உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கறவை மாடுகளுக்கு கருவூட்டல் முகாம் 

கறவை மாடுகளுக்கு கருவூட்டல் முகாம் 

பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில் கறவை மாடுகளுக்கு கருவூட்டல் சிறப்பு முகாம் நடந்தது. புதுச்சேரி கால்நடை பராமறிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் குருவிநத்தம் கால்நடை மருத்துவ மனை வளாகத்தில் கறவை மாடுகளுக்கு கருவூட்டல் சிறப்பு முகாம் நடந்தது.பாகூர் கால்நடை மருத்துவமனை டாக்டர் சம்பத்குமார், பாண்லே கால்நடை மருத்துவர் வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டு, செயற்கை முறை கருவூட்டல் நன்மைகள், கன்று பராமரிப்பு முறைகள், தீவன மேலாண்மை, சினைப்பருவம், பேறுகால மேலாண்மை குறித்து விளக்கினர்.முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு கறவை மாடுகளுக்கான தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. இம்முகாமில், குருவிநத்தம், இருளஞ்சந்தை, சோரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் கால்நடைகளை பங்கேற்க செய்து பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை