உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்று ஓட்டு எண்ணிக்கை போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

இன்று ஓட்டு எண்ணிக்கை போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

அரியாங்குப்பம் : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடப்பதையொட்டி, பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை போலீசார் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. தேர்தலில், 78.90 சதவீத ஓட்டுகள் பதிவாகியது. ஓட்டுப்பெட்டிகள், ஓட்டு எண்ணும் மையங்களான புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு பொறியல் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.அதே போல காரைக்கால், மாகி, ஏனாமில் ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ஒட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று மாலை 6:00 மணியளவில், தெற்கு எஸ்.பி., பக்தவச்சலம் முன்னிலையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர். அரியாங்குப்பம் பிரம்மன் சிலை இருந்து வீராம்பட்டினம் சாலை வழியாக ஆர்.கே., நகர் பகுதியில் ஒத்திகை நடத்தினர்.போலீசார் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை