உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

விழுப்புரம் : வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கடிப்பாக்கம்-இருவேல்பட்டு தரைப்பாலத்தில் கடந்த மே 14ம் தேதி நடந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக பண்ருட்டி குச்சிப்பாளையம் குணசேகரன் மகன் சிவா (எ) நல்லசிவம்,22; பண்ருட்டி காத்தவராயன் மகன் அருண்,21; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் மீது பைக் திருட்டு வழக்குகள் பல நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இவர்களின் தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., தீபக் சிவாச் பரிந்துரையை ஏற்று இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள சிவா மற்றும் அருண் ஆகியோரிடம் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்