உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சத்குரு ராமபரதேசி சுவாமிகள் மகா குரு  பூஜை

சத்குரு ராமபரதேசி சுவாமிகள் மகா குரு  பூஜை

வில்லியனுார் : வில்லியனுார் சத்குரு ராமபரதேசி சுவாமிகள் மகா குரு பூஜை விழா நேற்று நடந்தது. வில்லியனுார் பைபாஸ் எம்.ஜி.ஆர் சிலை அருகே சத்குரு ராமபரதேசி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. சத்குரு ராமபரதேசி சுவாமிகள் 157 ஆம் ஆண்டு மகா குரு பூஜை விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலையில் சிறப்பு அபிேஷகமும், மாலை 6:00 மணியளவில் ராமபரதேசி சுவாமிகள் திருவுருவப்படம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் இசை முழங்க வில்லியனுார் மாட வீதியுலா நடந்தது. நேற்று காலை 6:00 மணியளவில் அரும்பார்த்தபுரம் சமரச சுத்த சன்மார்க்க சக்திய ஆன்மீக வழிபாட்டுச் சபையினரின் பாராயணமும், காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷகமும் அதனை தொடர்ந்து பகல் 12:00 மணியளவில் மகா குரு பூஜையும், அன்னப்பிரசாதமும், மாலை 6:00 மணியளவில் பக்தி இசை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சத்குரு ராமபரதேசி சுவாமிகள் சேவா டிரஸ்டினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ