உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விதி மீறல்கள் மீது நடவடிக்கை சிந்தனையாளர் பேரவை மனு

விதி மீறல்கள் மீது நடவடிக்கை சிந்தனையாளர் பேரவை மனு

புதுச்சேரி : சாலை விதிமுறை மீறல்களை தடுத்து நிறுத்திட முதல்வர் உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை தலைவர் செல்வம் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவர் முதல்வரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை, சுப்பையா சிலைகள் அருகே உள்ள சாலைகளில், வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்படும் திசைகளிலிருந்து வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். மேலும் சாலையின் ஓரத்தில் முறையற்று நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூராக உள்ளது. எனவே இது போன்ற விதி மீறல்களைத் தடுத்து நிறுத்திட காவல் துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை