உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

புதுச்சேரி : உருளையான்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர்.அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், பள்ளி நேலியனுரைச் சேர்ந்த ராகதேவன், 18; வானுார், வாழபட்டம்பாளையம் பிரகாஷ் 21, என்பதும், இவர்கள் மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இருவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி