உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரியில் டயர், பேட்டரி திருடிய 3 பேர் கைது

லாரியில் டயர், பேட்டரி திருடிய 3 பேர் கைது

காரைக்கால்: காரைக்காலில் ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் டயர் மற்றும் பேட்டரிகளை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால், மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால்; தனியார் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி சூப்பர்வைசர். இவரது கட்டுப்பாட்டில் உள்ள லாரியை தனியார் கப்பல் துறைமுகத்தில் வாடகைக்கு விட்டு உள்ளார். லாரியை பராமரிப்பு பணிக்காக கடந்த 13ம் தேதி வாஞ்சூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஒர்க் ஷாப்பில் ராஜகோபால் விட்டிருந்தார். மறுநாள் ஒர்க் ஷாப்பில் வேலை செய்யும் கோபி என்பவர் ராஜகோபாலுக்கு போன் செய்து, லாரியில் உள்ள நான்கு டயர் மற்றும் இரண்டு பேட்டரிகளை காணவில்லை என, தெரிவித்தார்.இது குறித்து ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில், திருப்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு டயர் மற்றும் இரண்டு பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை தேடினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி., காட்சிகளை ஆய்வு செய்ததில், திருவாரூர் வலங்கைமான் பகுதியை சேர்ந்த வசந்த், 22; பாலமுருகன், 20; திவாகர், 30, ஆகியோர் திருடியது தெரிய வந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, டயர் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை