மேலும் செய்திகள்
லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ்., கைது
1 minutes ago
நாட்டின் மொத்த முதலீடு அறிவிப்புகளில் ஆந்திரா முதலிடம்
12 minutes ago
இந்தூர் இறப்புகள்: கடும் கோபத்தில் மோடி!
44 minutes ago
மார்கழி வழிபாடு:திருப்பாவை,திருவெம்பாவை-20
1 hour(s) ago
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் தேர் திருவிழாவில் கவர்னர் இக்பால்சிங், முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் தேர் திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. கவர்னர் இக்பால்சிங், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் தியாகராஜன், வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
விழாவில் துணை கலெக் டர் அருணாச்சலம், தாசில்தார் தயாளன், என்.ஆர். மக்கள் பணி இயக்க தலைவர் தனவேல், ராமு, சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். என்.ஆர். மக்கள் பணி இயக்கம், மூலநாதர் மினிலோடு கேரியர் உரிமையாளர் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தனி அதிகாரி தாசில்தார் பிரபாகரன், நிர்வாக அதிகாரி பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
1 minutes ago
12 minutes ago
44 minutes ago
1 hour(s) ago