத்தி... நீங்க பிதற்றது வேற எதையோ பத்தி... ஒரு குடும்பத்துக்கு மட்டும் கொத்தடிமையா இருந்து, திருட்டு திராவிடனை திட்டறவனெல்லாம் பிஜேபி காரன்னு பயத்தோட அலையாதீங்க...


vijay
பிப் 07, 2025 12:59

சரியா சொன்னீங்க. நம்ம முன் மாதிரி ஆட்கள் ஏன்தான் எதுக்கெடுத்தாலும் பொய்யால கட்டமைக்கப்பட்ட திராவிடம் என்றால் திராவிடம் என்ன என்று அதன் தலைவருக்கே தெரியாத விளங்காத திராவிட பொய்யிற்கு, மாயைக்கு அதற்கு முட்டுக் கொடுக்க வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வராங்க என்றே தெரியல, புரியல. இதுல அரண்டவன் கண்ணுக்குஇருண்டதெல்லாம் பேய்செஞ்சு மாட்டிக்கொண்டாலும் செஞ்சாலும் அதை எல்லாம் பிஜேபி, ஆர்எஸ்எஸ் -தான் செஞ்சுது என்று கம்பு சுத்திகிட்டு வாரங்க. கொஞ்சம் கூட மண்டைக்குள் இருப்பதை பயன்படுத்தறதே இல்லைங்கோ, அது சரி மண்டைக்குள் ஏதாச்சும் இருந்தாதான் பயன்படுத்த முடியும். சட்டியில் இருந்தால் தானுங்க அகப்பையில் வரும். அவங்கள குறை சொல்லியும் ஒன்னும் ஆகப்போறதில்லை.


Karve cbe
பிப் 03, 2025 22:20

கைது செய்தால் போலீஸ் விசாரணையிலோ, நீதிமன்ற விசாரணையிலோ வாக்குமூலம் வாங்குவார்கள்.. இப்ப என்னடா போலீசே பேட்டி எடுத்து ரிலீஸ் பன்றாங்க.. இதுவும் திராவிட மாடலா ????!!!!


நிக்கோல்தாம்சன்
பிப் 03, 2025 21:35

நம்பிடுங்கப்பா ,


partha
பிப் 03, 2025 21:25

என்னங்கப்பா இது நியாயம் அரசியல் கட்சியில் இருந்தால் சுங்கச்சாவடி வரி செலுத்த தேவையில்லையா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கும் குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் போன்றவர்கள் தான் கட்டம் செலுத்த தேவையில்லை என நினைக்கிறேன். கட்டுங்க கதையை நல்லா கட்டுங்க...


Balasubramanian
பிப் 03, 2025 18:57

நல்ல வேளை தான் ஒரு சங்கீ என்று சொல்லவில்லை இந்தக் கிளி


முருகன்
பிப் 03, 2025 18:44

இனி நாட்டில் குற்றம் செய்பவர்கள் சொல்வது அனைத்தும் கதை ஆகும்


என்றும் இந்தியன்
பிப் 03, 2025 16:14

திரைக்கதை வசனம் திருட்டு திராவிட அறிவிலி அரசு அடிமை ஏவல் துறை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை