உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 5 புதிய தீயணைப்பு நிலையங்கள்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

5 புதிய தீயணைப்பு நிலையங்கள்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி : தீயணைப்பு துறைக்கு நவீன ரோபோட்டிக் தீயணைப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்படும் என, பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.பட்ஜெட்டில் தீயணைப்பு துறையின் முக்கிய அறிவிப்புகள்:பொதுமக்களின் உயிர் காக்கும் தீயணைப்பு துறை நவீனப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தீயணைப்பு துறையில் 33 சதவீத பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க கடந்தாண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த காலி பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பப்படும். புதுச்சேரி, வில்லியனுார், தவளக்குப்பம், லிங்காரெட்டிப்பாளையம், கரையாம்புத்துார் ஆகிய இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தீயணைப்பு நிலையங்களுக்கு தேவையான பணியிடங்கள் உருவாக்கப்படும்.கோரிமேடு பகுதியில் கோட்ட தீயணைப்பு அதிகாரி அலுவலகம் கட்டப்படும். தீயணைப்பு துறைக்கு நவீன ரோபோட்டிக் தீயணைப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்படும். ஐந்து சிறிய தீயணைப்பு வாகனம், மூன்று வாட்டர் பவுசர் இந்த நிதியாண்டு கொள்முதல் செய்யப்படும். தீயணைப்பு துறைக்கு பட்ஜெட்டில் 31.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ