உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாரத் தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு வருமா?

பாரத் தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு வருமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: பாரத் அரிசி, பாரத் ஆட்டா (மாவு) போல மத்திய அரசு தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை கொள்முதல் செய்து பாரத் தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என தமிழக தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இந்தியாவில் 22 மாநிலங்களில் ஒரு கோடியே 10 லட்சம் தென்னை விவசாயிகள் உள்ளனர். தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மட்டும் 80 சதவீத தேங்காய் உற்பத்தி ஆகிறது. இது உள்நாட்டு எண்ணெய் வித்து என்பதால் மத்திய அரசு பாரத் தேங்காய் எண்ணெய்யாக விற்பனை செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ஈசன் முருகசாமி, பாரதிய கிசான் சங்க தேசிய துணைத்தலைவர் பெருமாள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் முப்பது ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பாமாயில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மாதம் குறைந்தபட்சம் 2 கோடி லிட்டர் பாமாயில் இறக்குமதி ஆகிறது. ஒரு லிட்டர் ரூ.100க்கு வாங்கி கார்டுதாரர்களுக்கு ரூ.25க்கு அரசு விற்கிறது. மீதி ரூ.75 மக்களின் வரிப்பணத்தில் இருந்து மானியமாக வெளிநாட்டு வியாபாரிகளுக்கு போகிறது.தமிழகத்தில் ஆண்டுக்கு 10 கோடி லிட்டர் தேங்காய் எண்ணெய்யும், கடலை எண்ணெய்யையும் சேர்த்தால் 24 கோடி லிட்டர் எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே உள்நாட்டு தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்க்கு மானியம் தரும் வகையில் அரசு திட்டத்தை நெறிமுறைப்படுத்த வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் வாங்கி ரேஷன் கடையில் விற்பனை செய்தால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். ஒரு மாதம் பாமாயில் அடுத்த மாதம் தேங்காய் எண்ணெய் என வழங்கினால் தென்னை சாகுபடி பரப்பு அதிகரிக்கும்.

பாரத் தேங்காய் எண்ணெய்

மத்திய அரசு கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.111.60 நிர்ணயித்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது. ஆனால் 30 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்வதால் மீதி 70 சதவீத கொப்பரை காய்களுக்கு வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.80 ஐ விட குறைந்த விலையே கிடைக்கிறது.மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொப்பரை காய்களை டன் கணக்கில் வெளி மார்க்கெட்டில் குறைந்தபட்ச ஏலத்திற்கு விற்பனை செய்கிறது. அதற்கு பதிலாக தேசிய 'நாபெட்' நிறுவனம் மூலம் கொப்பரையைப் பெற்று அவற்றை தேங்காய் எண்ணெய்யாக உற்பத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் பாரத் அரிசி, பாரத் ஆட்டா, பாரத் சன்னா, பாரத் வெங்காயம் என்பது போல பாரத் தேங்காய் எண்ணெய் என 100 மில்லி தேங்காய் எண்ணெய் ரூ.20க்கு விற்கலாம். மத்திய மாநில அரசுகள் உதவினால் தமிழகத் தென்னை விவசாயிகளால் உற்பத்தியை பெருக்க முடியும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

T.sthivinayagam
பிப் 10, 2024 21:52

பாமாயில போல தேங்காய் எண்ணையும் தரமுடியும் என்று மக்கள் கூறுகின்றனர்


vbs manian
பிப் 10, 2024 19:25

சிறந்த ஆலோசனை. அரிசி கோதுமைக்கு கொடுக்கும் முக்கியத்வம் என்னை வித்து கொப்பரைக்கு கொடுப்பதில்லை.


S.kausalya
பிப் 10, 2024 17:43

மத்திய அரசு,, இவர்களுக்கு பயன் அளிக்கும் விதமாக தேங்காய் எண்ணெய் வாங்கி bharath எண்ணெய் என மக்களுக்கு குறைந்த விலையில் viniyogam செய்தாலும் இரு சாராரும் ஒட்டு போடபோவது என்னவோ திராவிடத் கட்சிக்கு தான்.


sahayadhas
பிப் 10, 2024 14:57

தென்மாநில பயிர்களை அங்கிகரிக்க மாட்டார்.


NALAM VIRUMBI
பிப் 10, 2024 11:25

அருமையான யோசனை தமிழக தென்னை விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.


jam
பிப் 10, 2024 16:35

பாரத் பெட்ரோல், டீசல், காஸ், டோல் கேட்,


Suresh Rajah
பிப் 10, 2024 11:16

இதை நமோ செயலியில் பதிவிடுங்கள்...


S. Gopalakrishnan
பிப் 10, 2024 10:51

மத்திய அரசு வீடுகளில் குடிநீர் தரும் கழிப்பறை கட்டித் தரும் கிராமத்தில் சாலை வசதி, வீட்டு வசதி செய்து தரும் ! மாநில அரசு "உங்கள் அப்பன் வீட்டு காசா ?" என்று தெருச்சண்டை போடும் !


S.F. Nadar
பிப் 10, 2024 13:49

00


ஆரூர் ரங்
பிப் 10, 2024 10:38

இளநீரில் சீனி போட்டிருக்கிறீங்களா என???? சந்தேகம் எழுப்பும் விளக்கெண்ணெய் மாநில அரசிடம் இதை எதிர்பார்க்கக் கூடாது. மத்திய அரசு செய்யலாம் என்றால் நாடு முழுவதும் விற்க போதுமான உற்பத்தி சாத்தியமில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 10, 2024 18:01

இளநீரில் அல்ல ....... பதநீரில் ......


T.sthivinayagam
பிப் 10, 2024 10:19

பாமயிலை போல தேங்காய் எண்ணையும் தரமுடியும் என்று மக்கள் கூறுகின்றனர்


sahayadhas
பிப் 10, 2024 09:56

தென்னிந்திய பயிரை அங்கிகரிப்படாது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ