உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதித்யா ஐ.ஏ.எஸ்., அகாடமியில் 3ம் கட்ட கோடை பயிற்சி முகாம்

ஆதித்யா ஐ.ஏ.எஸ்., அகாடமியில் 3ம் கட்ட கோடை பயிற்சி முகாம்

புதுச்சேரி : புதுச்சேரி ஆதித்யா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ்., அகாடமி கோடைக்கால பயிற்சி முகாமின் மூன்றாம் கட்ட நிகழ்ச்சி நடந்தது. ஆதித்யா கல்விக்குழும நிறுவனர் ஆனந்தன், கல்லுாரி தாளாளர் அசோக் ஆனந்த், வித்ய நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் தலைமை தாங்கினர்.முகாமில் காவல் துறை எஸ்.பி., பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:மாணவர்கள் கற்றலில் யதார்த்தம், புரிந்துணர்வு, ஈடுபாடு, ஆர்வம் அனைத்திலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தாய்மையே நமது கலாசாரம். உறவுகளை அரவணைக்க வேண்டும். யோகா, தியானம், ஜிம்னாஸ்டிக், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் பேன வேண்டும்.எங்கு சென்றாலும் அந்த சூழலுக்கு ஏற்ப மன அழுத்தமின்றி தன்னை தகவமைத்து கொள்ளுதல் வேண்டும். கலந்தரையாடல் வழியே கற்றல் எளிமையாகும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிக்க வேண்டும் என்று படிக்காமல் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் படித்தால் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று சாதிக்கலாம்.திட்டங்களை செயல்படுத்த கூடிய அதிகாரம் ஐ.ஏ.எஸ்., பதவிக்கு உண்டு. சிவில் சர்வீசஸ் பணிக்கு எழுத நாட்டையும், பிற நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை