உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காலாப்பட்டு கடற்கரையில் 1.2 டன் குப்பைகள் அகற்றம்

காலாப்பட்டு கடற்கரையில் 1.2 டன் குப்பைகள் அகற்றம்

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி சார்பில், காலாப்பட்டு கடற்கரை பகுதிகளில் சிறப்பு துப்புரவு பணி மூலம், 1.2 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி சார்பில், உலக கடற்கரை தினத்தை முன்னிட்டு பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு கடற்கரை பகுதிகளில் சிறப்பு துப்புரவு பணி நேற்று நடந்தது. துப்புரவு பணியினை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் கிளமெண்ட் லுார்து மற்றும் தனியார் நிறுவன மேலாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கடற்கரை துாய்மை பாதுகாப்போம் என, உறுதிமொழி ஏற்றனர். பின், கடற்கரை பகுதியை சுத்தம் செய்து, சுமார் 1.2 டன் குப்பைகளை அகற்றினர்.மேலும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறும், நெகிழியால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆணையர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை