மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி : இரண்டு மாத பென்ஷன் தொகையாக 8,965 மீனவ முதியோர்களுக்கு 4.98 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.மீனவ சமுதாய குடும்பங்களுக்கு முதியோர் பென்ஷன், மீன்வளத் துறை மூலம் வழங்கப்படுகிறது. 50 முதல் 59 வயதிற்குட்பட்ட மீனவர்களுக்கு மாதம் 2,500 ரூபாய், 60 முதல் 79 வயது வரை 3 ஆயிரம், 80 வயதிற்கு மேல் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இத்தொகை லோக்சபா தேர்தல் காரணமாக மார்ச் மாதம் வழங்கவில்லை. சமூக நலத்துறையில் தேர்தல் நேரத்திலும் முதியோர் பென்ஷன் தடையின்றி வழங்கப்பட்டது.தேர்தல் முடிந்தும் கூட மீனவர் நலத்துறையில் தேர்தல் விதிகளை காட்டி முதியோர் பென்ஷன் இரண்டு மாதமாக பென்ஷன் வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த இரண்டு மாதங்களுக்கான பென்ஷன் தொகை நேற்று வங்கி கணக்கில் வரவு வைத்து மீன்வளத்துறை உத்தரவிட்டது.இது குறித்து மீன்வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் செய்திக்குறிப்பு:மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மாதந்தோறும் மீனவ முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையானது மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு மொத் தம் 4 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம் 8,965 பேர் பயனடைவர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago