உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

புதுச்சேரி: செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 பொதுத்தேர்வில், சாதித்த மாணவ - மாணவியரை, செல்வ கணபதி எம்.பி., பாராட்டினார்.செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய, 215 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.மாணவர் கவுதம், 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவி தமயந்தி 579 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம் இடம், தர்ஷினி 578 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.500க்கு மேல் 50 பேர், 450க்கு மேல் 46 பேர், 400க்கு மேல் 60 பேர் மதிப்பெண்கள் பெற்றனர். மேலும் உயிரியல் -1; வேதியியல் - 1; கணிப்பொறி அறிவியல் - 2; கணக்குப்பதிவியல் - 1; பொருளியல் -1; வணிக கணிதம் -1; பாடங்களில் மாணவர்கள் 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றனர்.அவர்களை விவேகானந்தா கல்வி குழும தாளாளர் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வர் பத்மா மற்றும் பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ