மேலும் செய்திகள்
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்; சிங்கப்பூர் முதலிடம்
43 minutes ago
இளைஞர்கள் தேசப்பற்றுடன் சரியான பாதையில் செல்ல வேண்டும்;ராணுவ தளபதி
2 hour(s) ago | 1
பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்வு
2 hour(s) ago | 5
புதுச்சேரி : ஆதார் கார்டில் திரட்டப்பட்ட விபரங்களை காஸ் சிலிண்டர் நிறுவனங்கள் ஒப்பிட்டு பார்த்து போலி சிலிண்டர்களை கண்டறிய வேண்டும் என குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் பிரியதர்ஷினி பேசினார்.எஸ்.எம்.எஸ்., மூலம் சிலிண்டர் பதிவு செய்யும் அறிமுக விழாவில் அவர் பேசியதாவது:காஸ் சிலிண்டர் 378 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் டெலிவரி சேவையும் உள்ளடக்கம். ஆனால் நடைமுறையில் டெலிவரி செய்யும் போது 400 ரூபாய் வரை கறந்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி டெலிவரி செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் உள்ளனர். இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆகவே காஸ் சிலிண்டர் வினியோகிஸ்தர்கள் இது சம்பந்தமாக டெலிவரி செய்பவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். காஸ் சிலிண்டருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதல் விலையை வசூலிக்கக் கூடாது.
புதுச்சேரியில் ஆதார் கார்டு பதிவு இன்னும் ஒரு ஆண்டில் இப்பணியில் முடிவடைந்து விடும். இப்பணி முடிவடையும் போது இந்தியாவிலேயே ஆதார் கார்டு செயல்படுத்திய முதல் மாநிலமாக புதுச்சேரி திகழும். ஆதார் கார்டு பதிவு செய்யும்போது வீடுகளில் உள்ள காஸ் சிலிண்டர் குறித்த தகவல்கள் திரட்டி உள்ளோம். இதனை காஸ் சிலிண்டர் நிறுவனங்கள் பெற்று ஒன்றுக்குமேற்பட்ட போலி சிலிண்டர்களைப் கண்டுபிடிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
43 minutes ago
2 hour(s) ago | 1
2 hour(s) ago | 5