உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / படகு குழாமில் ரூ.34 லட்சம் வருவாய்

படகு குழாமில் ரூ.34 லட்சம் வருவாய்

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாமில் தொடர் விடுமுறையில், 34 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.வெளி மாநில சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவது நோணாங்குப்பம் படகு குழாம். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை படகு சவாரி செய்யவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் படகு குழாமில் கூட்டம் அலை மோதும்.இந்நிலையில், கடந்த 15 மற்றும் 16ம் தேதி சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிறு என தொடந்து 4 நாட்கள் விடுமுறையால், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படகு குழாமில் குவிந்தனர். போதிய படகு இல்லாததால், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சவாரி செய்தனர்.நோணாங்குப்பம் படகு குழாமிற்கு வந்த சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களால் அப்பகுதியில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடந்த 4 நாட்களில், படகு குழாமிற்கு 34 லட்சம் வருவாய் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை