உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரம்மோற்சவ விழா துவக்கம்

பிரம்மோற்சவ விழா துவக்கம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா நேற்று காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வரும் 24ம் தேதி வரை தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான பர்வதவர்தினி ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் வரும் 19ம் தேதி இரவு 7.00 மணிக்கு நடக்கிறது. வரும் 21ம் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் 24ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ